தனிக்கட்சி ஏன்?
மக்களுக்கு என்ன தேவை என்பதை, கட்சி பிரதிபலிக்க வேண்டும். ஆனால், காங்கிரஸ் இதற்கு எதிர்மறையாக உள்ளது. காங்., உடன், என் கட்சி கூட்டணி வைக்க வாய்ப்பு இல்லை.தெலுங்கு மக்களின் நலனை காங்கிரஸ் பாதுகாக்க தவறியதால், தனி கட்சியை துவக்கினேன்.
கிரண்குமார் ரெட்டி, ஆந்திர 'மாஜி' முதல்வர்
தென்னகத்திலும் பிரகாசம்
தென் மாநிலங்களில் உள்ள 132 தொகுதிகளில், 50 சதவீத இடங்களில் வெற்றி பெறுவதை பா.ஜ., இலக்காக கொண்டுள்ளது. ஆந்திரம், தமிழகத்தில் எங்களுக்கு புதிய கூட்டணிகள் கிடைத்துள்ளன. எனவே, தென்னகத்திலும் எங்களுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
வெங்கய்யா நாயுடு, பா.ஜ., மூத்த தலைவர்
நிறைய செய்தோம்
குறைந்த காலமே டில்லி முதல்வராக இருந்தாலும், நான், டில்லி மக்களுக்காக செய்தவை ஏராளம். அவைகளைத் தொடர வேண்டும் என்ற, என்னுடைய எண்ணம் நிறைவேறாமல் போனதற்குக் காரணம், பா.ஜ., - காங்.,கின் கூட்டு நடவடிக்கைதான்.
அரவிந்த் கெஜ்ரிவால், தலைவர், ஆம் ஆத்மி