வாழ்நாள் முழுவதும் சிறையில் இருக்கத் தயார்: ராஜா ஆவேசம்

Added : மார் 13, 2014 | கருத்துகள் (3)
Share
Advertisement
ஊட்டி: 2ஜி வழக்கில் தன் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் வாழ்நாள் முழுவதும் சிறையில் இருக்கத்தயார் என முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா தெரிவித்துள்ளார்.நீலகிரி தொகுதியில் தி.மு.க., சார்பில் போட்டியிடும் முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா நிருபர்களிடம் பேசினார். அவர் கூறியதாவது: மத்திய தணிக்கைத்துறை 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி அளவுக்கு அரசுக்கு

ஊட்டி: 2ஜி வழக்கில் தன் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் வாழ்நாள் முழுவதும் சிறையில் இருக்கத்தயார் என முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா தெரிவித்துள்ளார்.நீலகிரி தொகுதியில் தி.மு.க., சார்பில் போட்டியிடும் முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா நிருபர்களிடம் பேசினார். அவர் கூறியதாவது: மத்திய தணிக்கைத்துறை 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி அளவுக்கு அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக அறிக்கை தாக்கல் செய்துள்ளது. இது தொடர்பாக, பார்லிமென்ட் கூட்டுக்குழு விசாரணை நடத்தி வருகிறது. இக்குழுவிடம் 102 பக்க அறிக்கையை நான் சமர்ப்பித்துள்ளேன். அதில் ஒரு குறையைக் கூட குழுவில் உள்ள அரசியல் கட்சிகளால் தெரிவிக்க முடியவில்லை. ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக எனது உறவினர்கள், நண்பர்கள் என 33 பேரின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. அதில் முறைகேடாக ஒரு ரூபாய் கூட கண்டுபிடிக்க முடியவில்லை. இது ஒரு ஜோடிக்கப்பட்ட வழக்கு. இவ்வழக்கில் நான் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் வாழ்நாள் முழுவதும் சிறையில் இருக்கத்தயார்.

இதே போல், 2ஜி வழக்கில் ஒரு நாள் கூட நான் ஆஜராகாமல் இருந்ததில்லை. ஆனால் தமிழக முதல்வர் ஜெயலலிதா பெங்களூருவில் நடக்கும் சொத்துக்குவிப்பு வழக்கை தொடர்ந்து இழுத்தடித்து வருகிறார். ஊழல் தொடர்பாக என்னிடம் கேள்வி கேட்கும் பத்திரிகையாளர்கள், முதல்வரிடம் கேள்வி எழுப்புவதில்லை. நீலகிரி மக்களுக்கு நான் எந்த வாக்குறுதியையும் அளிக்கப்போவதில்லை. நான் வெற்றி பெற்றால் அவர்கள் எதிர்பார்ப்பதை விட அதிகமாக செய்வேன். காங்கிரஸ் கட்சியுடனான உறவு துண்டிக்கப்பட்டதால் என வெற்றி வாய்ப்புக்கு எந்தவித பாதிப்பும் இல்லை. இவ்வாறு ராஜா கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SURESH SUBBU - Delhi,இந்தியா
14-மார்-201405:44:35 IST Report Abuse
SURESH SUBBU வாழ்நாள் முழுவதும் சிறையில் இருக்கத்தயார் . கனிமொழி மற்றும் நீரா ராடியாவுடன் ....இது ஆவேசம் மாதிரி தெரியலியே.. புகழ் எதுக்கும் கொஞ்சம் ஜாக்கிரதையா இருக்கணும்... இருக்குறதும் போக போவுது...
Rate this:
Cancel
muthu - tirunelveli,இந்தியா
14-மார்-201405:11:18 IST Report Abuse
muthu voters dont know why police / law makers fail to do truth extraction medical treatment . Truth extraction medical treatment should be given to accused to find out more required details & release them if found clean.
Rate this:
Cancel
ugan - coimbatore,இந்தியா
14-மார்-201400:30:51 IST Report Abuse
ugan அய்யோ, அய்யோ, உங்களுக்கு அதுதானே கிடைக்கபோவுது ஏன் அவசரம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X