புதுச்சேரியில் மீண்டும் நாராயணசாமி; உ.பி.,யில் நக்மா: காங்., 2வது பட்டியல் வெளியீடு

Updated : மார் 13, 2014 | Added : மார் 13, 2014 | கருத்துகள் (8)
Advertisement
புதுச்சேரியில் மீண்டும் நாராயணசாமி; உ.பி.,யில் நக்மா: காங்., 2வது பட்டியல் வெளியீடு

புதுடில்லி: லோக்சபா தேர்தலுக்கான, காங்கிரஸ் கட்சியின், இரண்டாவது வேட்பாளர் பட்டியல், வெளியானது. அதில், அசாம், கர்நாடகா, கேரளா, ம.பி., மகாராஷ்டிரா, உ.பி., புதுச்சேரி போன்ற மாநிலங்களின், 71 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். இதற்கு முன், கடந்த, 8ம் தேதி, 194 வேட்பாளர்கள் பட்டியலை, காங்கிரஸ், மத்திய தேர்தல் குழு வெளியிட்ட நிலையில், இன்று இரண்டாவது பட்டியல் வெளியானது.அதில், அறிவிக்கப்பட்டுள்ள, பிரபலமானவர்கள் விவரம்: கர்நாடகாவின், சிக்பல்லாபுர் தொகுதியில், மத்திய அமைச்சர், வீரப்ப மொய்லி போட்டியிடுகிறார். மத்திய, உணவு அமைச்சர், கே.வி.தாமஸ், கேரளாவின், எர்ணாகுளம் தொகுதியில் போட்டியிடுகிறார். திருவனந்தபுரம் தொகுதியில், மற்றொரு மத்திய அமைச்சரான, சசி தரூர் போட்டியிடுகிறார். உத்தர பிரதேசத்தின், மீரட் நகரில், காங்கிரஸ் வேட்பாளராக நிறுத்தப்பட்டிருந்த, தயானந்த் குப்தா மாற்றப்பட்டு, தமிழ் நடிகை, நக்மா நிறுத்தப்பட்டுள்ளார். பாலிவுட் நடிகர், ராஜ் பாப்பர், காசியாபாத்தில் போட்டியிடுகிறார். உ.பி., மாநில, காங்கிரஸ் முன்னாள் தலைவர், ரீட்டா பகுகுணா ஜோஷி, லக்னோ தொகுதியில் நிற்கிறார். பஞ்சாபின், சண்டிகர் லோக்சபா தொகுதியில், முன்னாள் ரயில்வே அமைச்சரும், ஊழல் விவகாரத்தால் பதவியிலிருந்து நீக்கப்பட்டவருமான, பவன்குமார் பன்சால் நிறுத்தப்பட்டு உள்ளார். புதுச்சேரி லோக்சபா தொகுதி, மீண்டும், மத்திய அமைச்சர், நாராயணசாமிக்கு வழங்கப்பட்டுள்ளது. இத்துடன், 265 தொகுதிகளுக்கு, காங்கிரஸ் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
TSRSethu - Coimbatore,இந்தியா
16-மார்-201420:57:02 IST Report Abuse
TSRSethu திரு. நாராயண சாமி அவர்கள் 15 வோட்டு வித்தியச்திலாவது ஜெயிப்பார் என்பதை கூறி கொள்வதில் பெருமை அடைகிறோம் ..நன்றி .. வணக்கம் ..
Rate this:
Share this comment
Cancel
எவர்கிங் ஏகாம்பரம் - திருச்சிராப்பள்ளி ,இந்தியா
14-மார்-201405:55:23 IST Report Abuse
எவர்கிங் ஏகாம்பரம்  நக்மா சில தினங்கள் முன்பு மோடியை விட ராகுல் வலிமையான தலைவர் என்று சொன்னதன் பின்னணி இதுதானா?
Rate this:
Share this comment
Cancel
jamal - jeddah,சவுதி அரேபியா
14-மார்-201405:04:33 IST Report Abuse
jamal சரத்குமார் அனேகமாக ராதிகாவை விட்டுட்டு பழைய நட்பை புதுபிக்கப் போனாலும் போய்விடுவார்..நக்மா ஜாக்கிரதை..மானம் கெட்ட வேட்பாளர்கள்.... பெரிய பெரிய மேதாவிகள் அலங்கரித்த இந்திய பாராளுமன்றம் இன்று கனவுக்கன்னிகளாலும் ஜாதி மத அரசியல் வியாதிகளாலும் அசிங்கப்பட்டு கிடக்கிறது..தயவு செய்து உங்களால் தகுதியான வேட்பாளர்களை நிறுத்த முடியாதென்றால் ராணுவ ஆட்சியை அமல் செய்யுங்கள்.எங்கள் முன்னோர்களால் கறைபடிந்த கைகளே இல்லாதவர்களால் நடத்தப்பட்ட எங்கள் பாராளுமன்றத்தை படுக்கை எண்ணம் கொடுக்கும் கவர்ச்சி மன்றமாக மாற்றிவிடாதீகள் ப்ளீஸ்..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X