தமிழக பா.ஜ., கூட்டணி: தவிக்கும் தலைவர்கள்

Updated : மார் 15, 2014 | Added : மார் 14, 2014 | கருத்துகள் (76)
Share
Advertisement
நீண்ட இழுபறிக்கு பின், பா.ஜ., கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளுக்கு இடையே, தொகுதி உடன்பாடு ஏற்பட்டுள்ளது. தே.மு.தி.க., - 14, பா.ஜ., - 8, பா.ம.க., - 8, ம.தி.மு.க., - 7 என, தொகுதி பங்கீடு செய்யப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது. மீதமுள்ள மூன்றில், என்.ஆர்.காங்கிரஸ், கொ.ம.தே.க., மற்றும் ஐ.ஜே.கே., கட்சிகளுக்கு, தலா ஒரு தொகுதி ஒதுக்கப்படுகிறது. ஆனால், எந்த கட்சிக்கு, எந்தெந்த தொகுதி என்பதை முடிவு
BJP, Leader, trouble,alliance, தமிழகம், பா.ஜ., கூட்டணி, தவிக்கும், தலைவர்கள்

நீண்ட இழுபறிக்கு பின், பா.ஜ., கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளுக்கு இடையே, தொகுதி உடன்பாடு ஏற்பட்டுள்ளது. தே.மு.தி.க., - 14, பா.ஜ., - 8, பா.ம.க., - 8, ம.தி.மு.க., - 7 என, தொகுதி பங்கீடு செய்யப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது. மீதமுள்ள மூன்றில், என்.ஆர்.காங்கிரஸ், கொ.ம.தே.க., மற்றும் ஐ.ஜே.கே., கட்சிகளுக்கு, தலா ஒரு தொகுதி ஒதுக்கப்படுகிறது. ஆனால், எந்த கட்சிக்கு, எந்தெந்த தொகுதி என்பதை முடிவு செய்வதில் தான் சிக்கல் தொடர்கிறது. இதில், உடன்பாடு ஏற்படாததால், கூட்டணி அறிவிப்பு தள்ளிப் போடப்பட்டுள்ளது.கண்டறிவதில் சிக்கல்:

தேசிய ஜனநாயக கூட்டணி என்ற பெயரில், லோக்சபா தேர்தலை சந்திக்க உள்ள, இந்த கூட்டணியில் சேர்ந்துள்ள கட்சிகளுக்கு இடையே, தொகுதி உடன்பாடு தொடர்பான பேச்சுவார்த்தை, கடந்த ஒரு மாதமாக நடந்து வந்தது. தொகுதிகள் எண்ணிக்கையில் ஆரம்பித்த இழுபறி, கடைசியில் எந்தெந்த தொகுதிகள் என்று கண்டறிவதில் விவகாரமாக வெடித்தது. உடன்பாட்டை முடிக்க முடியாமல், பா.ஜ., தலைவர்கள் திணறி வந்தனர். குறிப்பாக, வட மாவட்ட தொகுதிகளில், பா.ம.க.,வும், தே.மு.தி.க.,வும் அதிக பங்கை பெற முயன்றதால், பேச்சு இழுத்துக் கொண்டே போனது. இதனால், இக்கட்சிகளுக்கு இடையில், யாருக்கு எத்தனை தொகுதிகள் என்ற உடன்பாட்டை கூட, உடனடியாக செய்ய முடியாமல் போனது. 14 தொகுதிகள் என்பதில் உறுதியாக இருந்து, அதை, தே.மு.தி.க., பெற்று விட்டது. 10 தொகுதிகள் என்ற நிலையில், பிடிவாதமாக இருந்த, பா.ம.க., கடைசி வரை ஒன்பது தொகுதிகளுக்காக, ஒற்றைக்காலில் நின்றது. எட்டு தொகுதியை எதிர்பார்த்த ம.தி.மு.க.,வுக்கு ஏழு என்றானதும், அக்கட்சி உடன்பட சம்மதித்தது. ஆனால், ம.தி.மு.க.,வுக்குரிய தொகுதிகளில் ஒன்றை குறைத்து, பா.ம.க., எண்ணிக்கையை ஒன்பதாக்கலாம் என, நேற்று முன்தினம் இரவு வரை அழுத்தம் கொடுக்கப்பட்டது. இதற்காக, பா.ஜ., டில்லி தலைவர்கள் வரையில், பா.ம.க., தரப்பில் பேசிப் பார்த்தனர். ஆனால், ம.தி.மு.க., விஷயத்தில், ஏழு தொகுதிகள் என்பதில், பா.ஜ., மேலிடம் உறுதியாக நின்று விட்டது. கூட்டணிக்கு முதலில் வந்த கட்சி என்பதால், முன்னுரிமை அளிப்பதாகவும், பா.ஜ., தரப்பில் விளக்கம் சொல்லப்பட்டுள்ளது. அதை ஏற்க மறுத்து, பா.ம.க., பிடிவாதம் பிடித்து வருவதாக, தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து, பா.ம.க.,வுக்கு எட்டு என்ற அளவில், தொகுதிகள் பிரிப்பு பற்றி பேச்சு துவங்கியது. நேற்று முன்தினம் இரவில், ஏறக்குறைய உடன்பாட்டை நெருங்கி விட்டனர். ஆனால், ஸ்ரீபெரும்புதூர், கிருஷ்ணகிரி, சேலம் ஆகிய தொகுதி கள் யாருக்கு என்பதை முடிவு செய்வதில், சிக்கல் ஏற்பட்டது. நேற்று காலை இறுதிகட்ட பேச்சு துவங்கியதும், இந்த சிக்கலை தீர்ப்பது பற்றி விவாதிக்கப்பட்டது. ஸ்ரீபெரும்புதூர், கிருஷ்ணகிரி தொகுதிகளுக்கு, தே.மு.தி.க., பிரஷர் கொடுத்து உள்ளது. இந்த இரண்டு தொகுதிகளையும், பா.ஜ., தன் விருப்பப் பட்டியலில், 'மிக முக்கியம்' என, குறிப்பிட்டுள்ளது.
உடன்பட முடியாது:

மேலும், சேலம் தொகுதியை, தே.மு.தி.க.,வுக்கு விட்டுக் கொடுக்க, பா.ம.க., தயங்குகிறது. நாமக்கல்லை எடுத்துக் கொண்டு, சேலத்தை கொடுக்கும் படி, பா.ஜ., சொல்கிறது. இதற்கிடையில், ஆறு தொகுதிகளுக்கு உடன்பட முடியாது என, ம.தி.மு.க., எதிர்ப்பு தெரிவிப்பதால், நேற்று இரவு வரை பேசியும் குழப்பம் தீரவில்லை. அதனால், பட்டியல் அறிவிப்பு நேற்று வெளியாகவில்லை. அநேகமாக, டில்லி தலைவர்கள் தலையிட்டு பிரச்னையை சுமூகமாக பேசி முடித்தால் மட்டுமே பிரச்னை தீரும் என்ற நிலையில், தமிழக பா.ஜ., தலைவர்கள் பிரச்னையை ?தசிய தலைவர்களிடம் கொண்டு சென்றுவிட்டனர்.

இதற்கிடையில், 'இந்த பிரச்னையை பொறுமையாக பேசி தீர்வுகாணுங்கள்‚' என சொல்லிவிட்டு, நரேந்திர மோடியை பிரதானமாக வைத்து வழக்கறிஞர்களை கூட்டி டில்லியில் ராம்?ஜத்மலானி நடத்தும் நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டார் வைகோ. பிரச்னைகள் முடிந்து, இன்று காலை தொகுதி பங்கீடு அறிவிக்கப்பட்டால், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்தின் பிரசாரப் பயணத்தில் மாற்றம் இருக்காது. அறிவிப்பு தாமதமானால், விஜயகாந்தின் பிரசார பயணம் தள்ளிப் போகலாம்.

- நமது நிருபர் -

Advertisement
வாசகர் கருத்து (76)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Venkatesh Babu - Salem,இந்தியா
14-மார்-201411:11:57 IST Report Abuse
Venkatesh Babu நாளைய பிரதமர் பதவியை தீர்மானிக்கும் பொறுப்பு ஜெயலலிதாவிடமும் , மம்தவிடமும் தான் இருக்கிறது . இது உண்மை .
Rate this:
Cancel
PRAKASH - AHMEDABAD, GUJARAT,இந்தியா
14-மார்-201411:01:35 IST Report Abuse
PRAKASH இந்த கூட்டணிக்கு யாரு ஓட்டு போடா போறான்னு தெரியல.. எதுக்கு இவனுக அடிசுகுராணுக
Rate this:
Cancel
Kathirvelu Mahendran - Bangalore,இந்தியா
14-மார்-201410:18:16 IST Report Abuse
Kathirvelu Mahendran பஸ்மாசூரன் போன்றவர் விஸ்கி காந்த்.வரம் கொடுத்தவர் தலை மேலேயே கையை வைக்கப்போய் ஜெயலலிதாவிடமே பகைத்துக்கொண்டவர்.அவரை நம்பி பாஜக களத்தில் இறங்குவது, மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்குவது போன்றது. பாஜக ஒரு பாரம்பரியமான கட்சி.அதற்க்கு இந்த மாதிரியான சோதனைகள் எல்லாம் வேண்டாம்.விஸ்கி காந்த் கட்சி வேட்பாளர்கள் பட்ட பாடு மக்கள் நன்கு அறிவார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X