பதிவு செய்த நாள் :
கருத்துகள் (155)  கருத்தை பதிவு செய்ய
எழுத்தின் அளவு:

கூட்டணி முடிவாகாத நிலையில், தன்னிச்சையாக, ஐந்து தொகுதிகளுக்கு, வேட்பாளர்களை அறிவித்து விட்டு, சொன்னபடி பிரசாரத்திற்கு கிளம்பி விட்டார், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த். கம்யூனிஸ்ட் கட்சிகளை காக்க வைத்து விட்டு, 40 தொகுதிகளுக்கும் வேட்பாளர் களை அறிவித்த, முதல்வர் ஜெயலலிதா, அதே வேகத்தில் பிரசாரத்திற்கு போனது போல், விஜயகாந்தும் நடந்து கொள்வதை பார்த்து, பா.ஜ., மேலிடம் கடும் அதிருப்தி அடைந்துள்ளது. நேற்று இரவு 10:00 மணி நிலவரப்படி, தே.மு.தி.க.,வை கழற்றி விட்டு, எஞ்சிய கட்சிகளுடன் கூட்டணி அறிவிப்பை வெளியிடலாமா என, இதரக் கட்சித் தலைவர்களுடன் தமிழக பா.ஜ., தலைவர்கள் ஆலோசனை நடத்தினர். இதற்கான முடிவை இன்று அறிவிக்கின்றனர்.

தமிழகத்தில், வலுவான அணி அமைக்க, பா.ஜ., கட்சி தீவிர முயற்சி மேற்கொண்டது. மூன்று மாத முயற்சியின் விளைவாக, தி.மு.க., - அ.தி.மு.க.,வுக்கு மாற்றாக, தே.மு.தி.க., - பா.ம.க., - ம.தி.மு.க., வுடன் இணைந்து, பா.ஜ., மூன்றாவது அணியை ஏற்படுத்தியது. இந்த அணியை, தி.மு.க.,வும், அ.தி.மு.க.,வும் கூட சற்று மலைப்பாகவே பார்த்தன. ஒன்று சேர முடியாத தலைவர்களை ஒருங்கிணைத்து, ஒரு அணியை ஏற்படுத்திய பா.ஜ.,வுக்கு, தொகுதி உடன்பாட்டில் தான் சிக்கல் என, தெரியவந்தது. கூட்டு சேர்ந்துள்ள கட்சிகளின் உண்மையான முகம் வெளிப்பட்டது.

பிடிவாதம்:
கிட்டத்தட்ட சம பலத்துடன் உள்ள கட்சிகளுக்கு இடையே உடன்பாட்டை ஏற்படுத்துவதில், பா.ஜ., பட்ட பாடு கொஞ்சநஞ்சமல்ல. பெரியண்ணன் போக்கில், ஆரம்பத்தில் இருந்தே, அதிக தொகுதிகளை பெறுவதில் பிடிவாதமாக நின்று, அதில் வெற்றி பெற்றது தே.மு.தி.க.,அக்கட்சியின் ஓட்டு வங்கியையும், கைவசம் உள்ள எம்.எல்.ஏ.,க்களின் பலத்தையும் வைத்து, கூட்டணியில் பெரிய கட்சி என்ற அந்தஸ்தை தக்க வைத்துக் கொண்டது. அதை சக கூட்டணி கட்சிகளும் ஏற்றதால், 14 தொகுதிகள் ஒதுக்குவது என முடிவானது. ஆனால், அந்த 14 தொகுதிகளும் தாங்கள் கேட்ட தொகுதி களாக தான் இருக்க வேண்டும் என, அடுத்த போர்க்கொடியை அக்கட்சி தூக்கியதில் இருந்தே, கூட்டணியில் குழப்பம் துவங்கியது.

சம்மதம்:
பா.ம.க., வலுவாக உள்ள தொகுதிகளில்,

தே.மு.தி.க.,வுக்கும் ஆதரவு அதிகம். அதனால், பா.ம.க., விரும்பும் தொகுதிகள் பட்டியலில், பாதியை தே.மு.தி.க., கேட்டது.இதில், பா.ம.க., ஏற்கனவே 10 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை நிறுத்தி உள்ளது. ஆனால், அக்கட்சிக்கு எட்டு தொகுதிகள்என்றானதும், தொகுதிகளை விட்டுக் கொடுக்க முன்வந்தது. இறுதியில், அக்கட்சி விரும்பிய தொகுதிகளில், நான்கை விட்டுத் தர சம்மதம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், தே.மு.தி.க., நிலைப்பாட்டில் மட்டும் மாற்றம் இல்லை. நேற்று காலையில் இருந்து, பா.ஜ., தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். 'மாலை 4:00 மணிக்குள் உடன்பாட்டை முடித்து விடுங்கள்; இல்லையேல் நான் பிரசாரத்திற்கு கிளம்பி விடுவேன்' என, விஜயகாந்த் திட்டவட்டமாக தெரிவித்து விட்டார்.கூட்டணியே முடிவடையாமல், பிரசார அறிவிப்பை அவர் வெளியிட்டதே, தேசிய கட்சியான பா.ஜ.,வை அதிர்ச்சி அடையச் செய்தது. ஆனாலும், கூட்டணியில் பேரம் படிய கையாளப்படும் உத்தி இது என, பா.ஜ., தலைவர்கள் பொறுத்துக் கொண்டனர்.நேற்றைய விவகாரத்தை அப்படி எடுத்துக் கொள்ள முடியாது என்றே பா.ஜ., தலைவர்கள் கருதுகின்றனர்.

இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:
பிரசாரப் பயணத்தை மாற்றியமைக்கும்படி, நாங்கள் விடுத்த வேண்டுகோளை விஜயகாந்த் ஏற்க மறுத்து விட்டார். பிரசாரத்திற்கு போய் பொதுவாக பேசிவிட்டு வருவார் என, எதிர்பார்த்தோம். ஆனால், திடீரென்று முதல் கட்ட பட்டியல் என்ற பெயரில், ஐந்து வேட்பாளர்களை அறிவித்திருக்கிறார்.அந்த ஐந்தும், அக்கட்சிக்கு ஒதுக்கப்படப் போகும் தொகுதிகள் என்றோ, அதில் எந்த பிரச்னையும் இல்லை என்றோ எடுத்துக் கொள்ள முடியாது. ஏனெனில், அதில் திருச்சி, வடசென்னை

Advertisement

தொகுதிகளை பா.ஜ., கேட்டுவருகிறது. நாமக்கல் தொகுதியை, கொ.ம.தே.க.,வுக்கு ஒதுக்க பேச்சு நடத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஜெயலலிதா போல, தன்னிச்சையாக விஜயகாந்த் நடந்து கொண்டுள்ளது, பா.ஜ., மேலிடத்தை அதிருப்தி அடையச் செய்துள்ளது. தே.மு.தி.க.,வை கழற்றி விட்டு, மற்ற கட்சிகளுடன் கூட்டணியை முடித்துக் கொள்ளலாமா என, யோசிக்கத் துவங்கியுள்ளது. இதுபற்றி எங்களின் கருத்தை கேட்டுள்ளனர்.
தேசிய கட்சியான பா.ஜ., இப்படி அண்டிப்பிழைக்கும் நிலைக்கு போகக் கூடாது என, எங்கள் தொண்டர்கள் கூறுவதையும், அவர்கள் மத்தியில், தே.மு.தி.க.,வால் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளதையும், மேலிடத்திடம் நாங்கள் எடுத்துக் கூறியுள்ளோம்.அவர்கள் முடிவுக்காக காத்திருக்கிறோம். இவ்வாறு, பா.ஜ., தலைவர்கள் தெரிவித்தனர்.தே.மு.தி.க.,வின் இந்த போக்கால், கூட்டணி உடன்பாடு குறித்த அறிவிப்பு நேற்று வெளியிடப்படவில்லை. இன்று பேச்சுவார்த்தை தொடரும் என, பா.ஜ., தெரிவித்துள்ளது.

- நமது சிறப்பு நிருபர் -

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (155)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
g.s,rajan - chennai ,இந்தியா
17-மார்-201407:07:16 IST Report Abuse
g.s,rajan குடிகாரன் பேச்சு விடிஞ்சா போச்சு
Rate this:
Share this comment
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
16-மார்-201422:23:56 IST Report Abuse
g.s,rajan தே.மு தி. க வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் கட்டாயம் மண்ணைக் கவ்வும் .இது உறுதி மப்பு ஓவராகி சுத்தமா "பிளாட்" FLAT ஆயிடும் வேணும்னா பாருங்க
Rate this:
Share this comment
Cancel
Solamonjayaraj - bangalore,இந்தியா
16-மார்-201421:26:14 IST Report Abuse
Solamonjayaraj தினமலர் பிஜேபி இடம் இருந்து எவ்வளவு வாங்கினீர்கள் இந்த தேர்தலுக்கு .....
Rate this:
Share this comment
Cancel
Raghav - chennai,இந்தியா
16-மார்-201406:32:27 IST Report Abuse
Raghav கூடா நட்பு கேடாய் முடியும் என்பது விரைவில் விளங்கப்போகிறது பி ஜெ பி க்கு
Rate this:
Share this comment
Cancel
தங்கவேல் - காத்தான் சாவடி ,இந்தியா
15-மார்-201416:29:49 IST Report Abuse
தங்கவேல்  போகும் போக்கைப் பார்த்தால் பாஜக வும் அதிமுகவும் ஒன்று சேரும்போலத் தெரிகின்றது... தேமுக வை தவிக்க விட்டு பாஜக கூட்டணிகளுக்கு 6 சீட்டுகளை பகிர்ந்து கொடுத்துவிடலாம். தினமலரும் 2 நாட்களாக அம்மாவை விமர்சனம் செய்வதை நிருத்திவைத்துள்ளதைப் பார்த்தால் பாஜக வும் அதிமுகவும் ஒன்று சேரும்போலத் தெரிகின்றது.
Rate this:
Share this comment
Cancel
முக்கண் மைந்தன் - Seoul,தென் கொரியா
15-மார்-201415:54:32 IST Report Abuse
முக்கண் மைந்தன் இந்த "க்வாட்டர் கோவிந்த்"தை மப்புல இல்லாதபோது முடிவு எடுக்க சொல்லுங்கப்பா. அம்மா பாடு கொண்டாட்டம்தான். 39க்கு 39 அள்ளப்போறாங்க.
Rate this:
Share this comment
Cancel
v.sundaravadivelu - Tiruppur,இந்தியா
15-மார்-201415:54:05 IST Report Abuse
v.sundaravadivelu இப்பவே இந்த லட்சணம்.. இன்னும் இவர்கள் ஆட்சி கையில் கிடைத்தால்.. அது அம்புட்டு தான்.. ஒன்னும் இல்லாமையே இந்த பந்தா விடற இவுகள, இப்பவே டங்குவாரு அந்து போக வெரட்டி விட்டா செமையா இருக்கும்..
Rate this:
Share this comment
Cancel
VELAN S - Chennai,இந்தியா
15-மார்-201415:45:58 IST Report Abuse
VELAN S செங்கன்னனிடம் கட்ஸ் இருக்கிறது ,எதை பற்றியும் கவலை படாமல் இருப்பதும் ஒரு வகைக்கு நல்லதே. இப்போ இல்லாவிட்டாலும், ஒரு 10 வருடம் கழித்து செங்கண்ணன் ஆட்சியை பிடிக்க கூடும். பதவி பதவி என்று அலையவில்லை பாருங்கள் .
Rate this:
Share this comment
Cancel
Sulo Sundar - Mysore,இந்தியா
15-மார்-201415:17:49 IST Report Abuse
Sulo Sundar ஐயா..இந்த லட்சணத்தில் விஸ்கிகாந்து நேத்து பேசியிருப்பது இன்றைய ஏடுகளில் வந்துள்ளதை பாருங்க..கம்யூனிட்களுக்கு அதிமுகாவில் என்ன மரியாதை கிடைத்து பார்த்தீர்களா என்று கேட்டிருக்கும் இந்த கோமாளி நாட்டில் காங்கிரசுக்கு மாற்றாக கருதப்படும் பாஜாகா வுக்கு கொடுத்த மரியாதையை பாருங்கள்....விஸ்கியையும் டவுசர் தாசையும் தூக்கி எறிந்துவிட்டு தமிழக பாஜாகா தனியாக நின்றால் மரியாதையாவது மிஞ்சும்....எல்லாம் தமிழ் மக்களின் தலைவிதி....ஆகவே நன்கு சிந்தித்து ஓட்டுகளை வீணாக்காமல் அம்மாவை 40 எம் பி களோடு பாராளுமன்றம் அனுப்புங்கள்..நல்லதே நடக்கும்
Rate this:
Share this comment
Cancel
s.p.poosaidurai - Ramanathapuram,இந்தியா
15-மார்-201414:51:19 IST Report Abuse
s.p.poosaidurai நாகரிகம் தெரியாதவர், பண்பாடு இல்லாதவர், விஜயகாந்த் தேர்தல் பயணம் மூளை கோளாறு உள்ளவரை போல் திடு திப்புன்னு கிளம்பி இருப்பது பக்குவம் மற்ற அரசியல் கோழை மனிதனை போல் தெரிகிறது. பி ஜே பி. விஜயகாந்திடம் மண்டி இட்டு சலாம் போட்டு கூட்டிவரவேண்டிய அவசியம் இல்லை. அவர் மூக்கு குத்தாத காயடிக்காத காளையை போல் வாலை தூக்கி துள்ளி ஓடுவதுபோல் தெரிகிறது. விஜயகாந்தை விலக்கிவிட்டு இருக்கிற நல்லவங்களை வைத்து ஒத்துபோகிற கட்சிகளுடன் கூட்டணி வைப்பது நல்லது. மீண்டும் விஜயகாந்த உறவை பி ஜே பி தேட முயற்சித்தால் எந்த கடலில் மூழ்க அடிப்பார் என்று தெரியாது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X