காவிரி டெல்டா தொகுதிக்கு சூரிய கட்சியில் பாலுவானவருக்கு 'சீட்' கொடுத்திருப்பதால், இலை கட்சி தரப்பில் அதிர்ச்சியாகி இருக்கின்றனராம். வலுவானரை எதிர்க்க நம் தரப்பில் சொத்தையானவர் இருக்கலாமா என்கிற யோசனை ஓடுகிறதாம். அதனால், பரசுவான வேட்பாளர் மாற்றப்பட்டு, வைத்தியமான லிங்கம் வேட்பாளராகலாமாம்.
சூரிய கட்சியின் அஞ்சாநெஞ்சனாக அடையாளப்படுத்தப்பட்ட மதுரைக்கார அண்ணாச்சி, டில்லிக்குச் சென்று, கைகட்சித் தலைவரையும் தாமரைக் கட்சித் தலைவரையும் சந்தித்துவிட்டு வந்தார். அப்போது, அண்ணாச்சி கூடவே சென்ற, லிங்கமான ராமர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க கட்சியில் அழுத்தம் அதிகமாகி இருக்கிறதாம்.
இலை கட்சியிலிருந்து கை கட்சிப் பக்கம் தாவி, தற்போது தாமரை கட்சியில் இணைந்த சேகரான சிரிப்பு நடிகர், தனக்கு தேர்தலில் முக்கியத்துவம் கொடுப்பார்கள் என்று எதிர்பார்த்தாராம். அவரை பிரசார குழுவுக்கு தலைவராக்குவதாக சொல்லியிருந்தார்களாம். ஆனால், எதுவும் நடக்கவில்லை என்பதால், கடும் 'அப்செட்'டில் இருக்கிறாராம்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE