அரசியல் செய்தி

தமிழ்நாடு

அ.தி.மு.க., ஆட்சி;அறிவிப்பு ஆட்சி: ஸ்டாலின் தாக்கு

Updated : மார் 16, 2014 | Added : மார் 15, 2014 | கருத்துகள் (21)
Advertisement
அ.தி.மு.க., ஆட்சி;அறிவிப்பு ஆட்சி: ஸ்டாலின் தாக்கு

நாகர்கோவில்:அ.தி.மு.க. ஆட்சியில் சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டது, இது வெறும் அறிவிப்பு ஆட்சியாகவே இருக்கிறது, இந்த ஆட்சியை தூக்கி எறிய வேண்டும் என்று தி.மு.க. பொருளாளர் ஸ்டாலின் கூறினார்.

கன்னியாகுமரி தொகுதி தி.மு.க. வேட்பாளர் எப்.எம். ராஜ ரத்தினத்தை ஆதரித்து களியக்காவிளையில் பேசியதாவது: தேர்தல் வந்தாலும் வராவிட்டாலும், ஆட்சியில் இருந்தாலும் இல்லா விட்டாலும் மக்களுக்காக பாடுபடும் இயக்கம் என்ற உரிமையோடு மக்களை சந்திக்க வந்துள்ளோம். தி.மு.க. இன்று ஆட்சியில் இல்லை, சட்டசபையில் எதிர்கட்சியாக கூட இல்லை. ஆனால், மக்கள் மன்றத்தில் தி.மு.க.தான் எதிர் கட்சியாக உள்ளது. ஜெ. பிரசாரத்தில் தி.முக., மீது பல்வேறு புகார்களை கூறி வருகிறார். மத்தியில் ஆட்சியில் இருந்த தி.மு.க. எதுவும் செய்யவில்லை என்று கூறி வருகிறார்.சேது சமுத்திர திட்டத்தை தி.மு.க. பார்லிமென்டில் தொடர்ந்து வலியுறுத்தியதன் பயனாக சேது சமுத்திர திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது. மதுரையில் இதற்கான விழா நடைபெற்றது. இதில் இன்று நம்மோடு இல்லாத கூட்டணி கட்சி தலைவர்கள் பலரும் கலந்த கொண்டனர். ஆனால், இன்று சேது சமுத்திர திட்டம் தமிழ்நாட்டுக்கு வேண்டாம் என்று உச்சநீதிமன்றத்தில் முதல்வர் ஜெ., மனு தாக்கல் செய்கிறார்.

1991 முதல் 99 வரை சிறுபான்மையினர் தொடங்கிய, தரம் உயர்த்திய பள்ளிகளுக்கு மானியத்துடன் கூடிய சம்பளம் வழங்கி உத்தரவிட்டது அன்றைய முதல்வர் கருணாநிதி. இதன் மூலம் 16 ஆயிரத்து 307 ஆசிரியர்களும், 331 ஆசிரியர் அல்லாத பணியாளர்களும் பயன் பெற்றனர். 1999-க்கு பிறகு தொடங்கப்பட்ட சிறுபான்மை பள்ளிகளுக்கும் மானியம் வழங்குவது பற்றி ஆலோசிக்கப்படும் என்று கருணாநிதி சட்டசபையில் அறிவித்தார். 2001ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட போது இவையெல்லாம் நிறுத்தி வைக்கப்பட்டது.2010-ல் கன்னியாகுமரி மாவட்டத்தில் அருமனையில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் பேசிய ஜெயலலிதா, 'கர்த்தர் அருளால் உங்கள் அன்பு சகோதரி ஆட்சிக்கு வந்தால் தனியார் நிலங்களில் சர்ச் கட்டுவதற்கு உள்ள தடை நீக்கப்பட்டு ஆலயம் கட்ட அனுமதி வழங்கப்படும்' என்று கூறினார். அதை இதுவரை நிறைவேற்றினாரா? அவர்கள் அறிவித்தது எல்லாம் அறிவிப்பாகவே இருக்கிறது. இது வெறும் அறிவிப்பு ஆட்சி தான்.இந்த ஆட்சியில் சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டது. தினமும் கொலை, கொள்ளை தான் முக்கிய செய்தியாக இருக்கிறது. ஒரு திருடன் ஒரு வீட்டில் திருடி விட்டு அடுத்த நாள் அதே வீட்டுக்கு சென்றான். அந்த பெண்ணும் திருடன் திருந்தி செயினை தருவதற்காக வந்துள்ளார் என்று நினைத்தால். அதற்கு அந்த திருடன் டூப்ளிகேட் செயினையா போட்டிருந்தாய் என்று கேட்டு அடித்து விட்டு சென்றுள்ளார். இப்படிதான் தமிழ்நாட்டிலும் டூப்ளிகேட் ஆட்சிதான் நடக்கிறது. பஸ் கட்டணம் உயர்ந்து விட்டது. பால் விலை உயர்ந்து விட்டது. மின் கட்டணத்தை கேட்டலே ஷாக் அடிக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஆரூர் ரங - chennai,இந்தியா
15-மார்-201406:44:52 IST Report Abuse
ஆரூர் ரங நடப்பது பார்லிமென்ட் தேர்தல் சட்டசபைத் தேர்தலல்ல.இப்போது ஜெயலிதாவை தாக்கி எனன் பயன்? தேசத் தேர்தலின்போது பாஜகவையோ காங்கிரசியோ எதிர்க்கும் பேச்சு அவசியமே இல்லை தமிழின அழிப்புக்கு காங்கிரசுக்கு எல்லா உதவிகளையும் செய்துவிட்டு இப்போ நாடகமா ஆடுறீங்க?
Rate this:
Share this comment
Cancel
villupuram jeevithan - villupuram,இந்தியா
15-மார்-201406:13:27 IST Report Abuse
villupuram jeevithan இந்த மூணு வருஷமா எல்லா தேர்தலிலும் பஸ்,, பால் மின்கட்டணம் என்று சொல்லிக்கிட்டே இருக்குறீங்க , ஆனா மாதா மாதம் ஏறும் டீசல் விலையைப் பற்றி மூச்சு விடலே ?
Rate this:
Share this comment
Cancel
villupuram jeevithan - villupuram,இந்தியா
15-மார்-201406:09:56 IST Report Abuse
villupuram jeevithan அவுங்க கொடுத்த துரோக லிஸ்ட்டுக்கு பதில் சொல்லாம , பேச்ச மாத்துரீங்கலே ? ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X