தேர்தல்களம் காணும், தமிழக அரசியல் கட்சிகள், கடைபிடிக்கும் முக்கிய கொள்கைகள்:
* கூடுதல் பெட்டி எதிர்பார்த்து கூட்டணி வை
* கூட்டணிக்கு தினசரி குடைச்சல் கொடு
* காசு கொடுத்தால் கழுதைக்கும் 'சீட்' கொடு
* மக்கள் சேவையா? கிலோ எவ்வளவு?
* கடைசி வரை கூட்டணி என்று, சொல்லி, கழட்டி விடு
* லெட்டர்பேடு கட்சியாக இருந்தாலும் '??ம் நமதே' என, கொக்கரி
* தேர்தல் வருது ஈழத் தமிழர் மீது பாசம் காட்டு
* குடும்ப நலத்திற்காக எல்லோரையும் குப்புற கவுத்து
* சீட்டு கொடுக்கலையா? சிட்டா பறந்திடு அடுத்த கூட்டணிக்கு
* ஜாதி ஒழிப்பை சத்தமா பேசு. ஜாதிக்காரர்களுக்கு மட்டுமே 'சீட்' கொடு
* பெட்டிகள் வாங்க கையில் பெட்ஷீட் போட்டு பேரம் பேசு
* மாட்டுத் தரகர்களை எல்லாம் வேட்பாளராக்கு
எஸ்.லட்சம், சிவகாசி மேற்கு
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE