ஏழை குடும்பத்தை சேர்ந்தவன்
நான் யார் என்பதும், மோடி யார் என்பதும் இந்த நாட்டுக்குத் தெரியும். நான் அகம்பாவம் பிடித்தவன் என்று மோடி சொல்லஇருக்கிறார். அவருக்குத்தான் உடம்பின் எல்லா பாகங்களிலும் அகம்பாவம் ஊடுருவிக் கிடக்கிறது. நான் சாதாரண எளிய-ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவன்.
நிதிஷ்குமார், முதல்வர், பீகார்
அரசர்களா இவர்கள்?
தேர்தல் வந்துவிட்டால், தேர்தல் ஆணையர்கள் அரசர்கள் போலவும், உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளாக அமர்ந்து விட்டால், அவர்கள் கடவுள்கள் போலவும் செயல்படுவது ஏற்புடையது அல்ல. மக்களுக்காகவே, தேர்தல் ஆணையர்கள், நீதிபதிகள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
சல்மான் குர்ஷித், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர்
விவாதிக்க தயார்
ஸ்பெக்ட்ரம் குற்றச்சாட்டுத் தொடர்பாக நான் ஏற்கனவே பார்லி., கூட்டுக் குழுவிடம் 102 பக்க விளக்கக் கடிதம் கொடுத்திருக்கிறேன். என் மீது குற்றம் சாட்டுகிறவர்கள், அது தொடர்பாக பொது மேடையில் என்னிடம் விவாதிக்க தயாராக இருக்கின்றனரா? நான் தயாராக இருக்கிறேன்.
ஆ. ராசா, முன்னாள் மத்திய அமைச்சர்