ஜோதிடர் ஆலோசனைப்படி பிரசாரம் துவக்கம்: விஜயகாந்தின் வியூகம் வெற்றி தருமா| Dinamalar

ஜோதிடர் ஆலோசனைப்படி பிரசாரம் துவக்கம்: விஜயகாந்தின் வியூகம் வெற்றி தருமா

Updated : மார் 15, 2014 | Added : மார் 15, 2014
Advertisement
ஜோதிடர் ஆலோசனைப்படி பிரசாரம் துவக்கம்: விஜயகாந்தின் வியூகம் வெற்றி தருமா

சென்னை: தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், துலாம் ராசிக்காரர். இவர், எண், 5ஐ, ராசி எண்ணாக பயன்படுத்தி வருகிறார். தேர்தல் பிரசாரத்தை, திருவள்ளூர் (தனி) தொகுதிக்குட்பட்ட, கும்மிடிபூண்டியில் நேற்று அவர் துவங்கினார்.
தமிழகத்தின், வடகிழக்கில் அமைந்துள்ள கும்மிடிபூண்டியில் விஜயகாந்தின் பிரசாரம் துவங்கியது. ஈசான மூலையில், ஏதாவது ஒரு வேலையை துவங்கினால், அது வெற்றிப் பெறும் என்பது ஐதீகம். எனவே, தமிழகத்தின், ஈசானி மூலையில் அமைந்துள்ள கும்மிடிபூண்டியில், விஜயகாந்தின் பிரசாரம் துவங்கியுள்ளது. கடந்த, 2006 சட்டசபை தேர்தலில், முதல் முறையாக, தே.மு.தி.க., போட்டியிட்டது. அப்போதும், கும்மிடிபூண்டி தொகுதியில்தான், விஜயகாந்த் தன் பிரசாரத்தை துவக்கினார். அத்தேர்தலில், கணிசமான ஓட்டுக்களை பெற்று, தே.மு.தி.க., எழுச்சிப்பெற்றது. அதே, பார்முலாவை, இந்த தேர்தலிலும் அவர் பயன்படுத்தியுள்ளார். இதேபோல, நேற்று 14ம்தேதி என்பதால், அதன் கூட்டுத்தொகை, ஐந்து. விஜயகாந்த் பிரசாரம் துவங்கிய நேரம் சரியாக, 5:14 மணி. இதிலும், நேரம், 5:00 மணியாகவும், நிமிட கூட்டுத்தொகை, ஐந்தாகவும் இருந்தது. ஆனால், அவர், 3:20 மணிக்கு அவர் பிரசாரம் துவங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. விருகம்பாக்கம் வீட்டில், தன் இஷ்ட தெய்வமான, திருப்பதி ஏழுமலையானை வணங்கிவிட்டு, பகல், 3:20 மணிக்கு, வீட்டிலிருந்து அவர் அங்கிருந்து, வெளியேறினார். இதிலும், கூட்டுத்தொகை, ஐந்து வரும் படி பார்த்துக் கொள்ளப்பட்டது. முன்கூட்டியே, கும்மிடிபூண்டி செல்ல விரும்பாத விஜயகாந்த், சென்னை கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், தச்சூரில் உள்ள, தன் மைத்துனர் சுதீஷ் திருமண மண்டபத்தில் ஓய்வெடுத்தார். அங்கு, முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை அறிவிக்க உத்தரவிட்டார். அவரது ஏற்பாட்டின்படி, சரியாக, 5:05 மணிக்கு, ஐந்து வேட்பாளர் அடங்கிய பட்டியல் வெளியிடப்பட்டது. ஆனால், கும்மிடிபூண்டியில் பேசிய விஜயகாந்த், தனக்கு ஜோதிடத்தில் நம்பிக்கை இல்லை. மக்களுக்கு நல்லது நடந்தால், எந்த நேரமும் நல்லநேரம் தான் என்று கூறினார். கேரள ஜோதிடர் ஒருவரின் ஆலோசனைப்படி, பிரசார தேதி, நேரம், இடம் வேட்பாளர் பட்டியல் வெளியீடு உள்ளிட்டவற்றை, விஜயகாந்த் செய்திருப்பதாக தெரிகிறது. கேரள ஜோதிடரின் கணிப்பு, விஜயகாந்திற்கு பலன் அளிக்குமா என்பது தேர்தல் முடிவுக்கு பிறகு வெட்டவெளிச்சமாகிவிடும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X