திருநெல்வேலி: வைகோ போட்டியிடும் தொகுதி உள்பட மூன்று தொகுதிகளில் ஆம் ஆத்மி சார்பில் வேட்பாளர்களை நிறுத்தப்போவதில்லை என கட்சியின் ஒருங்கிணைப்பாளர் தெரிவித்தார்.
ஆம் ஆத்மி கட்சியின் நெல்லை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜோசப் சகாயராஜ், செயலர் ரகு உள்ளிட்டோர் நேற்று நிருபர்களை சந்தித்தனர். அவர்கள் கூறியதாவது: தமிழகத்தில் 40 தொகுதிகளிலும் போட்டியிட வேட்பாளர்களை தேர்வு செய்துவருகிறோம். இருப்பினும் மாநிலக்குழு எடுத்த முடிவின்படி ம.தி.மு.க.,பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன், மனித நேய மக்கள் கட்சியின் ஐதர்அலி ஆகியோர் போட்டியிடும் தொகுதிகளில் ஆம் ஆத்மி வேட்பாளர்களை நிறுத்துவதில்லை என முடிவு செய்துள்ளது. தமிழக தேர்தலில் பிரசாரம் மேற்கொள்ள அரவிந்த் கெஜ்ரிவால் வருவதாக கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE