சென்னை: ''தமிழக தேர்தல் கூட்டணி குறித்து, கட்சியின் அகில இந்திய தலைமை இன்று மதியத்துக்குள் அறிவிக்கும்,'' என, பா.ஜ., தமிழக பொறுப்பாளர் முரளீதர்ராவ் கூறினார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: ம.தி.மு.க., பா.ம.க., கட்சிகளுடன் கூட்டணி உடன்பாட்டை எட்டிவிட்டோம். ஆனால், தே.மு.தி.க.,வுடன் தொகுதிகள் எண்ணிக்கை மற்றும், எந்ததெந்த தொகுதிகள் என்பது குறித்து, உடன்பாட்டை எட்ட முடியவில்லை. இதையடுத்து, கட்சியின் தமிழக தேர்தல்குழு கூடி, இதுவரை நடந்த கூட்டணி பேச்சுவார்த்தை, முன்னேற்றம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு, இறுதி அறிக்கையை தயார் செய்துள்ளது. மாநில தேர்தல்குழு, கூட்டணியை முடிவு செய்ய முடியாது. எனவே, இந்த இறுதி அறிக்கையை, அகில இந்திய தலைமைக்கு தெரிவித்து, அவர்கள் இன்று மதியத்துக்குள், கூட்டணி பற்றிய முடிவை அறிவிப்பார்கள். இவ்வாறு அவர் கூறினார். முரளீதர் ராவின் கருத்திலிருந்து, பா.ஜ., கூட்டணியில், தே.மு.தி.க., அங்கம்பெற சாத்தியமில்லை என்பது உறுதியாகியுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE