தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து, கட்சிகள் வேட்பாளர் பட்டியலையும், தேர்தல் அறிக்கையையும் வெளியிட்டு வருகின்றன. உ.பி., முதல்வர் அகிலேஷ் யாதவ், வெளிநாட்டில் படித்தவர். அவருடைய தந்தை, முலாயம் சிங்குக்கு ஆங்கிலமும் தெரியாது; ஆங்கிலமும் பிடிக்காது. ஆனால், அகிலேஷ், சீமையில் படித்தவர் என்பதால், மாணவர்களுக்கு இலவசமாக, 'லேப்டாப்' உள்ளிட்டவற்றை வழங்கி வருகிறார். லோக்சபா தேர்தலுக்கான, சமாஜ்வாதி கட்சி, தேர்தல் அறிக்கை கணினி (டிஜிட்டல்) புத்தகமாக வெளியிடப்பட உள்ளது. 9.5 செ.மீ. அகலமும், 5.5 செ.மீ., நீளமும் உடைய திரையை கொண்ட கணினி புத்தகம் அது. இந்த தந்திரமெல்லாம் புது வாக்காளர்களை கவரவே .
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE