சைக்கிளில் இருந்து தூக்கு: பஞ்சாபில் அதிரடி உத்தரவு| Dinamalar

'சைக்கிளில் இருந்து தூக்கு': பஞ்சாபில் அதிரடி உத்தரவு

Added : மார் 15, 2014

தேர்தல் விதிமுறைப்படி, மாநில அரசு அலுவலகங்கள், '108' ஆம்புலன்ஸ்கள் ஆகியவற்றில் வரையப்பட்ட, மாநில முதல்வர்களின் படங்கள் மற்றும் காலண்டர்களை அகற்ற, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. பஞ்சாப் மாநிலத்தில், 'மை ரன்' திட்டத்தின் கீழ், மாநில அரசால் வழங்கப்பட்ட, ஆயிரத்திற்கும் மேற்பட்ட சைக்கிள்கள், அம்மாநில முதல்வர், பிரகாஷ் சிங் பாதலின் உருவப் படங்களுடன் பவனி வருகின்றன. 'முதல்வரின் உருவப்படம் உள்ள காலண்டர்களை அகற்றும்போது, சைக்கிள்களில் உள்ள உருவப்படங்களையும் அகற்ற வேண்டும்' என, அம்மாநில கூடுதல் தேர்தல் அதிகாரி உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து, சைக்கிள்களில் இருந்து பாதலின் படங்கள் அகற்றப்படுகின்றன.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X