சருகணி மண்ணில் புதைந்த மரகதம் அருட்தந்தை லெவா..

Updated : மார் 16, 2014 | Added : மார் 16, 2014 | கருத்துகள் (8)
Share
Advertisement
கடந்த பல ஆண்டுகளாக நடந்து கொண்டு இருப்பது, இந்த ஆண்டு இந்த மார்ச் மாதம் 21ம் தேதியும் மறக்காமல் நடக்க இருப்பது.சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை வட்டத்தில் உள்ள சருகணி கிராமத்தில் உள்ள ஒருவரின் கல்லறையில் அவரது நினைவு தினமான மார்ச் 21ம் தேதி அந்தப்பகுதியில் உள்ள அனைவரும் ஜாதி, மதம் பாராமல் தங்கள் வயல்களில் விளைந்த காய்கள் மற்றும் தானியங்களை கொண்டு வந்து
சருகணி மண்ணில் புதைந்த மரகதம் அருட்தந்தை லெவா..

கடந்த பல ஆண்டுகளாக நடந்து கொண்டு இருப்பது, இந்த ஆண்டு இந்த மார்ச் மாதம் 21ம் தேதியும் மறக்காமல் நடக்க இருப்பது.
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை வட்டத்தில் உள்ள சருகணி கிராமத்தில் உள்ள ஒருவரின் கல்லறையில் அவரது நினைவு தினமான மார்ச் 21ம் தேதி அந்தப்பகுதியில் உள்ள அனைவரும் ஜாதி, மதம் பாராமல் தங்கள் வயல்களில் விளைந்த காய்கள் மற்றும் தானியங்களை கொண்டு வந்து குவிக்கின்றனர்.
அந்த தானியங்களைக் கொண்டு மதியம் விருந்து தயராகிறது.
அக்கம், பக்கம் கிராமங்களில் இருந்தெல்லாம் திரண்டு வந்த மக்கள் இருந்து அந்த விருந்தில் பங்கேற்று செல்கின்றனர்.
இப்படி ஊரே ஒன்று திரள்வதன் நோக்கம் விருந்திற்காக அல்ல. மனிதராய் பிறந்து, தான் செய்த நற்செயல்களின் காரணமாக புனிதருக்கான பட்டத்தை நோக்கி பயணிக்கும் ஒருவரின் நினைவு நாளன்று, அவரது நினைவுகளை பகிர்ந்து கொள்ளவும், மனதில் பக்தியோடு பதிந்து கொள்ளவும்தான்.
அவர்தான் அருட்தந்தை லெவே
பிரான்சு நாட்டில் லாலியர் என்ற சிற்றூரில் 1884ம் ஆண்டு பிறந்தவர்.
உடன் பிறந்தோர் மற்றும் தந்தை ஆகியோரை அடுத்தடுத்து பறிகொடுத்த சோகத்தில் இருந்தவரை பக்தியாலும், விசுவாசத்திலும் தேற்றியவர் அவரது தாயார்தான். தாயார் விதைத்த பக்தி மார்க்கம் லெவேவை குருமாராக்கியது.
இந்தியாவில் இறைப்பணியாற்ற முடியுமா என்று கேட்ட போது விருப்பத்தோடு வந்தவர், அதன் பிறகு 64 ஆண்டுகளில் ஒரு முறை கூட தான் பிறந்த பிரான்சு நாட்டிற்கு போகாதவர்.
சிவகங்கை மாவட்டம் சருகணி தேவாலயத்தையே தனது வீடாகவும்,இந்தியாவையே நாடாகவும் கொண்டார்.
தமிழ் மொழியில் தங்கு தடையின்றி எழுதவும், பேசவும் கற்றவரானார்.
ஒரு முறை சருகணி கிராமத்தை காலரா நோய் கடுமையாக தாக்கியது. நோய் தாக்கியவர்களை உற்றமும், சுற்றமும் கூட விட்டுச் சென்ற போது இவர் பாதிக்கப்பட்டவர்களை தொட்டு தூக்கி நோயுற்றவர்களின் காவலராய் இருந்து அவர்கள் நோய் தீர பாடுபட்டார். மழை வேண்டி ஜெபம் நடத்தியவர், ஏழை மீனவர்களுக்கு படகும், வலையும் வாங்குவதற்கு உதவியவர்,
கொத்தடிமைகளாக இருப்பவர்களை மீட்டவர், நடந்தே அனைத்து கிராமங்களுக்கும் சென்றவர். சாதி, மதம் பாராதவர். ஏழை, எளியவர்களுக்காக எப்போதுமே தனது இல்லத்தையும், உள்ளத்தையும் திறந்து வைத்தவர். இது போன்ற செயல்கள்தான் இவரை மக்கள் குருவாக மாற்றியது.
இப்படி மக்கள் பணியிலும், இறைப்பணியிலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்ட லெவே தனது 89 வது வயதில் இறந்தார். இறப்பதற்கு இரண்டு வாரத்திற்கு முன்பே தனது இறப்பை பற்றி கடிதம் மூலமாக தெரியப்படுத்தினார். இறந்த பிறகு எங்கே புதைக்கப்பட வேண்டும், எப்படி புதைக்கப்பட வேண்டும் என்பதை சொன்னவர்.
கிட்டத்தட்ட 64 ஆண்டுகள் தமிழ் மண்ணையும், மக்களையும் நேசித்த லெவே இறந்த போது ஊரே ஒன்று கூடி அழுததில் வியப்பேதும் இல்லை.
இது நடந்தது 21/3/73ம் ஆண்டாகும். அவர் இறந்து கிட்டத்தட்ட 41 வருடங்களாகிவிட்ட நிலையிலும், ஒவ்வொரு நினைவு நாளன்றும் அவரது நினைவகத்தில் தவறாது சமபந்தி நடைபெறுகிறது. இந்த சமபந்தியிலும், தொடர்ந்து நடைபெறும் லெவே நினைவு சொற்பொழிவிலும் அனைத்து பிரிவு மக்களும் கலந்து கொண்டு அவரது நினைவை போற்றுகின்றனர்.
பேருக்கு வாழ்வது வாழ்க்கை அல்ல, ஊருக்கு வாழ்வதே வாழ்க்கை என்பதை வலியுறுத்தும் வகையில் வாழ்ந்து சருகணி மண்ணின் புதைந்துள்ள மரகதமாம் அருட்தந்தை லெவேவிற்கு நமது இதயபூர்வமான அஞ்சலிகள் இன்றும், என்றும்.
இது தொடர்பான மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ளவேண்டியவர் ஜேம்ஸ் லூர்து: 9894243421.
- எல்.முருகராஜ்

Advertisement


வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
M G Rayen - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
16-மார்-201422:35:27 IST Report Abuse
M G Rayen மனசு நிறைந்து போனது - இவர் ஒரு புனிதர்
Rate this:
Cancel
Subramanian - Huizhou,சீனா
16-மார்-201417:27:41 IST Report Abuse
Subramanian இவர்போன்ற மகான்கள் எங்கே - இந்த கால ஆட்சியாளர்கள், அரசியல்வாதிகள் எங்கே - தினமலர் நாளிதழுக்கு நன்றி, அருட்தந்தை லெவே போன்றவர்களை வெளி உலகத்திற்கு தெரியபடித்தியதற்கு. எங்கோ பிறந்து எங்கோ வாழ்ந்து எங்கு வாழ்கின்றோமோ அங்குள்ளவர்கள் அனைவருக்கும் துணையாக இருந்து உதவியதற்கு அந்த ஊர் மக்களின் சமபந்தி ஒன்றே போதும் - அருட்தந்தை லெவே இக்கு இதய நினைவஞ்சலிகள்
Rate this:
Cancel
Gspillai Ganesh - Kuala Lumpur,மலேஷியா
16-மார்-201415:04:56 IST Report Abuse
Gspillai Ganesh வாழ்த்துக்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X