"ஆளுங்கட்சி வேட்பாளரை ஆதரிச்சு, பிரசாரத்துக்கு சி.எம்., வரப்போறாங்களே. ஏதாவது விஷேசம் இருக்கா,'' என, விவாதத்தை துவக்கியவாறு, ரவா கேசரி கொடுத்து, உபசரித்தாள் சித்ரா.
"விசேஷம் இல்லாம இருக்குமா? தடபுடலா ஏற்பாடு செஞ்சுக்கிட்டு இருக்காங்க. மொத்தம் 14 ஏக்கர்ல மைதானம் தயார் செஞ்சிருக்காங்க. மேடை எப்படி அமைக்கணும், சி.எம்., எந்த வழியில் வருவாங்க, கார் எந்த இடத்தில் நிற்கும்னு எல்லாத்தையுமே வாஸ்து பார்த்து செய்றாங்க. ஹெலிகாப்டரில் சி.எம்., வந்திறங்கிற இடத்துக்கும், பொதுக்கூட்டம் நடக்குற இடத்துக்கும் இடையில, ரெண்டு கிலோ மீட்டர் தூரம் இருக்கு. ஒரு இடத்தில் கூட இடைவெளி தெரியாத அளவுக்கு, மக்கள் தலை தெரியணும்னு உத்தரவு போட்டிருக்காங்க. ரோட்டுக்கு ரெண்டு பக்கமும், மக்களை நிக்க வைக்கணும்னு சொல்லியிருக்காங்க,' என்றாள் மித்ரா.
"கூட்டணியில் இருந்து கம்யூ., கட்சிக்காரங்க பிரிஞ்சிட்டாங்களே, ஆளுங்கட்சிக்கு பாதிப்பு வராதா,'' என சித்ரா, அடுத்த கேள்வியை வீசினாள்.
"கம்யூ., கட்சிக்காரங்ககிட்ட பெரிய அளவுல, ஓட்டு வங்கி இல்லாட்டினாலும் கூட, கடைசி நேரத்துல கழட்டி விட்டதால, மக்கள் மத்தியில் சலசலப்பு இருக்கு. பா.ஜ., அணியில், தே.மு.தி.க., - பா.ம.க., - கொ.ம.தே.க., புதிய நீதிக்கட்சி சேர்ந்திருக்கு. கடந்த பாராளுமன்ற தேர்தலில், தே.மு.தி.க., தனியா நின்னு, 87 ஆயிரம் ஓட்டு வாங்குச்சு. அந்தியூர், பவானி ஏரியாவுல, பா.ம.க.,வுக்கு ஓட்டு வங்கி இருக்கு. மோடி அலை, இந்து முன்னணி ஓட்டு, கவுண்டர் ஓட்டு என கணக்குப்போட்டு பார்க்குறாங்க. தே.மு.தி.க.,வுக்கு திருப்பூர் ஒதுக்குனா, அ.தி.மு.க. கோட்டையாக இருந்தாலும், ஆளுங்கட்சி வேட்பாளருக்கு சிக்கல் வரும்; ஜெயிக்கிறதுக்கு கூட போராடணும்னு கட்சிக்காரங்களே பேசிக்கிறாங்க,'' என்றாள் மித்ரா.
"அது சரி, தி.மு.க., - காங்கிரஸ் தரப்புல பேச்சையே காணோமே,'' என, சித்ரா கேட்டு முடிப்பதற்குள்,
"தி.மு.க., சார்பில் யாரை நிறுத்தலாம்னு வேட்பாளரை தேடிக்கிட்டு இருந்தாங்க. முன்னாள் மேயர், முன்னாள் எம்.எல்.ஏ., முன்னாள் நகராட்சி தலைவருன்னு பலரையும் கேட்டுருக்காங்க. தேர்தல் களத்தில் இறங்க, இவுங்க யாருமே விருப்பப்படலை. அதனால, ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவங்களுக்கு கொடுக்கலாம்னு பரிந்துரை செஞ்சிருக்காங்க. கூட்டணிக்கு காங்கிரஸ் வந்தா, திருப்பூரை தள்ளி விடலாம்னு நெனைச்சாங்க. காங்கிரஸ் வராததால, வேறு வழியில்லாம, கோபியை சேர்ந்த டாக்டரை அறிவிச்சிருக்காங்க. காங்கிரஸ் தரப்பில், ஈரோட்டுக்காரரை நிறுத்த முடிவு செஞ்சிருக்கா,'' என்ற மித்ரா,
"தொழில் துறையினர் என்ன நெனைக்கிறாங்கன்னு, நீங்க விசாரிச்சிருப்பீங்களே. அதைச்சொல்லுங்க,'' என கேள்வி கேட்டு, நிறுத்தினாள்.
"தொழில் துறையை சேர்ந்தவங்க, மத்திய அரசின் ஆதரவை எப்பவும் விரும்புவாங்க. கொஞ்சம் மாத்தி யோசிச்சாங்கன்னா, அவுங்களுக்கே ஆபத்தாகிடும். ஏற்கனவே, பல கஷ்டத்தை அனுபவிச்சிட்டாங்க. அதனால, பட்டிமன்றம் நடத்துறதைபோல், தனித்தனியா ஆலோசிக்கிறாங்க. மாநில அரசையும் பகைச்சுக்க கூடாது; அதேநேரத்துல, நாம விரும்புற, மத்திய அரசு அமையணும்னு நெனைக்கிறாங்க. கூட்டல், கழித்தல் கணக்கை போட்டுப்பார்க்குறாங்க. இறுதியா, களத்தில், வேட்பாளர்களா, யார் யார் நிற்க போறாங்கன்னு, பார்த்துட்டு, முடிவு செய்யலாம்னு, இருக்காங்க,'' என்றாள் சித்ரா.

உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE

Advertisement