வந்தாச்சு எலக்ஷன்... வாரிக்கொட்டுது கலெக்ஷன்!

Added : மார் 20, 2014
Share
Advertisement
''பிரைவேட் ஆஸ்பிடல்ஸ்ல நடக்குற அநியாயத்துக்கு அளவே இல்லாமப் போயிட்டு இருக்கு; சரி...சரி... நான் அப்புறம் கூப்பிடுறேன்!,'' என்று மொபைல் பேச்சைத் துண்டித்துக் கொண்டே, சித்ராவின் வீட்டுக்குள் நுழைந்தாள் மித்ரா.சத்தம் கேட்டு வெளியே வந்த சித்ரா, ''என்னடி! எங்க போனாலும் ஆஸ்பிடல் பேச்சா இருக்கு? நீ என்ன பேசிட்டு வந்த?,'' என்று கதவைத் திறந்து விட்டாள்.''அந்த 17
வந்தாச்சு எலக்ஷன்... வாரிக்கொட்டுது கலெக்ஷன்!

''பிரைவேட் ஆஸ்பிடல்ஸ்ல நடக்குற அநியாயத்துக்கு அளவே இல்லாமப் போயிட்டு இருக்கு; சரி...சரி... நான் அப்புறம் கூப்பிடுறேன்!,'' என்று மொபைல் பேச்சைத் துண்டித்துக் கொண்டே, சித்ராவின் வீட்டுக்குள் நுழைந்தாள் மித்ரா.
சத்தம் கேட்டு வெளியே வந்த சித்ரா, ''என்னடி! எங்க போனாலும் ஆஸ்பிடல் பேச்சா இருக்கு? நீ என்ன பேசிட்டு வந்த?,'' என்று கதவைத் திறந்து விட்டாள்.
''அந்த 17 வயசுப் பையனுக்கு எச்.ஐ.வி., பரப்பி விட்டதைப் பத்திதான்... ரத்தம் கொடுத்ததுல தப்பே இல்லைன்னா, அந்தப் பையனுக்கு எங்க இருந்துதான் வந்துச்சு எச்.ஐ.வி.,? இங்க இல்லேன்னா, வேற ஏதோ ஆஸ்பிடல்லதான, இந்த தப்பு நடந்திருக்கணும்...! அதைக் கண்டு பிடிக்க வேணாமா? '' என்று கொதித்தாள் மித்ரா.
''இது பரவாயில்லடி...! உடைஞ்ச எலும்பையெல்லாம் 'ஜாயின்ட்' பண்ற ஆஸ்பிடல்ல, போன வாரம் 35 வயசுக்காரர் ஒருத்தர் ஆக்சிடென்ட்டாகி, 'அட்மிட்' ஆயிருக்காரு; கஷ்டப்படுற குடும்பமா இருந்தாலும், ஒன்றரை லட்ச ரூபா செலவழிச்சு, ஆபரேஷன் பண்ணிருக்காங்க; ஒரு வாரத்துலயே எழுந்து நடந்துட்டாரு,''
''அப்புறமென்ன பிரச்னை...?''
''முழுசாக் கேளுடி! டிஸ்சார்ஜ் பண்றதுக்கு முன்னாடி, ஒரு நாள் காலையில திடீர்ன்னு அவரை ஆம்புலன்ஸ்ல ஏத்தி இருக்காங்க. வயசான அவுங்க அப்பா, 'எங்கே கூப்பிட்டுப் போறீங்க'ன்னு கேட்டதுக்கு ஜி.எச்., போறோம்னு சொல்லிருக்காங்க; அவரும் வர்றேன்னு சொன்னதுக்கு, 'நீங்க வெறும் பனியனோட இருக்கீங்க; பஸ்சுல ஏறி வாங்க'ன்னு பேஷன்டை மட்டும் கொண்டு போயிருக்காங்க!
அப்புறம் அந்த பெரியவரு, பஸ் ஏறி, ஜி.எச்., போயிருக்காரு; படிக்காத அவரு, மகன் பேரைச் சொல்லி வார்டு வார்டா ஏறி இறங்கிருக்காரு; எங்கேயுமே இல்லை...கடைசில, 'இப்பத்தான் ஒரு அனாதைப் பிணத்தை ஆம்புலன்ஸ்'ல கொண்டு வந்து போட்டாங்க. பாருங்க'ன்னு சொல்லிருக்காங்க. போய்ப்பார்த்தா...அது அவரோட பையன் பிணம்தானாம்...!,'' என்றாள் சித்ரா.
ஒரு நிமிடம் அதிர்ந்தவளாய், ''என்னக்கா சொல்ற?,'' என்று எழுந்தாள் மித்ரா.
''ஆமாடி! என்ன ஆச்சு ஏதாச்சுன்னு கூடச் சொல்லாம, இப்படி வந்து அனாதைப் பொணம்னு போட்டுட்டுப் போயிருக்காங்க. ஆஸ்பிடல்ல போய்க் கேட்டதுக்கு, 'ஹார்ட் அட்டாக்'ல செத்துட்டாருன்னு அசால்ட்டா சொல்லிருக்காங்க. இவுங்களையெல்லாம் என்னதான் பண்றது?''
''ஒருத்தரையாவது 'அரெஸ்ட்' பண்ணுனாதான் அடுத்தவுங்களுக்கு பயம் வரும்; ஆனா, ஆஸ்பிடல்கள்ல இருந்து இந்த மாதிரி 'கம்பிளைன்ட்' வந்தா, அதை வச்சு காசு சம்பாதிக்கிறதுலதான் போலீஸ் குறியா இருக்கு. கோயம்புத்துார்ல மெடிக்கல் டூரிசம் நல்லா 'பிக்கப்' ஆயிட்டிருக்கிற நேரத்துல, இப்படியெல்லாம் பண்ணுனா, பாரின்காரங்க இங்க எப்படி ட்ரீட்மென்ட்டுக்கு நம்பி வருவாங்க?,''
''ஜி.எச்.,ன்னு நீ சொன்னதும்தான் ஞாபகத்துக்கு வருது; புதுசா வந்திருக்கிற 'டீன்' மேடம், சாட்டைய சுழட்டி அடிக்கிறாங்களாமே...தெரியுமா?,'' என்றாள் சித்ரா.
''ஆமாக்கா! நானும் கேள்விப்பட்டேன்; இதுவரைக்கும், ஒரே நேரத்துல மலை மாதிரி 'பைல்'களை வச்சு, மொத்தமா கையெழுத்து வாங்கிருந்திருக்காங்க. அதே மாதிரி, இப்ப கொண்டு வந்ததுக்கு 'நானென்ன மனுஷியா? மாடா?'ன்னு 'லெப்ட் ரைட்' வாங்கி, இனிமே வாராவாரம் அந்தந்த பைல்களை வைக்கணும்னு ஆர்டர் போட்டாங்க,'' என்றாள் மித்ரா.
''பரவாயில்லையே! ஜி.எச்.,ல நடந்த இன்னொரு ஊழலையும் கண்டு பிடிச்சிருக்காங்க; கவர்மென்ட்ல 'சப்ளை' பண்ணாத 'பிப்ரஸ்லீன் டேசோ பேக்டெம்'ங்கிற ஆன்டிபயாடிக் ஊசியை வெளியில வாங்குறதுல, மாசம் ரெண்டு லட்ச ரூபா அடிச்சிருக்காங்க. அந்த ஊசியோட ஒரிஜினல் விலை 108 ரூபாதான்; அதை 330 ரூபாய்க்கு வாங்குனதா கணக்கு காமிச்சிருக்காங்க!,''
''அடப்பாவிகளா!''
''இதேபோல, 'ஸ்கின் கிராப்ட் பிளேடு' ஒன்னு 140 ரூபாய்க்குக் கிடைக்கிறதை, 300 ரூபான்னு கணக்கெழுதிருக்காங்க! இந்த 'டீன்' காலத்துலயாவது 'கங்காணி'களோட ஆட்டம் ஓயுமான்னு தெரியலை!,'' என்றாள் சித்ரா.
''அக்கா! அஞ்சே மணி நேரத்துல அஞ்சு கிலோ குறைஞ்சிருச்சாம்!''
''என்னடி...அரிசியா...பருப்பா?,''
''சாப்பிடுற மேட்டர் இல்ல! இது சாப்பிட்ட மேட்டர்...போன வாரம் காந்திபுரத்துகிட்ட அனுமதியில்லாம கொண்டு வந்த 30 கிலோ வெள்ளியைப் போலீஸ்காரங்க பிடிச்சிருக்காங்க; எலக்ஷன் ஆபீசர்களுக்கு தகவல் சொல்லி...அஞ்சு மணி நேரம் கழிச்சுதான் அவுங்க வந்திருக்காங்க. அதுக்கு இடையில 30 கிலோ வெள்ளி, 25 கிலோ ஆயிருக்கு!'' என்றாள் மித்ரா.
''இதே போல, திருச்சி துாவாக்குடிக்குப் பக்கத்துல இருக்கிற ஒரு கோவில் கும்பாபிஷேகத்துக்கு, கோயம்புத்துார்ல இருந்து 1500 தங்கமுலாம் பூசுன ஐம்பொன் நாணயங்களைக் கொண்டு போயிருக்காங்க. அதை சூலுார் பக்கத்துல போலீஸ் பிடிச்சு, சம்மந்தப்பட்ட எலக்ஷன் ஆபீசர்ட்ட ஒப்படைச்சிட்டாங்க.
கும்பாபிஷேகத்துக்கு முத நாள் வரைக்கும் 'காயின்' கிடைக்காம, கோவில்காரங்க தவிச்சுப் போயிட்டாங்க; சூலுார் வந்து, விஷயத்தைச் சொல்லிருக்காங்க; ஆனா...25 ஆயிரம் ரூபா பணத்தை வாங்கிட்டுதான் அதெல்லாம் கொடுத்திருக்காங்க,'' என்றாள் சித்ரா.
''இதுக்கு முன்னாடி இல்லாத அளவுக்கு இந்த எலக்ஷன்ல செம்ம காசு பார்க்கிறதா 'கம்பிளைன்ட்' வருது! நகைக்கடைகளுக்குப் பக்கத்துலயே மாறு வேஷத்துல நின்னுக்கிட்டு, வெளியில வர்றவுங்களைப் பிடிச்சு, கணக்குக் கேட்டு, காசு பறிக்கிறாங்களாம்!'' என்றாள் மித்ரா.
''ஆளும்கட்சிக்காரங்க காசு கொண்டு போற 'மூவ்மென்ட்' எல்லாமே, முக்கியமான ஆபீசர்களுக்குத் தகவல் சொல்லிட்டுதான் நடக்குதாம்; அதை மட்டும் பிடிக்கிறதேயில்லை!,'' என்றாள் சித்ரா.
'' ஆளும்கட்சியில இன்னும் எலக்ஷன் சுறுசுறுப்பைப் பார்க்க முடியலையே...என்ன 'ரீசன்'னு தெரியுமா?,'' என்றாள் மித்ரா.
''நம்ம சிட்டி வி.ஐ.பி., மாவட்டக்கழக ஆபீஸ்ல வந்து உட்கார்ந்துட்டு, மண்டலம், வட்டம், கவுன்சிலர் எல்லாரையும் வரச் சொல்லி, 'வார்டுல என்ன வேலை நடக்குது? பிரச்னை எல்லாம் தீர்த்து வச்சீங்களா?'ன்னு கேட்டு, நச்சரிக்கிறாராம்; ரெண்டரை வருஷமா எந்த வேலையையும் பார்க்காம, இப்போ அவரு தப்பிக்கிறதுக்காக, எங்களை 'டார்ச்சர்' பண்றாரேன்னு கவுன்சிலர்க புலம்புறாங்க!,'' என்றாள் சித்ரா.
''கண் கெட்ட பிறகு சன் சல்யூட்டா? மறந்தே போயிட்டேன்...அந்த பில்டிங், போர்டு, வசூல் மேட்டரைக் கண்டு பிடிச்சியா?,''
''ஓ! கோபாலபுரத்துல 'அப்ரூவல்' இல்லாமக் கட்டுன கட்டடத்துல, 'அனுமதியில்லாத கட்டடம்; யாரும் இங்கே வாடகைக்கு வர வேண்டாம்'னு 'போர்டு' வைக்கச் சொல்லி
கமிஷனர் மேடம் சொல்லியும், அந்த ஏரியாவுக்குரிய ஆபீசர், 'போர்டு' வைக்காமலே காசு பார்த்தாரே...அதைத்தான சொன்ன...!,''
''ைஹய்யோ...கரெக்டா பிடிச்சிட்டியே; இன்னிக்கு வரைக்கும் அந்த 'பில்டிங்'ல போர்டு வைக்கலை...அது தெரியுமா?,'' என்றாள் மித்ரா.
''காசு வாங்குன பிறகு எப்படி வைக்க முடியும்?,'' என்றாள் சித்ரா.
''சரி! அதை விடு...!
ஷேர் ஆட்டோக்கள் சார்புல, ஒரு போலீஸ் ஆபீசருக்கு மாசாமாசம் 30 ஆயிரம் ரூபா மாமூல் போகுதாம்...ஏரியா தெரியுமா?,'' என்றாள் மித்ரா.
''எலக்ஷனுக்குள்ள விசாரிக்கிறேன்... 6 ஏ.சி.,... 4 இன்ஸ்பெக்டர்ஸ்...ஊட்டியில ஒரு பங்களா; மாசம் ஒரு வாட்டி 'ஸ்பெஷல் டூட்டி' யாப் போறாங்க.... எதுக்குன்னு தெரியுமா?,'' என்றாள் சித்ரா.
''நானும் விசாரிக்கிறேன்...இப்போ எனக்குப் பசிக்குது; சாப்பிட என்ன வச்சிருக்க...?,'' என்று எழுந்து சமையலறைக்குள் புகுந்தாள் மித்ரா.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X