பெண்ணின் மார்பகத்தை துண்டித்த பெண் கைது

Added : மார் 24, 2014 | கருத்துகள் (1)
Advertisement

தானே: மகாராஷ்டிராவில், தானே அருகே பிவாண்டி நகரம் உள்ளது. இது, ஜவுளித் தொழிலுக்கு புகழ் பெற்றது. ஏராளமான தொழிலாளர்கள் இங்கு வந்துசெல்வதால், பாலியல் தொழிலில் ஈடுபடுவோர் எண்ணிக்கை அதிகரித்தது. வெளி மாநிலங்களில் இருந்து, புரோக்கர்களின் மூலம் பெண்களை வரவழைத்து, பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி, பலர், லாபம் சம்பாதித்து வருகின்றனர். இங்குள்ள விபசார விடுதி ஒன்றில், வெளி மாநிலத்தில் இருந்து, புதிதாக அழைத்து வரப்பட்ட, 29 வயது மதிக்கத்தக்க இளம்பெண்ணை, பாலியல் தொழிலில் ஈடுபடும்படி கட்டாயப்படுத்தினர். அந்த பெண், இதற்கு இணங்கவில்லை. ஆவேசமடைந்த, விபசார விடுதி உரிமையாளரான பெண், தன்னுடன் இருந்த ஆண் அடியாட்களின் துணையுடன், அந்த பெண்ணின் மார்பகங்களை துண்டித்து, சித்ரவதை செய்துள்ளார். இதில், அந்த பெண், பரிதாபமாக இறந்தார்.
விபசார விடுதியின் உரிமையாளரான ரூபி என்ற பெண், போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sulochana kannan - sydney,ஆஸ்திரேலியா
24-மார்-201404:57:58 IST Report Abuse
sulochana kannan பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி பலர் '"லாபம் "சம்பாதித்தனரா? இதில் என்ன முதலீடு, என்ன லாபம்? பணம் சம்பாதித்தனர் என்றுதானே இருக்க வேண்டும் ? பிறகு இதுதான் நேர்மையாக இருக்க முயல்பவர்களுக்கு ஏற்படும் கொடுமை.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X