கை விடப்பட்ட படகு கண்டு பிடிப்பு| Dinamalar

கை விடப்பட்ட படகு கண்டு பிடிப்பு

Added : மார் 25, 2014
Advertisement
கை விடப்பட்ட படகு கண்டு பிடிப்பு

4. இந்த மீனவர் குடியிருப்பில் பிரசாந்த் ஹேமந்து தாணு என்பவரும் (ப்ராசிக்யூஷன் சாட்சி 29) வசித்து வருகிறார். மீன் பிடித்தலே இவரது தொழில். வயது 24. தன்னிடம் ஒரு மீன்பிடி படகு உள்ளதாகவும், 2008 நவம்பர் 26 இரவு 9.15 மணி அளவில் தனது உறவினர்களோடு கடலில் மீன் பிடிக்கச் சென்றதாகவும் கோர்ட்டில் கூறியுள்ளார். நரிமான் பாயின்டை நெருங்கும்போது, வேண்டாமென்று கைவிடப்பட்டது போலத் தோன்றும் ரப்பர் படகு ஒன்றை இவர்கள் பார்த்துள்ளார்கள். யமஹா இஞ்சின் பொருத்தப்பட்ட இந்தப் படகுக்குள் சில லைப் ஜாக்கெட்டுகள் கிடந்ததையும் பார்த்துள்ளனர். கடல் அலைகளால் தள்ளப்பட்டு முன்னும் பின்னும் ஆடிக் கொண்டிருந்தது. இந்தப் படகை இழந்து இதன் உதவியாளர் நஷ்டப் படக்கூடாதென்று (இரக்க மனோபாவத்துடன்) அந்தப் படகைத் தங்களது மீன்பிடிப் படகு ட்ராவருடன் கட்டி, பத்வார் பார்க் மீனவர் குடியிருப்புக்கு (அதாவது அந்தப் படகு எங்கே முதலில் கரையை அடைந்ததோ அதே இடத்துக்கு) அருகில் கொண்டுவந்தனர். பின்னர் அவர் (ஹேமந்த்தாணு) கடற்கரைக் காவலர்களிடம் (கோஸ்ட் கார்டு) தாங்கள் கண்ட கைவிடப்பட்ட படகு பற்றித் தெரிவித்தனர். பின்னர் போலீஸ் அங்கு வந்து படகு பற்றித் தெரிவித்தனர். பின்னர் போலீஸ் அங்கு வந்து படகுப்பொறப்பைப் ""பஞ்ச் நாமா'' மூலம் பொறுப்பேற்றுக் கொண்டனர் என்றும் அவர் கூறியுள்ளார். (போலீஸ் இந்தப் படகைக் கைப்பற்றியது, படகில் இருந்த பொருட்கள் பற்றிப் பிறிதொரு கட்டத்தில் நாம் பரிசீலிப்போம் என்று நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்) இந்தப் படகை (பொருள் 156) இந்த சாட்சி, தான் கண்ட படகு இதுவேயென்று நீதிமன்ற சாட்சியத்தில் கூறியுள்ளார் என்பது மட்டும் இப்போது போதுமானது. நரிமான் பாயின்டில் கைவிடப்பட்ட ரப்பர் படகை பத்வார் பார்க் மீனவர் குடியிருப்புக்குத் தள்ளிக்கொண்டு வந்தது இதுவேயென்று கோர்ட்டில் அடையாளம் காட்டியுள்ளார். இந்தக் கருப்புப் படகில் இருந்த மஞ்சள் வரிகளைக் கொண்டே தான் அடையாளம் காட்ட முடிந்ததென்றும் இந்த சாட்சி கூறியுள்ளார்.


ரயில் நிலையத்தில் கண்மூடித்தனமாக சூடு:

5. பத்வார் பார்க்கில் இருந்து மனுதாரர் கசாப், அவனது கூட்டாளி அபு இஸ்மாயில் இருவரும் டாக்சி பிடித்துக்கொண்டு சத்ரபதி சிவாஜி ரயில்வே ஸ்டேஷனுக்குச் சென்றனர். டாக்சியில் பின் இருக்கையில் அமர்ந்துகொண்டு, டிரைவர் சீட்டுக்கு அடியில் ஆர்டிஎக்ஸ் வெடிகுண்டு வைத்து, ஒண்ணேகால் மணி நேரத்தில் வெடிக்குமாறு கால அளவு குறித்ததாகவும், கசாப் மாஜிஸ்திரேட்டிடம் தெரிவித்துள்ளான். (விலி பார்லே குண்டுவெடிப்பு என்ற தலைப்பில் டாக்சி, அதன் டிரைவர், இவர்களுக்கு பின் அந்த டாக்சியில் பயணம் செய்தவர்கள் கதி பற்றிப் பின்னர் பரிசீலிக்கலாம்) டாக்சியில் இருந்து சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்தில் இறங்கியதும் மனுதாரர் (கசாப்) மற்றும் அவனது கூட்டாளி இருவரும் மக்கள் கூட்டத்தை அந்த ரயில் நிலையத்தில் கண்மூடித்தனமாகச் சுடும் காரியத்தில் இறங்கினார்கள். இந்த ச.சி. ரயில்நிலைய வேட்டையில் கொல்லப்பட்டவர்கள் 52, காயமடைந்தோர் 109.
6. இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட பிற அம்சங்களில் காணப்படுவது போலவே, சத்ரபதி சிவாஜி ரயில் நிலைய சம்பவங்களிலும், நேரில் பார்த்த சாட்சிகள், விஞ்ஞான ரீதியான ஃபாரன்சிக் மற்றும் பிற முக்கியத் தேர்வு முறைகளைக் கொண்டு, உதாரணமாக சுழல் கேமரா பதிவுகளைக் கொண்டு, ப்ராசிக்யூஷன் தரப்பில் விரிவான சாட்சியங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. இந்த இரண்டு கொலையாளிகளின் ஒவ்வொரு அசைவும், அபு இஸ்மாயில் தனது முதல் கையெறி குண்டை ப்ளாட்பாரத்தில் இருந்த பயணிகள் மீது வீசியது முதல், இருவரும் ரயில் நிலையத்தில் இருந்து, பாலத்தின் மூலம் லோகல் லைன் முதல் பிளாட்பாரத்திற்கு வந்த வரையிலும் முற்றிலும் சரியாக ப்ராசிக்யூஷன் ஆவணப்படுத்தியுள்ளது. பிறவகை சாட்சியங்களைப் பின்னர் பரிசீலிக்கலாம். முதலில் கண்ணால் பார்த்த சாட்சிகளைக் கொண்டு மட்டுமே பார்த்தாலும் கூடப் ப்ராசிக்யூஷன் இந்த நீதிமன்றத்தின் முன்பு புகைப்படங்கள் மற்றும் யதார்த்தங்களைக் கொண்டும் ரயில்நிலைய நிகழ்ச்சிகள், சாட்சியங்களை வைத்துள்ளார்கள்.


முதலில் 4 காட்சிகளைப் பற்றிச் சிறிது விரிவாகப் பரிசீலிக்க விரும்புகிறோம். இந்த சாட்சியங்களில் ஒவ்வொன்றிலும் சில முக்கிய அம்சங்கள் காணப்படுகின்றன. மற்ற சாட்சியங்களைப் பின்னர் பரிசீலித்து, சத்ரபதி சிவாஜி ஸ்டேஷன் படுகொலைகள் பற்றிய விரிவான சித்திரத்தை முழுமையான உருவில் காணலாம்.


கசாப்பை அடையாளம் காட்டிய சாட்சிகள்:

7. எல்லா சாட்சிகளுமே மனுதாரரை (கசாப்) எவ்வாறு அடையாளம் காட்டினார்கள் என்பதைப் பற்றிக் குறிப்பிட்ட பின்னர் பிற சாட்சியங்களைப் பற்றிப் பரிசீலிக்கலாம். மனுதாரர் கசாப், அவனது தோழன் அபு இஸ்மாயில் இருவரும் சமமான ஜோடிகளாக இல்லையென்று தெரிகிறது. அபு இஸ்மாயில் 6 அடி உயரமானவன், கசாப் 5 அடி உயரம் மட்டுமே கொண்டவன். இவர்களைச் சேர்ந்து பார்த்த ஒவ்வொருவர் மனத்திலும் இந்த உயர வேற்றுமை நன்கு பதிந்துள்ளது. வெவ்வேறு காட்சிகள் இவர்களின் முகத்தோற்றம் (இருவருமே சிகப்பானவர்கள், அபு இஸ்மாயில் வயது 22 முதல் 35 வரை, கசாப் 22 முதல் 24 வரை) அபு இஸ்மாயில் சராசரி உடற்கட்டும், கசாப் நல்ல பலமான உடற்கட்டும் கொண்டவன். அவர்களது ஆடைகள், கையிலிருந்த பைகள் என்று பல வர்ணனைகளைத் தெரிவித்தாலும், எல்லோருமே அவர்களின் உயரங்களைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்கள். பல சாட்சிகள் அவர்களை உயரமானவன் (லம்பூ) மற்றும் குள்ளமானவன் (புட்கா அல்லது திங்குவா) என்றே அழைக்கிறார்கள்.


மக்கள் தலை தெறிக்க ஓடினர்:

8. சாட்சிகளைப் பார்க்கலாம். சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்தில் நடந்த குற்றங்கள் பற்றிச் செய்தி தெரிவித்தவர் (ப்ராசிக்யூஷன் சாட்சி 49) பரத் ராமச்சந்திர பாஸ்லே. இந்த ரயில் நிலையத்தில் அமைந்துள்ள காவல் நிலையத்தில் தாக்குதல் நடந்தபோது இங்கு இவர் துணை ஆய்வாளர். சி.எஸ்.டி ரயில் நிலையத்திற்குள் லோகல் தடங்கள் மற்றும் முக்கிய தடங்களுக்கு இடையே இந்தக் காவல் நிலையம் அமைந்துள்ளது. நவம்பர் 26, 27 இரவில் இவர் ட்யூடியில் இருந்தார். இரவு 8.30 மணிக்கு ட்யூடிக்கு வந்தார். இரவு சுமார் 9.50 மணியளவில் அவர் காவல் நிலையத்தை விட்டு வெளியே வந்து கொண்டிருக்கும்போது, ரயில் நிலையத்தின் மெயின் லைன், மெயின் ஹாலில் இருந்து துப்பாக்கிச் சத்தத்தைக் கேட்டார். காவல் நிலையத்திலிருந்து இந்த மெயின் ஹால் சுமார் 50-60 அடி தூரத்தில் உள்ளது. உடனே, வடபுறத்தில் டாக்சி நிற்குமிடம் வழியாக மெயின் ஹாலை நோக்கிச் சென்றார். அப்போது ட்யூடியில் இருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷஷன்க் ஷிண்டே தென்புறம் இருந்த எஸ்பிஐ ஏடிஎம் பூத்தில் இருந்து இந்த ஹாலை நோக்கி ஓடினார். இங்கு வரும்போதே இரண்டு பயங்கரவாதிகள் மெயின் ஹாலில் உட்கார்ந்திருந்த பயணிகள் மீது ஏகே47 துப்பாக்கியால் சரமாரியாகச் சுட்டுக் கொண்டிருப்பதைக் கண்டார். பலர் ரத்தவெள்ளத்தால் காயம்பட்டுக் கிடந்தனர். பலர் அந்த மெயின் ஹாலை விட்டு ஓடித் தப்ப முயன்றனர். அங்கிருந்த பொதுக்கழிப்பிடத்தின் அருகிலிருந்த இடத்திலிருந்து இரண்டு பயங்கரவாதிகளும் சுட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்ததாக பாஸ்லே கூறியுள்ளார். பொதுக்கழிப்பிடம் இருந்த இடம் பற்றியும் அவர் விளக்கமாகக் கூறியுள்ளார். அவர் முதலில் இந்த இரண்டு பயங்கரவாதிகளையும் பார்த்தபோது, அவர்கள் மெயின் ஹாலில் சுமார் 40 அடி தூரத்தில் இருந்தனர். மெயின் ஹாலில் நல்ல விளக்கு வெளிச்சம் இருந்ததால் பயங்கரவாதிகளை பாஸ்லேயால் நன்கு பார்க்க முடிந்தது.


குள்ளமான பயங்கரவாதி:

9. பின்னர், இரண்டு பயங்கரவாதிகளின் தோற்றம் பற்றி பாஸ்லே விவரித்தார். ஒருவன் குள்ளமானவன். வயது 22-24 இருக்கலாம். நீண்ட தலைமுடி கழுத்து வரையில் தொங்கியது. நல்ல எடுப்பான தோற்றம். நல்ல உடற்கட்டு. நீல நிற டி-ஷர்ட் அணிந்திருந்தான். தோளில் ஒரு ரெக்சின் பேக் இருந்தது. கைகளில் ஏகே47 துப்பாக்கி. மற்றவன் உயரமானவனாக இருந்தான். அவனுக்கும் நல்ல தோற்றம். சுமாரான உடற்கட்டு. வயது 22-25 இருக்கும். இவன் கருப்பு டி-ஷர்ட் அணிந்திருந்தான். இவன் தோள்களிலும் ரெக்சின் பை இருந்தது. இவன் கையிலும் ஏகே47 இருந்தது.
10. மனுதாரர் (கசாப்) பயங்கரவாதிகள் இருவரில் ஒருவர் என்று அடையாளம் காட்டவும், குள்ளமானவர், நல்ல உடற்கட்டு உள்ளவர், நீலநிற டி-ஷர்ட் அணிந்திருந்தார் என்பதை அடையாளம் காட்டவும் சாட்சி (இன்ஸ்பெக்டர் பாஸ்லே) சற்றே பேச்சை நிறுத்தினார்.

11. அபு இஸ்மாயில் இடமிருந்து கைப்பற்றப்பட்ட அடையாள அட்டை (ஆர்டிகிள்61(6) சாட்சிகளிடம் காட்டப்பட்டது. அதிலிருந்த புகைப்படம் மனுதாரரின் (கசாப்) கூட்டணி பயங்கரவாதியுடையதே என்று அடையாளம் காட்டினார்.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X