சம்பவம் செய்தி

தமிழ்நாடு

திவாகரன் வழக்கு ஒத்திவைப்பு

Added : மார் 25, 2014
Advertisement

திருவாரூர்: சசிகலாவின் சகோதரர், திவாகரன் மீதான குற்ற வழக்கு விசாரணை, ஒத்திவைக்கப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டம், ரிஷியூரைச் சேர்ந்தவர், பாலசுப்ரமணியன். இவர் வீட்டை, ஜே.சி. பி., இயந்திரம் மூலம் இடித்து சேதப்படுத்தியதாக, திவாகரன் உள்ளிட்ட ஒன்பது பேர் மீது, போலீசார் வழக்குப் பதிந்தனர். வழக்கு விசாரணை, நீடாமங்கலம் கோர்ட்டில் நடந்து வருகிறது. நேற்று நடந்த வழக்கு விசாரணைக்கு, உடல் நலக் குறைவு எனக் கூறி திவாகரன், கோர்ட்டில் ஆஜராகவில்லை. இதையடுத்து, வழக்கை அடுத்த மாதம், 22ம் தேதிக்கு, நீதிபதி முருகன் ஒத்தி வைத்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X