பொது செய்தி

இந்தியா

இப்ப என்ன செய்வீங்க...: பறக்கும் படையிடம் தப்பிக்க ரயிலில் " பயணிக்கிறது" தேர்தல் பணம்

Added : ஏப் 05, 2014 | கருத்துகள் (13)
Share
Advertisement
புதுடில்லி : தேர்தல் செலவுகளுக்காக வாகனங்கள் மூலம் ஒரு ஊரில் இருந்து மற்றொரு ஊருக்கு கொண்டு செல்லப்படும் அதிக அளவிலான பணம் தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டு வருவது நாடு முழுவதும் தொடர் கதையாகி வருகிறது. உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்டதாக இதுவரை பல கோடி மதிப்பிலான பணம் நாடு முழுவதும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தேர்தல் பறக்கும் படையினரிடம்
Now, poll cash transfer on train tickets, இப்ப என்ன செய்வீங்க...: பறக்கும் படையிடம் தப்பிக்க ரயிலில் பயணிக்கிறது தேர்தல் பணம்

புதுடில்லி : தேர்தல் செலவுகளுக்காக வாகனங்கள் மூலம் ஒரு ஊரில் இருந்து மற்றொரு ஊருக்கு கொண்டு செல்லப்படும் அதிக அளவிலான பணம் தேர்தல் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டு வருவது நாடு முழுவதும் தொடர் கதையாகி வருகிறது. உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்டதாக இதுவரை பல கோடி மதிப்பிலான பணம் நாடு முழுவதும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தேர்தல் பறக்கும் படையினரிடம் இருந்து தப்பிக்க, ரயில் மூலம் பணத்தை கொண்டு செல்லும் பல யுக்திகளை அரசியல்வாதிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இ-புக்கிங்கில் பண மாற்றம் :

இ-புக்கிங் முறையில் மொத்தமாக அதிகளவிலான டிக்கெட்களை ஒரு இடத்தில் புக் செய்து, அதை வேறு இடத்தில் ரத்து செய்து விட்டு பணத்தை பெறுவதன் மூலம் ஒருவரின் வங்கி கணக்கில் இருந்து, அரசு கணக்கு மூலமாகவே மற்றொருவரின் கணக்கிற்கோ அல்லது பலரின் கணக்கிற்கோ மாற்றப்படுகிறது. இந்த பணம் தேர்தல் பணிக்காகவும், ஓட்டுக்காகவும் கொடுக்கப்பட்டு வருகிறது. இதனால் எந்த இடையூறுமின்றி அதிகளவிலான தேர்தல் பணம் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. நிதித்துறை புலனாய்வு அமைப்பு நடத்திய ஆய்வில் இது தெரிய வந்துள்ளது. புலனாய்வுத்துறை அளித்த தகவல் குறித்து சமீபத்தில் நடைபெற்ற நிதித்துறை அமைச்சக கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாகவும், இந்த வகையில் தேர்தலுக்காக கொண்டு செல்லப்படும் பணம் பற்றி உன்னிப்பாக கண்காணிப்படுவதாகவும் வரவாய் புலனாய்வுத்துறை இயக்குனரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ரயிலில் பயணிக்கும் பணம் :

ரயில் டிக்கெட் புக்கிங் மூலம் பணம் பரிமாற்றப்படுவது வட இந்தியாவிலேயே அதிகம் நடைபெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காத்திருப்போர் பட்டியலில் அதிக அளவிலான டிக்கெட்டை புக் செய்து ரத்து செய்வதன் மூலம் ரூ.2 லட்சம் முதல் ரூ.4 லட்சம் வரை அரசியல்வாதிகளின் கணக்கிற்கு மாற்றப்படுகிறது. பயணம் செய்வதற்கு பல நாட்களுக்கு முன்னரே புக் செய்து ரத்து செய்வதன் மூலம் முழு மொத்த பணமும் பெறப்படுகிறது. டில்லியில் இருந்து மும்பைக்கு நாள் ஒன்றிற்கு வந்து செல்லும் 13க்கும் மேற்பட்ட ரயில்களில், ரூ.50 லட்சத்திற்கும் மேற்பட்ட பணம் பயணிக்கிறது.
எப்படியெல்லாம் யோசிக்கறாங்க?

: இ-டிக்கெட் புக்கிங் மூலம் மட்டுமின்றி, ஆட்கள் மூலமும் பணம் கொண்டு செல்லப்படுவதாக கூறப்படுகிறது. இ-டிக்கெட் மூலம் கோடிக் கணக்கான பணத்தை கொண்டு செல்ல முடியாது என்பதால், தங்கம் அல்லது வைரமாக ஒரு இடத்தில் வாங்கி, மற்றொரு இடத்தில் விற்பனை செய்கின்றனர். பிறகு அந்த பணத்தை தமக்கு வேண்டியவர்களிடம் பிரித்து கொடுத்து, பின் மொத்தமாக சேகரித்து கொள்கின்றனர். இந்த முறையிலும் தேர்தல் பணம் அதிக அளவில் ஒரு நகரில் இருந்து மற்றொரு நகருக்கு கொண்டு செல்லப்படுவதாகவும் புலனாய்வுத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sundeli Siththar - North Carolina,யூ.எஸ்.ஏ
05-ஏப்-201412:35:47 IST Report Abuse
Sundeli Siththar அப்பா... எப்படியெல்லாம் யோசிக்கிறாங்கப்பா... மூளையே.. மூளை...
Rate this:
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
05-ஏப்-201412:23:28 IST Report Abuse
D.Ambujavalli எப்பா இவுங்க ரூமெல்லாம் போட்டு யோசிக்க மாட்டாங்க, முழுசா பங்களாவையே பேசிடுவாங்க போல தே.க. வுக்கு ஆயிரம் கண் இருந்தாலும் போதாதே
Rate this:
Cancel
K.Sugavanam - Salem,இந்தியா
05-ஏப்-201412:20:41 IST Report Abuse
K.Sugavanam இது சாத்தியமில்லாதது..ஈ டிக்கட் வாங்குபவரின் எல்லா விபரங்களும் irctc க்கு தெரியும்.மேலும் கேன்சல் செய்து திரும்ப பெரும் பணமும் அதை புக் செய்தவரின் வங்கி கணக்கில் தான் திரும்ப செலுத்த படும்..எனவே அப்படி மாஸ் கேன்சலேஷன் செய்பவரை உடனடியா அடையாளம் காண முடியும்.வங்கி கணக்கையும் சரி பார்க்க முடியும்..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X