பொது செய்தி

இந்தியா

மொய்லி மீதான வழக்கை ரத்து செய்ய வலியுறுத்தல்

Updated : ஏப் 06, 2014 | Added : ஏப் 06, 2014 | கருத்துகள் (2)
Share
Advertisement
புதுடில்லி: ''காஸ் விலை உயர்த்தப்பட்டதில், முறைகேட்டில் ஈடுபட்டதாக, மத்திய அமைச்சர் வீரப்ப மொய்லி, தொழில் அதிபர், முகேஷ் அம்பானி உள்ளிட்டோர் மீது, டில்லி மாநில அரசு வழக்குப் பதிவு செய்தது சட்டவிரோதமானது,'' என, மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல், மோகன் பராசரன் கூறியுள்ளார்.எப்.ஐ.ஆர்., பதிவு: டில்லியில், 'காஸ்' விலை உயர்த்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆம்
மொய்லி மீதான வழக்கை ரத்து செய்ய வலியுறுத்தல்

புதுடில்லி: ''காஸ் விலை உயர்த்தப்பட்டதில், முறைகேட்டில் ஈடுபட்டதாக, மத்திய அமைச்சர் வீரப்ப மொய்லி, தொழில் அதிபர், முகேஷ் அம்பானி உள்ளிட்டோர் மீது, டில்லி மாநில அரசு வழக்குப் பதிவு செய்தது சட்டவிரோதமானது,'' என, மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல், மோகன் பராசரன் கூறியுள்ளார்.



எப்.ஐ.ஆர்., பதிவு:

டில்லியில், 'காஸ்' விலை உயர்த்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த, அப்போதைய டில்லி முதல்வர், அரவிந்த் கெஜ்ரிவால் மத்திய அரசுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டார். இதில், இயற்கை எரிவாயு எடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள, முகேஷ் அம்பானியின், ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு சாதகமாக நடந்து, விலை நிர்ணயம் செய்வதில் முறைகேடு செய்ததாக, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த, மத்திய பெட்ரோலிய அமைச்சர் வீரப்ப மொய்லி, முன்னாள் பெட்ரோலிய அமைச்சர் முரளி தியோரா ஆகியோர் மீதும், முகேஷ் அம்பானி மீதும், முதல் தகவல் அறிக்கையான, எப்.ஐ.ஆர்., பதிவு செய்ய, கெஜ்ரிவால் அரசு உத்தரவிட்டது.



சட்ட விரோதமானது:

இதையடுத்து, அவர்கள் மீது, எப்.ஐ.ஆர்., பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக, மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல், மோகன் பராசரன், மத்திய அரசுக்கு தெரிவித்துள்ள ஆலோசனை: மத்திய அரசின் கொள்கை முடிவுகளில் தலையிட, மாநில அரசுக்கு எவ்வித அதிகாரமும் கிடையாது. கெஜ்ரிவால் தலைமையிலான, முன்னாள் டில்லி மாநில அரசின் இந்த செயல், அரசியல் சாசனத்திற்கு எதிரானது; சட்ட விரோதமானது. குறிப்பிட்ட நபர்கள் மீதான காழ்ப்புணர்ச்சியின் காரணமாகவே, கெஜ்ரிவால் அரசு, அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது. இவ்வாறு, அவர் தெரிவித்து உள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sutha - chennai,இந்தியா
06-ஏப்-201408:20:23 IST Report Abuse
Sutha காங்கிரஸ் என்றாலே ஊழல் என்ற நிலைமைக்கு ,காங்கிரசின் நாட்டுப் பற்றில்லாத வெளி நாட்டுக்காரி சோனியாவின் தலைமை நிர்வாகத்திறமை இன்மையாலேயே இவ்வளவு கேவலமான நிலைமைக்கு தள்ளப் பட்டு விட்டது.
Rate this:
Cancel
John Shiva U.K - London,யுனைடெட் கிங்டம்
06-ஏப்-201403:47:57 IST Report Abuse
John Shiva   U.K காங்கிரஸ் மண்கவும் முன்பு தங்கள் கட்சிக் காரர்களுக்கு உரிய ஊழல் வழக்குகளை புறன் தள்ளி விடுதலை செய்கிறது .லாலு மொயிலி இப்படி பல .இந்தியாவில்தான் ஊழல் அதிகம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X