மொய்லி மீதான வழக்கை ரத்து செய்ய வலியுறுத்தல்| Gas price row: Kejriwal's FIR against Moily, Ambani illegal says Solicitor General | Dinamalar

பொது செய்தி

இந்தியா

மொய்லி மீதான வழக்கை ரத்து செய்ய வலியுறுத்தல்

Updated : ஏப் 06, 2014 | Added : ஏப் 06, 2014 | கருத்துகள் (2)
Share
புதுடில்லி: ''காஸ் விலை உயர்த்தப்பட்டதில், முறைகேட்டில் ஈடுபட்டதாக, மத்திய அமைச்சர் வீரப்ப மொய்லி, தொழில் அதிபர், முகேஷ் அம்பானி உள்ளிட்டோர் மீது, டில்லி மாநில அரசு வழக்குப் பதிவு செய்தது சட்டவிரோதமானது,'' என, மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல், மோகன் பராசரன் கூறியுள்ளார்.எப்.ஐ.ஆர்., பதிவு: டில்லியில், 'காஸ்' விலை உயர்த்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆம்
மொய்லி மீதான வழக்கை ரத்து செய்ய வலியுறுத்தல்

புதுடில்லி: ''காஸ் விலை உயர்த்தப்பட்டதில், முறைகேட்டில் ஈடுபட்டதாக, மத்திய அமைச்சர் வீரப்ப மொய்லி, தொழில் அதிபர், முகேஷ் அம்பானி உள்ளிட்டோர் மீது, டில்லி மாநில அரசு வழக்குப் பதிவு செய்தது சட்டவிரோதமானது,'' என, மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல், மோகன் பராசரன் கூறியுள்ளார்.எப்.ஐ.ஆர்., பதிவு:

டில்லியில், 'காஸ்' விலை உயர்த்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த, அப்போதைய டில்லி முதல்வர், அரவிந்த் கெஜ்ரிவால் மத்திய அரசுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டார். இதில், இயற்கை எரிவாயு எடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ள, முகேஷ் அம்பானியின், ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு சாதகமாக நடந்து, விலை நிர்ணயம் செய்வதில் முறைகேடு செய்ததாக, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த, மத்திய பெட்ரோலிய அமைச்சர் வீரப்ப மொய்லி, முன்னாள் பெட்ரோலிய அமைச்சர் முரளி தியோரா ஆகியோர் மீதும், முகேஷ் அம்பானி மீதும், முதல் தகவல் அறிக்கையான, எப்.ஐ.ஆர்., பதிவு செய்ய, கெஜ்ரிவால் அரசு உத்தரவிட்டது.சட்ட விரோதமானது:

இதையடுத்து, அவர்கள் மீது, எப்.ஐ.ஆர்., பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக, மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல், மோகன் பராசரன், மத்திய அரசுக்கு தெரிவித்துள்ள ஆலோசனை: மத்திய அரசின் கொள்கை முடிவுகளில் தலையிட, மாநில அரசுக்கு எவ்வித அதிகாரமும் கிடையாது. கெஜ்ரிவால் தலைமையிலான, முன்னாள் டில்லி மாநில அரசின் இந்த செயல், அரசியல் சாசனத்திற்கு எதிரானது; சட்ட விரோதமானது. குறிப்பிட்ட நபர்கள் மீதான காழ்ப்புணர்ச்சியின் காரணமாகவே, கெஜ்ரிவால் அரசு, அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது. இவ்வாறு, அவர் தெரிவித்து உள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X