தேர்தல் களம் 2021

தமிழ்நாடு

'ஒரு நாள் போதாது; 2 நாட்கள் மோடி வர வேண்டும்': பா.ஜ.,வுக்கு கூட்டணி கட்சிகள் கோரிக்கை

Updated : ஏப் 06, 2014 | Added : ஏப் 06, 2014 | கருத்துகள் (3)
Share
Advertisement
சென்னை: பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, தமிழகத்தில் இரண்டு நாட்கள் பிரசாரம் செய்யும் வகையில், அவரது பயணத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. பா.ஜ., மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவாக, ஆறு இடங்களில் அவர் பேசுவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.தமிழகத்தில், பா.ஜ., தலைமையில் அமைந்துள்ள, தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, பிரசாரம் செய்ய, மோடி அடுத்த வாரம்
'ஒரு நாள் போதாது; 2 நாட்கள் மோடி வர வேண்டும்': பா.ஜ.,வுக்கு கூட்டணி கட்சிகள் கோரிக்கை

சென்னை: பா.ஜ., பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, தமிழகத்தில் இரண்டு நாட்கள் பிரசாரம் செய்யும் வகையில், அவரது பயணத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. பா.ஜ., மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவாக, ஆறு இடங்களில் அவர் பேசுவதற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
தமிழகத்தில், பா.ஜ., தலைமையில் அமைந்துள்ள, தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து, பிரசாரம் செய்ய, மோடி அடுத்த வாரம் வருகிறார். தமிழ் புத்தாண்டு தினமான, 14ம் தேதி, அவர் தமிழகம் வர வேண்டும் என, தமிழக பா.ஜ., தரப்பில் இருந்து கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், மோடியின் பிரசாரம் தான், தமிழகத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பு நிலவுவதால், அவர் இரண்டு நாட்கள் தமிழகம் வர வேண்டும் என, கூட்டணி கட்சிகள் வலியுறுத்தி உள்ளன. அதன்படி, ஏப்ரல் 14ம் தேதியும், அதன்பின், 20ம் தேதியை ஒட்டி ஒரு நாளும், மோடி தமிழக பிரசாரத்திற்கு வர வேண்டும் என, பா.ஜ., மேலிடத்திடம், தமிழக தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர். தென் மாவட்டங்களில் உள்ள கன்னியாகுமரியில், தமிழக பா.ஜ., தலைவர் பொன்.ராதாகிருஷ்ணனும், விருதுநகரில் வைகோவும் போட்டியிடுகின்றனர். அவர்களுக்கு ஆதரவு திரட்டும் வகையில், தென் மாவட்டங்களில் நெல்லை, மதுரை போன்ற இடங்களில், மோடி பேச ஏற்பாடு செய்யப்படுகிறது.
மேற்கு மாவட்டங்களில், கோவை, நீலகிரியில் பா.ஜ., போட்டியிடுகிறது. பொள்ளாச்சியில் தாமரை சின்னத்தில், கொ.ம.தே.க., நிற்கிறது. எனவே, மூன்று தொகுதிகளில் தாமரை சின்னம் என்பதால், இந்த பகுதிக்கு, மோடி கண்டிப்பாக வர வேண்டும் என்ற கருத்து எழுந்துள்ளது. எனவே, அந்த தொகுதிகளை மையப்படுத்தி, மோடி பேசும் இடம் முடிவு செய்யப்பட உள்ளது. பா.ம.க.,வின் முக்கிய தலைவர்கள், அன்புமணி, ஜி.கே.மணி ஆகியோர் போட்டியிடும், தர்மபுரி, கிருஷ்ணகிரி தொகுதிகளுக்கு மோடி வர வேண்டும் என, பா.ம.க., விரும்புகிறது. அதற்கு அருகில் உள்ள சேலத்தில், தே.மு.தி.க., சார்பில், விஜயகாந்த் மைத்துனர் சுதீஷ் போட்டியிடுகிறார். எனவே, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரிக்கு பொதுவான ஒரு இடத்தில், மோடி பேசுவார் என, கூறப்படுகிறது. ஒரே நாளில், இத்தனை தொகுதிகளுக்கும் அவரால் செல்ல முடியாது என்பதால், இரண்டு நாட்களாக அவரது பிரசாரப் பயணத் திட்டம் மாற்றப்பட வேண்டும் என, கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. ஒரு நாளில், மூன்று கூட்டங்கள் வீதம், இரண்டு நாட்களில், ஆறு இடங்களில் அவர் பேசும் வகையில், பயண திட்டம் வகுக்கப்பட்டு, கட்சி மேலிடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக, பா.ஜ., வட்டாரம் தெரிவித்தது.


Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X