பொது செய்தி

தமிழ்நாடு

விவசாயத்துறையில் பயிர் விளைச்சலை அதிகரிக்கும் "பாலித்தீன் நிலப்போர்வை'

Added : ஏப் 10, 2014
Advertisement

தேனி : விவசாயத்துறையில், விளைச்சலை அதிகரிக்கும் "பாலித்தீன் நிலப்போர்வை' திட்டத்தில், சாகுபடி செய்ய விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். வறட்சியின் பாதிப்பு அதிகரித்து, வெயில் அதிகமாக உள்ளதால், விவசாய மற்றும் தோட்டக்கலைத்துறையில் தற்போது புதிய தொழில்நுட்பம் கடைபிடிக்கப்படுகிறது. நிலம் முழுவதும் கருப்பு கலர் பாலித்தீன் பாய் விரித்து நிலத்தை முழுமையாக மூடி விட்டு, பயிர் சாகுபடிக்கு மட்டும் அதில் துளையிட்டு விதை, அல்லது செடி, கிழங்கு நடவு செய்யப்படுகிறது. செடி வளரும் இடம் தவிர, மற்ற இடம் முழுக்க பாலித்தீன் போர்வையால் மூடப்பட்டு விடுகிறது. இந்த போர்வைக்கு உள்ளேயே சொட்டுநீர் பாசன கருவிகளும் அமைந்துள்ளன. உத்தமபாளையம், தேவாரம், ஓடைப்பட்டி பகுதிகளில் வாழை, தர்பூசணி சாகுபடிக்கு இந்த வகை தொழில்நுட்பம் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது: நிலத்தில் விரிக்கும், பாலித்தீன் போர்வையை இரண்டு சாகுபடிக்கும் பயன்படுத்த முடியும். இந்த போர்வை காலப்போக்கில் உதிர்ந்து தூளாகி விடும். எனவே நிலத்திற்கு பாதிப்பில்லை. போர்வை விரிப்பதால் நிலத்தின் ஈரப்பதம் பாதுகாக்கப்படுகிறது. போர்வையின் கீழ் வெப்பம் அதிகம் இருப்பதால் களைகள் முளைப்பதில்லை. இதனால் நிலத்திற்கு வழங்கப்படும் உரம் உட்பட எல்லா சத்துக்களும் நாம் சாகுபடி செய்யும் பயிருக்கு கிடைக்கும். இதனால் விளைச்சல் அதிகரிக்கிறது. இந்த நிலப்போர்வை விரிக்க அரசு மானியம் வழங்குகிறது, என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X