பயங்கரவாதிகள்- போலீசார் துப்பாக்கிச் சண்டை| Dinamalar

பயங்கரவாதிகள்- போலீசார் துப்பாக்கிச் சண்டை

Added : ஏப் 15, 2014 | கருத்துகள் (2)
Advertisement
பயங்கரவாதிகள்- போலீசார் துப்பாக்கிச் சண்டை

நாற்காலியைத் தூக்கி எறிந்த கசாப்: 41. பயங்கரவாதிகளில் ஒருவனான கசாபை (மனுதாரர்) குள்ளமானவன் என்று விளக்கிய பாட்டீல் அவனை அடையாளம் காட்டினார். இறந்துவிட்ட குற்றவாளி 1, அபு இஸ்மாயிலையும் அவனது போலி அடையாள அட்டையில் இருந்த புகைப்படத்தைக் கொண்டு அடையாளம் காட்டினார் (ஆர்டிகிள் 61). மேலும் ஆர்தர் ரோடு சிறையில் நடந்த அணிவகுப்புச் சோதனையில், 2009, ஜனவரி 14ல் ஏற்கனவே அடையாளம் காட்டியதாகவும் நீதிமன்றத்தில் தெரிவித்தார். தனது ஏகே47 துப்பாக்கியில் இருந்து தன்னைச் சுட்டது மனுதாரரே (கசாப்)யென்றும், அவர் மீதே தானும் பிளாஸ்டிக் நாற்காலியை எறிந்ததாகவும் பாட்டீல் கூறினார். ஆர்டிகிள் 61-ல் இருந்த அபு இஸ்மாயிலையும் யாதவ் அடையாளம் காட்டினார்.
42. மமத் மோதிரால் நர்டேலே (பி.டபிள்யூ.58) ஒரு போலீஸ் கான்ஸ்டபிள் சம்பவ தினத்தன்று பிளாட்பாரம் 1 - டைம்ஸ் ஆப் இண்டியா கட்டிடத்துக்கு எதிரில் - நடைபாலத்தில் நாசவேலை எதிர்ப்புப் பணியில் இருந்தார். 10 ரவுண்டுகள் கொண்ட கார்பைன் அவரிடம் இருந்தது. லோகல் ரயில்வே ஸ்டேஷன் பிளாட்பாரம் 3-க்கு எதிரில் உள்ள போலீஸ் உதவி மையத்துக்கு இவர் இரவு சுமார் 9.45 மணிக்கு உணவருந்த வந்தார். அவரது சகாக்கள் ட்யூடி இடத்தில் இருந்தனர். அவர் அந்த இடத்துக்கு வந்ததும் குண்டு வெடிப்பு, துப்பாக்கிச் சத்தத்தையும் கேட்டார். மெயின்லயன் மெயில் ஹாலில் இருந்து இந்தச் சத்தம் கேட்டது. பயணிகள் அங்கிருந்து ஓடிக் கொண்டிருந்தனர். விவின்க் ஹிண்டே அங்கு வந்து சேர்ந்தார். பயங்கரவாதிகள் மெயின் லயன் மெயில் ஹாலில் இருந்து சுட்டுக் கொண்டிருப்பதாக அவரை எச்சரித்தார். தன்னுடன் வருமாறு ஹிண்டே நர்தேலேயிடம் கூறினார். உடனே நர்தேலே தன்னுடைய கார்பைனில் 10 ரவுண்டுகள் நிரப்ப ஆரம்பித்தார். ஆனால் அவருக்காக காத்திராமல் ஹிண்டே மெயின் லயன் மெயில் ஹாலை நோக்கிச் செல்வதைப் பார்த்தார். அவருடைன் துணை ஆய்வாளர் பண்டார்கர், ஒரு போலீஸ்காரர் மற்றும் ஒரு புகைப்படக்காரருடன் சென்றனர். அவரகளைத் தொடர்ந்து நர்தேலே சென்றார். 7வது ப்ளாட்பாரத்தில் இருந்து வெடிச்சத்தம் கேட்டது. 6வது பிளாட்பாரத்தில் நின்று கொண்டிருந்த லோகல் ரயில் கம்பார்ட்மெண்டுக்குள் ஏறினார். அங்கிருந்தவாறு, இரண்டு பயங்கரவாதிகள் ஏ.கே.47 துப்பாக்கியும், கைப்பையும் தோள்களில் ஏந்திக் கொண்டு லோகல் ரயில்வே ஸ்டேஷன் நோக்கிச் செல்வதைக் கண்டார். உடனே அவர்களை நோக்கி 8 ரவுண்டுகள் சுட்டார். ஆனால் அவை பயங்கரவாதிகளைத் தாக்கவில்லை. மீண்டும் அவர் சுட முயன்றபோது அது அடைத்துக் கொண்டுவிட்டது. மேலும் அவரால் சுடமுடியவில்லை. உடனே ஆயுதப் பிரிவுக்குச் சென்று பூட்டி நின்ற கார்பைனைத் திறந்து, அதில் மேலும் ரவுண்டுகளை நிரப்பினார். அவர் திரும்பி மெயின் ஹாலுக்கு வந்தபோது, பயங்கரவாதிகள் லோகல் ஸ்டேஷனை விட்டு ஏற்கெனவே சென்று விட்டிருந்தனர்.


கசாபை அடையாளம் காட்டிய போலீஸ்காரர்

: 43. நர்தாலே மனுதாரரை (கசாப்) நீதிமன்றத்தில் அடையாளம் காட்டுகையில் மற்றவனிலும் குள்ளமானவன் என்று அடையாளம் காட்டினார். இரண்டு பயங்கரவாதிகளும் அணிந்திருந்த ஆடைகளையும் அடையாளம் காட்டினார். நிர்.61 ஆவணத்தில் உள்ள இறந்துவிட்ட குற்றவாளி அபு இஸ்மாயிலையும் அடையாளம் காட்டினார். 2008 டிசம்பர் 28ம் நாள் நடந்த அடையாள அணிவகுப்பிலும் மனுதாரரை ஆர்தர் ரோடு சிறையில் அடையாளம் காட்டியதாகக் கோர்ட்டில் தெரிவித்தார். ஜே.ஜே. மருத்துவமனையில் பிணக்கிடங்கில் இறந்து போன பயங்கரவாதி அபு இஸ்மாயிலை 2009 ஜனவரி 6ம் தேதி அடையாளம் காட்டியுள்ளார்.
44. சுதாமா அவா பண்டார்கர் (பி.டபிள்யூ 62) லோகல் ட்ரெயின்களில் ரோந்துப் பணியில் 26 நவம்பர் 2008ல் இருந்த உதவி ஆய்வாளர். அவரிடம் 10 ரவுண்டுகள் கொண்ட 303 ரைபின் இருந்தது. அவர் ட்யூடியில் இருந்த ரயில் 4 அல்லது 5வது பிளாட்பாரத்தில் இரவு 9.45 மணிக்கு வந்தது. அவர் போலீஸ் துணை மையத்துக்குச் சென்று தனது ரோந்துப் பணி பற்றிப் பதிவு செய்யச் சென்றார். சில நிமிடங்களில் குண்டுகள் வெடித்தன. துப்பாக்கிச் சூடும் நடந்தது. பல பயணிகள் பீதியில் ஓடுவதை இவர் பார்த்தார். அதே சமயம் விவிங்க் ஹிண்டே போலீஸ் மையத்துக்கு வந்தார். ரயில்வே ஸ்டேஷன் பயங்கரவாதிகள் தாக்குதலில் இருப்பதை அவர்களுக்குத் தெரிவித்தார். பண்டார்கரிடம் அவரது 303 ரைபிளை லோட் செய்யும் படி கூறினார். மெயின் லயனுக்கு பண்டார்கர் சென்றார். டாக்சி ஸ்டாண்ட் பகுதியில் இருந்து சுமார் 6 அடி உயரமுள்ள பயங்கரவாதி வருவதைக் கண்டார். அவன் ரயில்வே போலீஸ் ஸ்டேஷனை நோக்கிச் சுட்டுக் கொண்டிருந்தான். அப்போது அவன் ரயில்வே காவல்நிலையத்துக்கு எதிராக நின்று கொண்டிருந்தான். அவனை நோக்கி அவரது துப்பாக்கியில் இருந்து இரண்டு ரவுண்டு சுட்டார். அதேசமயம், ஹிண்டேயுடன் கூட வந்த போலீஸ் கான்ஸ்டபிள் அம்பாதாஸ் பவார் பண்டார்கள் துப்பாக்கியை எடுத்து பயங்கரவாதிமீது ஒரு ரவுண்டு சுட்டார். அதே சமயம் மெயில் லயன் 8வது பிளாட்பாரத்தில் இருந்து குள்ளமான இன்னொரு பயங்கரவாதி வருவதைக் கண்டனர். அவன் தனது ஏ.கே. 47 துப்பாக்கியால் சுட்டுக் கொண்டிருந்தான். பண்டார்கர், கான்ஸ்டபிள் அம்பாதாஸ் பவார் மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹிண்டே இருவரும் 6வது பிளாட்பாரத்தில் இருந்து 7வது பிளாட்பாரத்துக்கு இண்டியன் பேங்க் ஏ.டி.எம். அருகில் வந்தனர். தங்களது ஏ.கே. 47 துப்பாக்கியால் பயங்கரவாதிகள் இவர்களை நோக்கிச் சுட்டனர். ஒரு குண்டு பண்டார்கரின் இடது மார்பைத் துளைத்துக் கொண்டு பின் வழியே சென்றது. இந்தக் குண்டுக் காயத்தில் அவர் கீழே விழுந்தார். ஷஷங்க் ஹிண்டே மற்றும் அம்பாதாஸ் பவார் இருவர் மீதும் பயங்கரவாதிகள் குண்டு பாய்த்தது. பண்டார்கள் காயத்துடன் தப்பினார். துரதிர்ஷ்ட வசமாக ஹிண்டே, பவார் இருவரும் காயமடைந்து மரணமடைந்தனர்.


துப்பாக்கிச்சூட்டில் இறந்த பயங்கரவாதிகள்:

45. சாட்சியம் அளிக்கையில் பண்டார்கரிடம் 3 புகைப்படங்கள் காட்டப்பட்டன. இவை எண் 239 ஆகக் குறிக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஒன்று தன்னுடையதென்றும் மற்றொன்று அம்பாதாஸ் பவர் என்று அடையாளம் காட்டினார். 242 எண்ணாகக் குறிக்கப்பட்டுள்ள புகைப்படம், விவின்க் ஹிண்டே மற்றும் அம்பாதாஸ் பவர் இருவரும் பயங்கரவாதிகளால் குண்டடிபட்டு விழுந்து கிடப்பதாகவும், மற்றொரு படம் (எண் 242)ல் இருப்பது தானும், ரயில்வே ஸ்டேஷனில் உள்ள மற்றொரு ஊழியர் என்றும் அடையாளம் காட்டினார். இந்தப் புகைப்படத்தில் அந்த ஊழியர் குண்டுக் காயம் அடைந்த இவரை தாங்கிப் பிடித்துக் கொண்டு ஸெயிண்ட் ஜார்ஜ் மருத்துவமனைக்கு போக உதவியும் செய்தார்.
46. இவரும் இந்த மனுதாரரை (கசாப்) பயங்கரவாதிகள் இருவரில் இவனே குள்ளமானவன் என்று குறிப்பிட்டார். ஒரு புகைப்படத்தில் (எண் 61) உள்ளவரை அபு இஸ்மாயில் என்று பண்டார்கர் அடையாளம் காட்டினார். 2009 ஜனவரி 14ல் நடைபெற்ற அடையாள அணிவகுப்பிலும் கசாபை இவர் அடையாளம் காட்டினார்.


சுரங்கப் பாதையில் துப்பாக்கிச் சண்டை:

47. சந்தீப் தாணாஜி கிராத்கர் (பி.டபிள்யூ - 66) ரயில்வே பாதுகாப்புப் படையில் பணியாற்றும் இன்ஸ்பெக்டர். சம்பவம் நடந்த சமயம் அவர் வீட்டில் இருந்தார். தொலைபேசி மூலம் ஜாதவ் (பி.டபிள்யூ - 54) அவருக்குச் செய்தி சொன்னார். செய்தியறிந்ததும் 5 - 7 நிமிடங்களில் இவர் தனது மோட்டார் சைக்கிளில் இங்கு வந்து சேர்ந்தார். உடனே, தரை தளத்தில் இருந்த ரயில்வே பாதுகாப்புப் படை ஜெனரல் மேனேஜர் அலுவலகத்துக்குச் சென்று 303 ரைபிள் மற்றும் 20 ரவுண்டுகளையும் எடுத்துக் கொண்டு, ஸ்டேஷனை விட்டு வெளியே டி.என். ரோடுக்கு வந்தனர். இளம் ஆய்வாளர் பாஸ்லே (பி.டபிள்யூ - 68) மற்றும் இன்ஸ்பெக்டர் ஷீர்சாகர் அவருடன் இருந்தனர். சுரங்கப்பாதை (சப்வே) அருகில் இரண்டு பயங்கரவாதிகளும் வருவதை இவர்கள் பார்த்தனர். இரண்டு பயங்கரவாதிகளும் இவர்களை நோக்கிச் சுட்டனர். இவர்களும் பயங்கரவாதிகளை நோக்கிச் சுட்டனர். கிராத்கரும் அவருடனிருந்த மற்றவர்களும் சுட்டதில் பயங்கரவாதிகள் மீண்டும் ரயில்வே ஸ்டேஷனுக்குள் நுழைந்து, எதிர்ப்பக்கம் முதலாவது பிளாட்பாரத்தை நோக்கி ஓட வைத்தது. இங்குள்ள நடைபாலம் வழியாகத்தான் பயங்கரவாதிகள் ஸ்டேஷனை விட்டு வெளியே வந்தனர். கிராத்கர் மற்றும் அவரது சகாக்கள் நடைபாலத்தை அடைந்தபோது பயங்கரவாதிகள் ஸ்டேஷனை விட்டு விலகி விட்டனர். ரயில்வே பாதுகாப்புப் படை கண்ட்ரோல் அறைக்கு கிராத்கர் விரைந்தார். அங்குதான் சிசிடிவி கேமரா உள்ளது. மெயில் லயன்களில் உள்ள இந்த கேமராக்கள் அன்றைய தினம் பராமரிப்புக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததைக் கண்டார்கள். என்றாலும், கசாப், அபு இஸ்மாயில் நடமாட்டங்கள் லோகல் லயன் பிளாட்பாரம் எண் 1ல் இருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவாகியிருந்தது. அதே நாளில் பயங்கரவாதிகளின் நடமாட்டங்கள் டேடா விஷûவல் ரிகார்டரில் பதிவு செய்யப்பட்டுள்ளவை என்று கான்ஸ்டபிள் ஜாதவ், கிராத்கரிடம் தெரிவித்தார். அப்போது நேரம் இரவு 11.30 மணி. உடனே, மெயில் ஹால், மற்றுமுள்ள இடங்களில் பயங்கரவாதிகளின் நடமாட்டங்களைக் காட்டும் சிசிடிவி காட்சிகளை ஒரு சிடியில் கிராத்கார் பதிவு செய்து, அதை சீல் வைத்து, மும்பை டிசிபி சிஐடியிடம் ஒப்படைத்தார். நீதிமன்றத்தில் அவர் கூறுகையில் இந்த டிவிஆர் பதிவு 7 நாட்கள் இருந்ததாகவும், ஏழாவது நாள் முடிவில் அது அழிபட்டு விடுமென்றும் அடுத்த நாள் (எட்டாவது நாள்) பதிவுக்கு அதில் இடம் வந்து விடுமென்றும் கூறினார்.
48. இவரும் (கிராத்கார்) மனுதாரரை (கசாப்) பயங்கரவாதிகள் இருவரில் குள்ளமானவர் என்று அடையாளம் காட்டினார். அபு இஸ்மாயிலை புகைப்படத்திலிருந்து (ஆர்டிகிள் 61) அடையாளம் காட்டினார். இதற்க முன்பு கசாபையும் 2008 டிசம்பர் 28 ஆர்தர் ரோடு சிறை அணிவகுப்பிலும் அடையாளம் காட்டினார்.


கசாப் சுட்டதால் காலில் குண்டு பாய்ந்தது:

49. பாண்டுரங்க் சுப்ராவ் பாடீல் (பி.டபிள்யூ 63) அன்றைய தினம் ட்யூடியில் இருந்தார். அவர் கையில் தடி (லத்தி) இருந்தது. தன்னை அந்தக் குள்ள பயங்கரவாதி (மனுதாரர் கசாப்) சுட்டதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார். அவன் சுட்டதில் குண்டு அவரது இடது தொடையில் பாய்ந்து வலது தொடையைத் துளைத்துக் கொண்டு வெளியே சென்றுள்ளது. அவர் அப்படியே தரையில் விழுந்துவிட்டார். இந்த இரண்டு பயங்கரவாதிகளையும் 22 - 25 அடி தூரத்தில் பார்த்ததாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
50. பாட்டீஸ் தனது சாட்சியத்தில் இரு பயங்கரவாதிகளில் கசாப் குள்ளமானவன் என்று குறிப்பிட்டார். இறந்துவிட்ட அபு இஸ்மாயிலையும் புகைப்படத்தில் இருந்து (ஆர்டிகிள் 61) அடையாளம் காட்டினார்.வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ravikrishna - singapore,சிங்கப்பூர்
23-ஏப்-201410:53:19 IST Report Abuse
Ravikrishna அட பண்ணாடைகளே...இனிமேலாவது துப்பாக்கியை சரி பார்த்து வைத்துக்கொள்ளுங்கள்...
Rate this:
Share this comment
Cancel
Palanivelu Velu - kulalumbur,மலேஷியா
20-ஏப்-201417:32:34 IST Report Abuse
Palanivelu Velu பாகிஸ்தான் தீவர வாதிகளுக்கு தங்க இடம் கொடுக்கும் நபர் இந்தியாவில் இருக்ககூடாது
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X