குண்டு வெடிப்பு சம்பவம் இல்லை : இலங்கை மகிழ்ச்சி

Added : செப் 29, 2010
Share
Advertisement

கொழும்பு : இலங்கையில், விடுதலைப் புலிகளுடனான போர் முடிவுக்கு வந்த பிறகு, பயங்கரவாத தாக்குதல்கள் எதுவும் நடைபெறவில்லை என, வன்னி பகுதி காமாண்டர் மேஜர் ஜெனரல் கமல் குண ரத்னே கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது: இலங்கையில், விடுதலைப்புலிகளுடனான போர், கடந்த 2009ம் ஆண்டு மே மாதம் 19ம் தேதி முடிவுக்கு வந்தது. அன்றிலிருந்து இதுவரை பயங்கரவாதிகள் நடமாட்டம் எதுவும் இல்லை. தாக்குதல் சம்பவங்கள், குண்டுவெடிப்புகள் எதுவும் இலங்கையில் நடக்கவில்லை. இதனால், ஒரு உயிர் இழப்புக்கூட ஏற்படவில்லை. குண்டு வெடிப்புகள் உள்ளிட்ட பயங்கரவாத செயல்களால், இலங்கை சுற்றுலாத்துறை கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தது. தற்போது, வன்னி உள்ளிட்ட பகுதிகளில் அமைதியான சூழல் நிலவுகிறது. இவ்வாறு கமல் குண ரத்னே கூறினார்.


 

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X