ராஜிவ் கொலையாளிகள் நிலை இனி என்னவாகும் ? மத்திய - மாநில அரசு அதிகாரத்தில் கேள்வி!

Updated : ஏப் 25, 2014 | Added : ஏப் 25, 2014 | கருத்துகள் (37)
Advertisement
ராஜிவ் கொலையாளிகள் நிலை என்னவாகும் ? மத்திய - மாநில அரசு அதிகாரத்தில் முடிவு !

புதுடில்லி: முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டவர்கள் விடுதலை செய்வது தொடர்பான மத்திய , மாநில அரசுகள் இடையே யாருக்கு அதிகாரம் என்பதில் சட்டச்சிக்கலான தீர்ப்பை அறிவிக்காமல் சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி அரசியல் சாசன பெஞ்சுக்கு மாற்றம் செய்வதாக அறிவித்து வி்ட்டார். இதனையடுத்து ராஜிவ் கொலையாளிகள் இன்று விடுவிக்கப்படுவார்களா, இன்னும் சிறை வைக்கப்படுவார்களா என்பது மேலும் கேள்விக்குறியாகி விட்டது. அரசியல் சாசன பெஞ்ச் விசாரிப்பதால் இந்த வழக்கில் மேலும் பல விஷயங்கள் விவாதத்திற்கு எடுத்து கொள்ளப்படும். , கொலையாளிகள் விடுதலை, கொலைக்குற்றம், ஜனாதிபதி கருணை மனு ஏற்பது தொடர்பான விஷயங்களும் விவாதத்தில் எடுத்து கொள்ளப்படும். இதனால் ராஜிவ் கொலையாளிகள் விடுதலை இப்போதைக்கு இ்ல்லை.
கடந்த 1991 ல் ராஜிவ் சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூர் அருகே புலிகளால் மனித வெடிகுண்டு மூலம் கொல்லப்பட்டார். இந்த கொலை தொடர்பாக கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு இவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இதற்கு புலி ஆதரவு அமைப்புகள் இதற்கு கண்டனம் தெரிவித்தன. மேலும் தூக்கு தண்டனையை குறைக்க கூடாது என்று ஒரு தரப்பினரும் வேண்டினர். இதற்கிடையில் நாங்கள் சிறையில் கூடுதல் காலம் அனுபவித்து விட்டோம். எங்களின் கருணை மனு மீதான உத்தரவை ஜனாதிபதி அலுவலகம் காலம்தாழ்த்தி விட்டது. எனவே எங்களின் தூக்கு தண்டனையை குறைக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட்டில் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோர் மனுத்தாக்கல் செய்தனர். இந்த வழக்கை தமிழகத்தில் இல்லாமல் வேறு மாநிலத்திற்கு மாற்ற வேண்டும் என்றும் காங்., கட்சியை சேர்ந்த வெங்கடேஷ் என்பவர் சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார். இதனை ஏற்றுகொண்ட சென்னை ஐகோர்ட், சுப்ரீம் கோர்ட்டுக்கு மாற்றியது.

வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட் ஜனாதிபதியின் காலதாமதம் ஏற்க முடியாதது. எதிர்காலத்தில் இது போல் நடக்காமல் இருக்க விதிமுறைகள் வகுக்கப்பட வேண்டும். எனவே ராஜிவ் கொலையாளிகள் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரது தூக்கை ரத்து செய்வதுடன் ஏனைய குற்றவாளிகள் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்வது தொடர்பாக மாநில அரசோ அல்லது மத்திய அரசோ முடிவு செய்து கொள்ளலாம். என்று அறிவித்தது.

இதனையடுத்து தமிழக முதல்வர் ஜெ., அவசர, அவசரமாக கைதிகளை விடுவிக்க தேவையான நடவடிக்கைகள் எடுத்து வந்தார். ஆனால் மத்திய அரசு தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்த குற்றவாளிகள் பயங்கரவாத தடை சட்டத்தின்படி குற்றவாளிகள். எனவே இவர்களை விடுவிப்பது என்பது மத்திய உள்துறை அமைச்சகம் மட்டுமே முடிவு செய்ய முடியும் என்று தனது அதிருப்தியை தெரிவித்தது.

இதனையடுத்து இது தொடர்பாக மறு சீராய்வு மனு தாக்கல் செய்தது மத்திய அரசு. இந்நிலையில் இந்த மனுவை ஏற்க சுப்ரீம் கோர்ட் மறுத்து விட்டது.விடுதலைக்கு இடைக்கால தவை விிதித்தது. மேலும் குற்றவாளிகள் விடுதலை செய்வதில் மத்திய அரசுக்கு அதிகாரமா அல்லது மாநில அரசுக்கு அதிகாரமா என்பதை முடிவு செய்யும் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சதாசிவம் இன்று அறிவிக்கவிருந்தார். இதன் அடிப்படையில் ராஜிவ் கொலையாளிகள் நிலை முடிவாகும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த தீர்ப்பு இந்திய அரசியலமைப்பு சட்ட ரீதியாக முக்கியத்துவம் பெறுகிறது.

உகந்ததாக இருக்குமா ? கடந்த சில நாட்களுக்கு முன்னர் கோவை வந்த தலைமை நீதிபதி சதாசிவம் ராஜிவ் கொலையாளிகள் வழக்கின் தீர்ப்பை வரும் 25ம் தேதிக்குள் அறிவிப்பேன் என்று கூறினார். ஒரு கோர்ட் நடைமுறையை இப்படி வெளிப்படையாக கோர்ட்டுக்கு வெளியே பேசுவது நல்லதல்ல, ஜனநாயக மாண்புக்கு ஏற்றதல்ல , அதுவும் தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில் இந்த தீர்ப்பை அறிவிப்பது உகந்ததாக இருக்குமா என்று சிந்திக்க வேண்டும் என்று தி.மு.க., தலைவர் கருணாநிதி ஒரு அறிக்கை வெளியிட்டார். இதனையடுத்து தீர்ப்பு இன்று வெளியாக இருந்தது.

கொலையாளிகள் இப்போதைக்கு விடுதலை இல்லை ; இன்று தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த வழக்கு அரசியல் சாசன பெஞ்சுக்கு மாற்றம் செய்யப்படுவதாக தலைமை நீதிபதி சதாசிவம் இன்று அறிவித்தார். இதன் படி 5 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் இதனை விசாரிக்கும். இது போன்று ஒரு வழக்கு வந்ததில்லை என்றும், இது தொடர்பான நீண்ட விசாரணை தேவைப்படுகிறது. என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார் . இதனால் ராஜிவ் கொலையாளிகள் உடனடியாக விடுதலை செய்யப்படுவதில் மீண்டும் தாமதம் ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்து போராடுவேன்: மகனின் விடுதலைக்கு தொடர்ந்து போராடுவேன் என பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் இன்று அளித்த பேட்டியில் கூறியுள்ளார். அவர் நிருபர்களிடம் பேசுகையில், இன்றைய தீர்ப்பு எனக்கு பெரும் மன வேதனை அளிக்கிறது. இன்னும் 2 நாட்களில் விடுதலை ஆவான் என்ற எதிர்பார்ப்பில் இருந்தேன். அவனை எப்படி வரவேற்பது என்று கனவு கண்டிருந்தேன். ஆனால் இன்றைய உத்தரவு கேள்விப்பட்டு 23 ஆண்டு காலம் போராடியாச்சு இன்னும் போராட வேண்டியுள்ளது. நீதி மன்றம் மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. எனது மகனுக்கும், இந்த கொலைக்கும் தொடர்பு இல்லை. அவனே என்னிடம் சொல்லியிருக்கிறான். தமிழக முதல்வர் ஜெ., எங்களுக்கு ஆதரவாக உள்ளார். அவர் மகன் விடுதலைக்கு உதவுவார் என்ற நம்பிக்கை உள்ளது. இன்னும் நான் தொடர்ந்து பலத்துடன், நம்பிக்கையுடன் போராடுவேன். நீதிமன்றம் மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது. எங்களின் போராட்டத்திற்கு பத்திரிகைகளும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அற்புதம்மாள் அழுதபடி கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (37)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Balagiri - Chennai,இந்தியா
26-ஏப்-201400:51:41 IST Report Abuse
Balagiri நாட்டாம தீர்ப்பை மாற்றி எழுது என்ற காமேடிக்கேற்ப திருவாளர் கருணாநிதியின் அச்சுறுத்தலால் தான் நீதிபதி சதாசிவம் இந்த தவறுதலை கடைசி நிமிடத்தில் செய்துள்ளார். விடுதலை செய்கிறேன் என்று எழுதப்போனவரை இந்த தமிழ் இன காப்போன் தன சுயநல அரசியலுக்காக அச்சுறுத்தியது கேவலமானது.
Rate this:
Share this comment
Cancel
அறிவா லயதாத்தா - Chennai,இந்தியா
25-ஏப்-201412:50:37 IST Report Abuse
அறிவா லயதாத்தா சதி விசாரணையே இன்றுவரை துவங்கப்படாத நிலையில்,முக்கிய குற்றவாளிகளைப் பிடிக்காமல் இந்த வெற்று அல்லக்கைகளை தூக்கிலிட காங்கிரஸ் தலைமை அவசரப்படுவதிலிருந்தே உண்மைக் குற்றவாளி யார் என்பது வெட்ட வெளிச்சமாகிறது. அதனை மறைக்கத்தான் இந்த வழக்கு மண்ணாங்கட்டியெல்லாம். உண்மையிலேயே புலிகள்தான் குற்றவாளிகளென்றால் இன்று இலங்கை உயர் பதவியிலிருக்கும் கருணாவையும் இலங்கை அரசின் பாதுகாப்பிலிருக்கும் கேபி யையும் விசாரிக்காததேன்? கொலை நடந்தபோது அவர்களும் புலிகளின் அதிகார மையங்களாகத்தானே இருந்தனர் ? பொது மக்களை முட்டாள்களாக்கிப் பிழைப்பதே காங்கிரஸ் கலாச்சாரம்
Rate this:
Share this comment
Cancel
rajiv - chennai  ( Posted via: Dinamalar Android App )
25-ஏப்-201412:34:50 IST Report Abuse
rajiv you guys can kill any one in the name of tamil...guys who s from DMK and ADMK dont think its only for congress leader it may happened to ur leadrs also so please dont see wheather they are Tamil or Hindi ... its manuneethi cholan land so dont support the killers who killed RAJIV
Rate this:
Share this comment
Mani - chennai,இந்தியா
25-ஏப்-201412:46:59 IST Report Abuse
Manino supports mr rajiv as supreme court sentence they have finished their sentence duration in jail. no mercy, no supports. as per law they have to be released If people asked you to release in one year, you could say like, dont support. Its only after finished their sentance REMEMBER THE PUNISHMENT FINISHED...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X