பதிவு செய்த நாள் :
கருத்துகள் (81)  கருத்தை பதிவு செய்ய
எழுத்தின் அளவு:

அன்றைய குறள்
நாணென்னும் நல்லாள் புறங்கொடுக்கும் கள்ௌன்னும்
பேணாப் பெருங்குற்றத் தார்க்கு.
'மது மயக்கம் எனும் வெறுக்கத்தக்க பெருங்குற்றத்திற்கு ஆளாகியிருப்போரின் முன்னால், 'நாணம்' என்று சொல்லப்படும், நற்பண்பு நிற்காமல் ஓடி விடும்' என்பது, இக்குறளின் கருத்து.

இன்றைய குரல்

''ஒரு நாளைக்கு என் கூலி, 150 ரூபா. ஒரு குவார்ட்டரு, 82 ரூபா. இரண்டு வாட்டர் பாக்கெட், 12 ரூபா. ஒரு சிப்ஸ் பாக்கெட், 5 ரூபா. ஒரு சிகரெட், 6 ரூபா. மீதி, 45 ரூபாயை வீட்டுக்கு குடுத்துடுவேன். அதுல இருந்து, ஒரு பைசா எடுக்க மாட்டேன். தம்பி... நான் நியாயமான குடும்பத் தலைவன்யா...!''
- இரவு 7:00 மணியளவில், தலைநகரத்து 'டாஸ்மாக்' வாசலில், குத்த வைத்து புலம்பும் 'குடி'மகனின் குறள் இது!


''காசு வாங்குறானுங்களே தவிர, நல்ல சரக்கு கொடுக்குறானுங்களா? கார்ப்பரேஷன் வாட்டர் குடிச்சா மாதிரி, 'சப்'புன்னு இருக்கு. தனியார் 'ஒயின் ஷாப்' இருக்கறப்போ, சரக்கு சும்மா, தேன் மாதிரி இருக்கும். த்த்துா... நல்லா சம்பாதிக்கிறானுங்ங்ங்....'' தள்ளாடி சரியும் தமிழனின் தலை, தரை தொட்டு விடாமல் தாங்குகிறது, தலைநகரத்து குப்பை தொட்டி. பார்த்து, பார்த்து பழக்கப்பட்ட காட்சி என்பதால், மூக்கைப் பிடித்தபடி, சுலபமாய் கடந்து செல்கிறது கூட்டம்.
குடிமகனை உரசி விடாமல், மிக கவனமாக க(ந)டந்து, 'பார்' உள்ளே நுழைந்தால், சரக்கு தொடாமலேயே, நம்மை கிறுகிறுக்க வைக்கின்றன, ஊழியர் சொல்லும் விஷயங்கள்...

பாருக்குள்ளே நல்ல 'பார்'
''சார்... சென்னையில ரேட் பரவாயில்லை. சரக்குக்கு, வெறும், 2 ரூபாய் தான் கூட வைச்சு விற்கிறோம். இதுவே தெற்கே போயிட்டீங்கன்னா, 90, 100ன்னு, தாறுமாறா இருக்கும்.
''அவங்களை சொல்லி தப்பில்லைங்க... ஏரியா சூப்பர்வைசர், மாவட்ட மேலாளர், உதவி ஆணையர், எக்சைஸ் சூப்பர்வைசர் ஆபிசர்ன்னு, எல்லாருக்கும் பணம் கொடுக்கணும். இவ்வளவு ஏன்... அதிகமா விற்குற சரக்குக்கு, 'தேவை பட்டியல்' கொடுக்கறப்போ கூட, பணம் அழணும்.
''இதோட, குடவுன்ல இருந்து வர்ற பெட்டியிலேயே பிரச்னை இருக்கும். வர்ற பெட்டி, அடிப்பெட்டியா இருந்ததுன்னு வைங்க.... அழுத்தத்துல பாட்டில் உடைஞ்சிரும். சில பாட்டில்ல கீறல் இருக்கறதே, வெளியில தெரியாது. அவ்வளவு மெலிசா இருக்கும். அதுல இருக்கற சரக்கு, கொஞ்சம், கொஞ்சமா குறைஞ்சு போச்சுன்னா, அதுக்கு கடைக்காரங்க தான் பொறுப்பு.
''சில நேரத்துல, நம்ம குடிமகனுங்க, கண் இமைக்குற நேரத்துல பாட்டிலை எடுத்து, இடுப்புல மறைச்சிடுவானுங்க. சிக்குனா, அவனுங்க முதுகுல, 'டின்' கட்டிடுவோம். இல்லைன்னா, நாங்க தான், 'தண்டம்' கட்டணும்.
''இதெல்லாம் விட, எங்க 'டாஸ்மாக்' பார்ல மட்டும் தான், 'கட்டிங்' கிடைக்கும். 375 மி.லி., இருக்கிற 'ஆப்' மற்றும் 750 மி.லி., இருக்கிற 'புல்'லுல, அந்த, 'எக்ஸ்ட்ரா' மி.லி.,யை, 'கட்டிங்'கா மாத்தி, காசு பார்த்துடுவோம். அதோட, ஒரு 'ஆப்'ல, 90 மி.லி.,யை அப்படியே உறிஞ்சுட்டு, தண்ணி கலந்துட்டோம்னு வைங்க; ஒரு வித்தியாசமும் தெரியாது; போதையும் இறங்காது.
''சரக்குல இப்படின்னா, 'சைடு டிஷ்'ஷுக்கு, 'ரேட்' ஏத்திடுவோம்! வேற வழியில்லைங்க... எங்க 'பார்' முதலாளிகளும், நாலு பேருக்கு பணம், 'அழ' வேண்டியிருக்குல்ல! சரி... சரி... முதலாளி வர்றாரு. நீங்க பத்திரிகைகாரங்கன்னு தெரிஞ்சா, என்னை உறிச்சுடுவாரு. நீங்க கிளம்புங்க!''
எல்லா விஷயங்களையும் பக்காவாக 'பந்தி' வைத்துவிட்டு, பவுசாக பின்வாங்கினார், 'டாஸ்மாக்' பார்ட்டி! நம் அடுத்த இலக்கு... தனியார் பார்!

இது வேற உலகம்
எதிரில் இருப்பது யார் என்று தெரியாத அளவிற்கு இருட்டு, இளையராஜா இசை, சரக்கிற்கு இரண்டு மடங்கு விலை, சுவையான சைடு டிஷ்கள், சிகரெட் புகை இல்லாத கூடம் என, பந்தாவாக இருக்கிறது தனியார் பார்.'பார்' கேப்டன், தொழில் ரகசியத்தை அம்பலப்படுத்தினார்...
''காலையில, 11:00 மணியில இருந்து, சாயங்காலம் 5:00 மணி வரைக்கும், 'ஹாப்பி ஹவர்ஸ்'ன்னு சொல்வோம். இந்த நேரத்துல சரக்கடிக்க வந்தா, 10 சதவீதம் தள்ளுபடி.
''சரக்கு கூட, சுண்டல், ரசவடை, ரோஸ்டட் பப்பட், உப்பு வேர்க்கடலை, மிக்சர், காரசேவு, உப்பு/மிளகாய் தடவுன மாங்காய், வெண்ணெய், சாலட் எல்லாம் இலவசமா கொடுக்கிறோம். விஸ்கி, ரம் விரும்புற கஸ்டமர்ஸ், சிக்கன் வகையறாக்களை விரும்பி சாப்பிடுவாங்க. பீருக்கு சீஸ், செர்ரி, பைன் ஆப்பிள் ஸ்டிக்ஸ் கச்சிதமா இருக்கும்.
''இதுல, இந்த ரசவடைக்கும், உப்பு கடலைக்கும் ஒரு காரணம் இருக்கு. ரசவடையோட காரமும், புளிப்பும், நாக்குக்கு சும்மா, 'சுர்'ருன்னு இருக்கும். உப்பு கடலை, மாங்காய், வெண்ணெய் அயிட்டங்கள், நாக்குல பட்டவுடனே, தண்ணி குடிக்கிற ஆசையை கிளப்பும். இதனால, மானாவாரியா சரக்கு தொண்டைக்குள்ளே இறங்கும்.

கேப்டன்... நீங்க ஒரு விஞ்ஞானி!
''பொதுவா, ஒரு லார்ஜை, 15 நிமிஷம் வரைக்கும், நிதானமா, வைச்சு குடிக்கணும். சரக்குல, தண்ணி மட்டும் கலந்துக்கணும். சோடா, கூல்ட்ரிங்க்ஸ் கலந்துக்கிட்டா, வாயு தொந்தரவு வரும். குளிர்

நேரத்துல கொஞ்சம் இஞ்சி, மிளகு, ஏலக்காய் போட்டு, ஒரு லார்ஜ் பிராந்தி குடிச்சா, சளி தொந்தரவு போயிடும்.
''வெயில் நேரத்துல, உடம்பு குளிர்ச்சியா இருக்க, எலுமிச்சை சாறு சேர்த்த ஓட்கா, இளநீர் சேர்த்த விஸ்கி எடுத்துக்கணும். இஞ்சி, உப்பு, வறுத்த பூண்டு இதோட ஒரு லார்ஜ் பிராந்தி/ விஸ்கி எடுத்துக்கிட்டா, வாயு கோளாறு சரியாகும். வெயிலுக்கு பீர், ஓட்கா, ஜின்; குளிருக்கு பிராந்தி, விஸ்கி, ரம்ன்னு நல்லதை எடுத்து சொல்றோம். கேட்கறவங்க, நல்லா அனுபவிச்சு வாழ்றாங்க. கேட்காதவங்க, தாறுமாறா குடிச்சு வீணாப் போறாங்க!''
இப்படி, விசாலமான தன் விஞ்ஞான அறிவை, கேப்டன் நம்மிடம் விளக்கிக் கொண்டிருந்தபோது, ''கேப்டன்... என் பொண்டாட்டி இருக்காளே...'' என, கவுந்து கிடந்த, ஒரு லார்ஜ் 'பார்ட்டி' போதை தெளிந்து பிளிற, நம்மிடம் பேச்சை துண்டித்து, அடுத்த லார்ஜை, அவருக்காக நிரப்பத் தொடங்கினார், 'பார்' கேப்டன். அந்த சூழல், பாரிலிருந்து நம்மை வெளியேற்றியது.மனதிற்குள் ஒரு சிந்தனை. இனி, தமிழர்களின் மன மயக்கத்திற்கு, தாய்மையின் ஸ்பரிசம், மழலையின் புன்னகை, தென்றலாய் தழுவும் காதல், மெல்லிய துாறல், வர்ண வித்தை காட்டும் வானம் உள்ளிட்ட, மெல்லிய உணர்வுகள் காரணமாக இருக்கப் போவதில்லையா? போதை தான், முன் நிற்கப் போகிறதா?

அரசின் ஆல்கஹால் ஆசை
கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்ட, 2014 -15ம் ஆண்டிற்கான, தமிழக நிதிநிலை அறிக்கை தொடர்பாக, நிதித் துறை செயலர் அளித்த விளக்கத்தில், இந்த நிதியாண்டில், அரசின் வருமானம், 1,27,389 கோடி ரூபாயாக இருக்கும் எனவும், அதில், மதுபான விற்பனையின் மூலம், 26,295 கோடி ரூபாய் கிடைக்கும் எனவும் சொல்லியிருந்தார். ஆக, அரசின் மொத்த வருமானத்தில் ஐந்தில் ஒரு பகுதியை, டாஸ்மாக் தான் தரப்போகிறது. மேலும், இந்த நிதி ஆண்டில், அரசின் நிதிப் பற்றாக்குறை, 25,714 கோடி ரூபாயாக இருக்கும் என, கணக்கிடப்பட்டுள்ள நிலையில், அதை ஈடுகட்ட, டாஸ்மாக் 'சரக்கு' விற்பனையை மேம்படுத்த, அரசு முயலலாம். அந்த சூழலில், டாஸ்மாக் வருமானம், மொத்த வருவாயில் நான்கில் ஒரு பங்காக மாறவும்வாய்ப்புண்டு.கடந்த 2013-14ம் நிதியாண்டில், 22,000 கோடி ரூபாய் வருமானம் பெற்று, தமிழக காற்றில் ஆல்கஹால் நாற்றம் நிரப்பியிருக்கும் அரசு, அதைவிட, 4,000 கோடி அதிகமாக விற்பனை செய்ய வேண்டும் என, ஆபத்தான ஆசை கொண்டிருக்கிறது.

ஆஹா... அடடா!
பொதுவாக, 'குற்றங்களுக்கு அடிப்படை காரணம், மது தான்' என்கிறார்கள், சமூக ஆர்வலர்கள்! ஆனால், கடந்த பிப்ரவரி மாதம், தமிழக முதல்வர் வெளியிட்ட புள்ளி விவர கணக்கோ, 'ஆஹா... அடடா...' என்று சொல்ல வைக்கிறது.அதன்படி, 2010 தி.மு.க., ஆட்சியில் பதிவான பாலியல் வழக்குகளின் எண்ணிக்கை, 638; 2013ல் பதிவான பாலியல் வழக்குகளின் எண்ணிக்கை, 313. அதே போல், 2012ல், பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்காக, தமிழகத்தில் பதிவான வழக்குகள், 7,192 மட்டுமே; ஆனால், மது விற்பனை நடைபெறாத குஜராத்தில், பதிவான வழக்குகளின் எண்ணிக்கையோ, 9,561.ஆக, 'மது விற்பனை அதிகரித்து வந்தாலும், குற்றங்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது' என்பதையும், 'குற்றங்களுக்கு காரணம் மதுவல்ல' என்பதையும், தமிழ்'குடி'மக்கள் நன்றாக புரிந்து குடிக்க... இல்லை... இல்லை... புரிந்து கொள்ள வேண்டும்!

குடி என்பது நோய் :
''முன்னாடியெல்லாம், போதை மீட்டெடுப்பு மையத்துக்கு, கணவனை அழைச்சுட்டு மனைவி வருவாங்க! இப்போது, ஒரு அம்மா தன் பையனை கூட்டிட்டு வர்றாங்க. அந்த அளவுக்கு, இளவயது குடிகாரர்களோட எண்ணிக்கை அதிகமாயிடுச்சு! பொதுவா, மூளையோட முன்பகுதி, 21 வயசு வரைக்கும் வளரும். அப்படி இருக்கறப்போ, 21 வயசுக்கு முன்னாடி, மதுவைத் தொட்டா, அதுக்கு அடிமையாக வாய்ப்பிருக்கு. நாள் ஒன்றுக்கு, 3 யூனிட் (90 மி.லி.,) தாண்டிட்டாலே, அது அபாயகரமான குடி தான்! ஏன்னா... ஒரு யூனிட் (30 மி.லி.,) ஆல்கஹாலை செரிக்கவே, கல்லீரலுக்கு ஒரு மணி நேரமாகும். அப்படி இருக்கறப்போ, ஒரு குவார்ட்டருக்கு (180 மி.லி.,) எவ்வளவு நேரமாகும்! அதனால, 'குடி'யை பழக்கமாக்கிடாதீங்க!''ஏன்னா, 'குடி'ங்கறது ஒரு நோய். அந்த நோய் நெருங்காம, நாமதான் பார்த்துக்கணும். அதுக்கு போதுமான விழிப்புணர்வை, அரசு ஏற்படுத்தணும். மொத்த மது விற்பனை வருவாய்ல, 10 சதவீதத்தை, குடி ஒழிப்பு திட்டத்துக்காக ஒதுக்கணும்!''- டி.டி.கே., மருத்துவமனை மருத்துவர், திருமகளின் வார்த்தைகளில், அப்படி ஒரு எதிர்பார்ப்பு!

களித்தானை காரணம் காட்டுதல் கீழ்நீர்க்
குளித்தானைத் தீத்துரீஇ அற்று
குடிபோதைக்கு அடிமையாகி விட்டவனை திருத்த அறிவுரை கூறுவதும், தண்ணீருக்குள் மூழ்கிவிட்டவனைத் தேடிக் கண்டுபிடிக்க, தீப்பந்தம் கொளுத்திக் கொண்டு செல்வதும் ஒன்றுதான் என்கிறது, வள்ளுவம்.'குடி என்பது நோய்' என்பதால், இது உண்மை தான் என்கிறது மருத்துவம்; என்றாலும், 'சிகிச்சை' எனும் தீப்பந்தம் கொளுத்தியபடி இருக்கிறார் திருமகள்.

கடமையை தொலைத்த அரசு
அரசியலமைப்பு சட்டத்தின் ஷரத்து 47ன் படி, மக்களின் வாழ்க்கை தரத்தையும்,

Advertisement

ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும் கடமை, தனக்கு இருக்கிறது என்பதை, அரசு பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை; அதே போல், 'விஷம், பருகியவனை மட்டுமே சாய்க்கும்; ஆனால் மது, அவனோடு, அவன் சம்பந்தப்பட்ட அனைவரையும் சாய்க்கும்' என்ற உண்மையை, தமிழன் புத்தியில் ஏற்றவில்லை. இந்த இரண்டும் தான், டாஸ்மாக்கின் அசுர பலம்.

45 ரூபாயில் 5 பேருக்கு உணவு!
அந்த 'டாஸ்மாக்' வாசலில் புலம்பிக் கொண்டிருந்த, குடிமகனின் குடும்ப உறுப்பினர்கள் எண்ணிக்கை சொல்லவில்லையே! மொத்தம் ஐந்து பேர். அவன் தினமும் தரும் அந்த, 45 ரூபாயில் தான், அத்தனை பேரும் பசியாற வேண்டும். இது முடியுமா என்கிறீர்களா? ஏன் முடியாது! அதான் 'மலிவு விலை உணவகங்கள்'
இருக்கிறதே!சபாஷ்! வாழ்க தமிழ்நாடு!

'மதுபானக் கடை' கலைஞன்
''என்னைப் பொறுத்தவரைக்கும், 'குடி'ங்கறது பிரச்னையல்ல! பிரச்னையினால தான் குடியே! என்ன ஒண்ணு... 30 ரூபாய் செலவுல, ரேஷன் தந்து பசியாற வைக்கிற அரசு, 82 ரூபாய் வசூலித்து, ஆரோக்கியத்தை காலி பண்றதுல கொஞ்சம் வருத்தம்! ஏன்னா, காய்ச்சி வடிக்கப்படற (distilled) இந்த சரக்குகள் அத்தனையும், உயிரை கொஞ்சம் கொஞ்சமா குடிக்கிற விஷம். இதுக்கு, 'கள்' எவ்வளவோ பரவாயில்லை!''
- அக்கறையோடு சொல்கிறார், 'மதுபானக் கடை' படத்தின் இயக்குனர் கமலக்கண்ணன்.
ஒருபோராளியின் கோபம்:

''உலக சுகாதார நிறுவனம், 'மது என்பது வியாபார பொருளல்ல; அது, அரசுகள் கட்டுப்படுத்த வேண்டிய, ஓர் சிறப்புப் பொருள்'ன்னு சொல்லி, அழுத்தமான மூன்று காரணங்களை முன் வைக்குது. முதலாவதாக, மதுவின் நச்சுத்தன்மை (toxicity), இரண்டாவதாக, போதை உண்டாக்கும் தன்மை (intoxication), மூன்றாவதாக, போதைக்கு அடிமையாக்கும் தன்மை (addictive property). ஆனா, இதைப் பத்தி யோசிக்காம, ஆண்டுக்கு, 26,000 கோடின்னு இலக்கு நிர்ணயம் பண்ணி, மாபியா கும்பல் மாதிரி, அரசு செயல்பட்டுட்டு இருக்கு.''குற்றங்களுக்கும், உயிரிழப்புகளுக்கும் மது தான் முக்கிய காரணம். குறிப்பா, எய்ட்ஸ் நோயாளிகள்ல, 90 சதவீத பேருக்கு குடிப் பழக்கம் இருக்கறதா, ஒரு ஆய்வறிக்கை சொல்லுது. ஆக, தவறு செய்ய துாண்டுறது போதை தான். 'போலியோவை ஒழிச்சுட்டோம்'னு பெருமைப்படற அரசு, போதை விபத்துகளால, தினசரி மக்களை ஊனமாக்கிக்கிட்டே தான் இருக்கு. இதுக்கு முக்கிய காரணம், மதுவுக்கு எதிரான கொள்கைகள்னு, அரசாங்கத்துக்கிட்டே எதுவும் இல்லாதது தான்!''முதல்ல, இந்த கொள்கைகளை அரசு வகுக்கணும். அதுல, வருடத்திற்கு 20 சதவீதம், மது விற்பனை குறைப்பும், ஞாயிறு கட்டாய விடுமுறையும் முக்கிய அம்சமா இருக்கணும்!''
- எரிமலையாய் வெடிக்கிறார், அரசின் மதுக் கொள்கைகளுக்கு எதிராய், பல்வேறு வழக்குகளை தொடுத்து போராடி வரும், சமூக ஆர்வலர் 'பாடம்' நாராயணன்!

வில்லன் யார்?
* பீர் தவிர்த்த மற்ற தொழிற்சாலை மதுபானங்களில், 42.8 சதவீதம் எத்தனால் இருப்பதாக சொல்கின்றனர், மருத்துவர்கள். இந்த எத்தனாலே, போதைக்கும், 60 சதவீத உடல் நோய்களுக்கும் காரணம் என்கின்றன, உலக சுகாதார நிறுவன ஆய்வுகள்!
*''ஒரு மரத்து கள்ளை, ஒரு மண்டலம் குடித்து வர, பல நோய்கள் குணமாகும்'' என்கிறது 'கள்' ஆதரவு தரப்பு. ஆனால், அதிலும் எத்தனால் உண்டு என்று வாதிடுகிறது, 'டாஸ்மாக்' தரப்பு.

கள் வருமா?
''எந்நிலையிலும் கலப்படத்திற்கு வாய்ப்புண்டு என்பதால், 'கள்' இறக்குவது தடை செய்யப்பட்டு உள்ளது என்கிறது, தமிழகம். ஆனால், அண்டை மாநிலமான கேரளாவில், ஏற்றுமதிக்கு கள் தயாராகி வருகிறது. மதச்சார்பற்ற, ஜனநாயக, சமத்துவ குடியரசில், எங்ஙனம் அய்யா, ஒரே காரியம் ஒரு ஊரில் சரியாகவும், மறு ஊரில் தப்பாகவும் இருக்க இயலும்?''- எழுத்தாளர் நாஞ்சில் நாடனின், 'உண்ணற்க கள்ளை' கட்டுரை எழுப்பிய இந்த கேள்விக்கு, இன்று வரை பதில் இல்லை எனும்போது, 'கள் வருமா?' என்ற கேள்விக்கும், தமிழகத்தில் இப்போது இடம் இல்லை.

மனதிற்குள் ஒரு சிந்தனை. இனி, தமிழர்களின் மன மயக்கத்திற்கு, மழலையின் புன்னகை, தென்றலாய் தழுவும் காதல், மெல்லிய துாறல், வர்ண வித்தை காட்டும் வானம், தாய்மையின் ஸ்பரிசம் உள்ளிட்ட, மெல்லிய உணர்வுகள் காரணமாக இருக்கப் போவதில்லையா? போதை தான், முன் நிற்கப் போகிறதா?
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (81)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv - Bangalore,இந்தியா
30-ஏப்-201414:35:00 IST Report Abuse
skv<srinivasankrishnaveni> அடப்பாவிகளா இவ்ளோ வெறியா காசுக்கு அலையுதுங்களே மக்களை போதையில் தள்ளி காசுக்கு பறக்கும் அரசு நிச்சயம் கவிழும் பாத்துண்ணே இருங்க
Rate this:
Share this comment
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
30-ஏப்-201414:33:24 IST Report Abuse
Pugazh V கூட்டம் ஏன் கருணாநிதியை இதில் இழுக்கிறது? கள்ள சாராயம் குடித்தும், வார இறுதிகளில் பாண்டிச்சேரி, பாலக்காடு போன்ற அண்டை மாநிலங்களுக்கு ஓடிக்கொண்டும் அலைந்து கொண்டிருந்தார்கள். இப்போது சமூகம் சீரழிந்ததற்கு, அநாகரீகம் தலை தூக்கியதற்கு, கலாச்சாரம் அழிந்து கொண்டிருப்பதற்கு திரைப்படங்களும், இணைய தளங்களும், தொலைக்காட்சிகளும் மட்டுமே காரணம். அரசு, நல்ல புத்தகங்களைக் கூடத் தான் மலிவு விலையில் விற்கிறது. இலவச நூலகங்கள் திறந்து வைத்திருக்கிறது. அற நிலையத் துறை மூலம் கோவில்கள் நடக்கின்றன. ஆலோசனை மையங்கள் பல அரசு மருத்துவமனைகளில் நடத்தப்படுகிறது. நல்லது எதையும் நம்ம மக்கள் உபயோகப் படுத்த மாட்டார்கள் அல்லவா? எந்த அரசாகத் தான் இருக்கட்டுமே, அரசை ஏன் குறை சொல்ல வேண்டும்?
Rate this:
Share this comment
Cancel
ரத்தினம் - Muscat,ஓமன்
30-ஏப்-201408:14:44 IST Report Abuse
ரத்தினம் தமிழர்களின் குடியை கெடுத்த நாசகாரர்கள் இந்த கருணாநிதியும் ஜெயலலிதாவும். இவர்களை தூக்கி எறியும் போதுதான் தமிழகத்துக்கு விடிவு காலம்.
Rate this:
Share this comment
Cancel
Amal Anandan - chennai,இந்தியா
30-ஏப்-201408:05:02 IST Report Abuse
Amal Anandan மீண்டும் இந்த கட்சிக்கே வாக்களிப்போம், தமிழ் நாட்டை சீரழிப்போம். கும்பிடு சாமிகள் இதை எல்லாம் மறந்து, இந்த ஆட்சியை புகழ்ந்து தள்ளுவார்கள். கொடுமை
Rate this:
Share this comment
Cancel
Krishnan (Sarvam Krishnaarpanam....) - Hindu American Foundation,யூ.எஸ்.ஏ
30-ஏப்-201400:03:00 IST Report Abuse
Krishnan (Sarvam Krishnaarpanam....) இந்த செய்தியை வெளியிட்ட தினமலருக்கு, எவ்வளவு நன்றிகள் கூறினாலும் போதாது.. கருத்து எழுதும் வாசகர்களில் யாருக்கேனும் குடிப்பழக்கம் இருந்தால், தயவு செய்து விட்டு விடுங்கள்.. இது நீங்கள் இந்த நாட்டிற்கு, உங்கள் வீட்டிற்கு செய்யும் நன்மை. நீங்கள் நன்றாக இருக்கவேண்டும் என்று நினைக்கும் உங்கள் குடும்பத்திற்கும், உங்கள் மூதாதயர்களுக்கும் நீங்கள் கொடுக்கும் மரியாதை.
Rate this:
Share this comment
Cancel
Sridhar - Chennai,இந்தியா
29-ஏப்-201423:19:42 IST Report Abuse
Sridhar உண்மையில் கூற போனால் கள் என்பது காலம் தொட்டு தமிழன் பண்பாடு.. அது இயற்கையாக கிடைக்கும் மது பானம் ஆகும்... உடலுக்கு எந்த கேடும் விளைவிக்கத பானம்.. மிகவும் மலிந்த விளையும் கூட. ஆனால் அரசாங்கத்திற்கு வருமானம் கிடைக்காது என்ற ஒரே காரணத்துக்காக இயற்கை மதுபானம் முடக்கப்பட்டு செயற்கை மதுபானம் அதிக விலைக்கு விற்கபடுவது கண்டிக்கத்தக்கது .... மது பானம் முழுவ்ச்துமாக தடுக்கப்படவிடினும் இயற்கைக்கு கை கொடுப்போம்...
Rate this:
Share this comment
Cancel
மணிமேகலை - ரோம் ,இத்தாலி
29-ஏப்-201423:03:52 IST Report Abuse
மணிமேகலை  இவர்களெல்லாம் பெரியார் வழி வந்தவர்களாம் அவர் மதுவுக்கு எதிராக தன் தோப்பில் இருந்த தென்னைமரதைஎல்லாம் வெட்டியவர் .
Rate this:
Share this comment
Cancel
மணிமேகலை - ரோம் ,இத்தாலி
29-ஏப்-201422:41:08 IST Report Abuse
மணிமேகலை  தமிழனுக்கு சாவு மணி அடிக்க வந்த நீ 100 ஆண்டு வாழ்க .
Rate this:
Share this comment
Cancel
Natarajan Ramanathan - chennai,இந்தியா
29-ஏப்-201421:01:53 IST Report Abuse
Natarajan Ramanathan டாஸ்மாக் விற்பனையை அதிகரிக்க அரசு ஊழியர்களுக்கு சம்பளத்தின் ஒரு பகுதியை டாஸ்மாக் கூப்பன்களாக கொடுக்கலாம். தேசீய ஊராக வேலை வாய்ப்பு திட்டத்தில் கூலிக்கு பதில் பெண்களுக்கு குவார்ட்டர் ஆண்களுக்கு ஆப் என்று வழங்கலாம். டாஸ்மாக் கடையை 24 மணிநேரமும் திறந்து வைத்து அவர்களுக்கு மட்டும் தடையில்லா மின்சாரம் வழங்கலாம். வறுமை கோட்டுக்கு கீழே உள்ளவர்களுக்கு ரேஷனில் இரண்டு ரூபாய் விலைகுறைத்து கொடுக்கலாம். குடியை கொண்டாடும் திரைப்படங்களுக்கு வரி விலக்கு வழங்கலாம். திருக்குறளில் கள்ளுண்ணாமை என்ற அதிகாரத்தை மட்டும் நீக்கிவிடலாம். குடி பழக்கம் உள்ளவர்களுக்கு மட்டுமே அரசு வேலைவாய்ப்பு என்று அறிவிக்கலாம்.
Rate this:
Share this comment
Cancel
Natarajan Ramanathan - chennai,இந்தியா
29-ஏப்-201420:50:26 IST Report Abuse
Natarajan Ramanathan டாஸ்மாக் மூத்திரம் குடிப்பவர்கள் 90% திராவிட கட்சியினரே. அப்படியும் இரண்டு திராவிட கட்சிகளும் அவர்களை அழிக்க துடிக்கின்றன. இது எங்குபோய் முடியுமோ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X