அரசியல் செய்தி

தமிழ்நாடு

நடிகைகள் நமீதா, தேவயானிக்கு காங்கிரஸ் திடீர் வலை

Updated : மே 03, 2014 | Added : மே 02, 2014 | கருத்துகள் (6)
Advertisement
நடிகைகள் நமீதா, தேவயானிக்கு காங்கிரஸ் திடீர் வலை

சென்னை : தமிழக காங்கிரஸ், 2016 சட்டசபை தேர்தலில் தனித்து போட்டியிடும் என, அக்கட்சியின் துணை தலைவர் ராகுல் அறிவித்து விட்டதால், கட்சியை பலப்படுத்தவும், கவர்ச்சி அரசியலுக்கு முக்கியத்துவம் அளிக்கவும், நடிகர்கள் கார்த்திக், பாண்டு, நடிகைகள் நமீதா, தேவயானியை காங்கிரசில் சேர்ப்பதற்கான பேச்சு நடந்து வருகிறது என, அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

லோக்சபா தேர்தலில், தமிழக காங்கிரஸ், 39 தொகுதிகளில், தனித்து போட்டியிட்டது. நாடாளும் மக்கள் கட்சியின் தலைவர் நடிகர் கார்த்திக், சமூக சமத்துவ படையின் தலைவர் சிவகாமி ஐ.ஏ.எஸ்., ஆகியோர் காங்கிரசுக்கு ஆதரவளித்து, அக்கட்சியின் வேட்பாளர்களுக்கு ஆதரவாக, தீவிரமாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.சிவகங்கை தொகுதியில் போட்டியிட்ட, மத்திய நிதி அமைச்சர் சிதம்பரத்தின் மகன் கார்த்திக் சிதம்பரத்திற்கு ஆதரவாக, சின்னத்திரை நட்சத்திரங்கள் மற்றும் சிரிப்பு நடிகர் பாண்டு ஆகியோரும், பிரசார களத்தில் குதித்தனர். நடிகர், நடிகைகளின் பிரசாரத்திற்கு, காங்கிரஸ் கட்சியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால், அ.தி.மு.க., தி.மு.க.,வில் இருக்கும் நட்சத்திர பட்டாளங்களால் வெளிப்படுத்தப்படும் கவர்ச்சி அரசியலைப் போல, தமிழக காங்கிரசிலும் கொண்டு வர வேண்டும் என, இளைஞர் காங்கிரசார் விருப்பம் தெரிவித்துள்ளனர்.நாடாளும் மக்கள் கட்சியை கலைத்து விட்டு, காங்கிரஸ் கட்சியில், நடிகர் கார்த்திக் இணைந்தால், அவருக்கு கர்நாடக மாநிலத்திலிருந்து, ராஜ்யசபா எம்.பி., பதவி வழங்கப்படும் என்றும், அகில இந்திய காங்கிரஸ் செயலர் பதவி வழங்கப்படும் என்ற வாக்குறுதியும் அளிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில் நடிகைகள் நமீதா, தேவயானி ஆகிய இருவரையும், தேர்தல் பிரசாரத்திற்கு காங்கிரசார் அழைத்தனர். ஆனால், அவர்கள் இருவரும், சின்னத் திரை படப்படிப்புகளில் பிசியாக இருந்ததால், பிரசாரத்திற்கு வர முடியாது என, மறுத்து விட்டனர்.இருந்தாலும், கார்த்தி சிதம்பரத்தின் ஆதரவாளரும், முன்னாள் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகியுமான ரஞ்சன் குமார், நடிகைகள் இருவரிடமும், காங்கிரஸ் கட்சியில் இணைய வேண்டும் என்ற கோரிக்கையை வைத்துள்ளார்.

இதுகுறித்து, தமிழக காங்கிரசார் கூறியதாவது:லோக்சபா தேர்தல் முடிவில், காங்கிரசின் ஓட்டு சதவீதம் அதிகமாக இருக்கும். அதனால், அடுத்த சட்டசபை தேர்தலில், எங்கள் கட்சியுடன் கூட்டணி அமைக்க, திராவிடக் கட்சிகள் போட்டி போடும். ஆனால், 2016 சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் தனித்து போட்டியிட வேண்டும் என, ராகுல் கூறிவிட்டார்.எனவே, கட்சியை பலப்படுத்த, பலதரப்பு மக்களையும் கவரும் வகையில், சினிமா, விளையாட்டு போன்ற புகழ்மிக்க துறையில் பணியாற்றுபவர்களை, கட்சியில் சேர்க்கும் திட்டத்தை வகுத்துள்ளோம். முதல் கட்டமாக, நடிகர்கள் கார்த்திக்கையும், பாண்டுவையும் கட்சியில் சேர்ப்போம். கர்நாடகாவில் இப்படித்தான் நடிகை குத்து ரம்யாவை கட்சியில் சேர்த்து, கட்சிக்கு பலம் சேர்த்தனர். அவருக்கும் எம்.பி.,யாகும் வாய்ப்பும் கிடைத்தது. இந்தி நடிகை நக்மாவுக்கும் லோக்சபா தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.அதேபோல், நமீதா காங்கிரஸ் கட்சியில் இணைந்தால், குஜராத் மாநில சட்டசபை தேர்தலில் போட்டியிட அவருக்கு வாய்ப்பு கிடைக்கும். அதேபோல், தேவயானி அல்லது அவரது கணவருமான இயக்குனர் ராஜகுமாரனுக்கு, தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும். எனவே, லோக்சபா தேர்தல் முடிவுக்கு பின், காங்கிரசில் நடிகர், நடிகைள் பலர் சேருவர்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
venkat - ngr,இந்தியா
02-மே-201406:06:24 IST Report Abuse
venkat எதை தின்றால் பித்தம் தெளியும்? நிலையில் காங் உள்ளதோ?
Rate this:
Share this comment
Cancel
Tamizhmagan - Singapore,சிங்கப்பூர்
02-மே-201405:56:48 IST Report Abuse
Tamizhmagan நமீதா ஓகே.. தேவயாணி எதுக்கு? அவங்க ஒன்னும் கவர்ச்சி நடிகை இல்லையே..? எங்கேயோ தப்பு நடக்குது.. ராகுல் உஷார்..
Rate this:
Share this comment
Cancel
Ootai Vaayan - Kovai,இந்தியா
02-மே-201405:31:32 IST Report Abuse
Ootai Vaayan என்னுடைய ஓட்டு இனிமேல் காங்கிரசுக்குத்தான்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X