பொது செய்தி

தமிழ்நாடு

விவசாயிகளுக்கு இலவச பயிற்சி

Added : மே 06, 2014
Advertisement

மதுரை: மதுரை விநாயகபுரத்தில் உள்ள மாநில நீர் மேலாண்மை பயிற்சி நிலையம் சார்பில், விவசாயிகளுக்கு தண்ணீர் சிக்கனம் குறித்த இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது. மதுரையில் ஜூன் 3 முதல் 6 வரை, திண்டுக்கல்லில் ஜூலை 1 முதல் 4 வரை, தேனியில் ஜூலை 8 முதல் 11 வரை, ராமநாதபுரத்தில் அக்., 7 முதல் 10 வரை, சிவகங்கையில் டிச., 2 முதல் 5 வரை, விருதுநகரில் ஜூன் 24 முதல் 27 வரை பயிற்சி அளிக்கப்படுகிறது. சொட்டுநீர், தெளிப்பு நீர், பண்ணை குட்டை அமைத்தல், வயல்வெளிகளில் மழைநீர் சேகரிப்பு, மாற்றுப் பயிர் திட்டம் மற்றும் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி, பயிர் சாகுபடி குறித்த நான்கு நாட்கள் பயிற்சி அளிக்கப்படுகிறது. மதிய உணவு மற்றும் போக்குவரத்து செலவு வழங்கப்படும், என துணை இயக்குனர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார். மேலும் தகவல்களுக்கு: 0452 -291 1058ல் தொடர்பு கொள்ளலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X