செவ்வாய் பயணத்திற்கு 44 இந்தியர்கள் முதற்கட்ட தேர்வு| 44 Indians shortlisted for one-way trip to Mars | Dinamalar

செவ்வாய் பயணத்திற்கு 44 இந்தியர்கள் முதற்கட்ட தேர்வு

Added : மே 08, 2014 | கருத்துகள் (3) | |
லண்டன் : செவ்வாய் கிரகத்திற்கு பயணம் மேற்கொள்ள உள்ளவர்களில் முதற்கட்ட பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. நெதர்லாந்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் தொண்டு நிறுவனம், 2024ம் ஆண்டில், செவ்வாய் கிரகத்திற்கு, மனிதர்களை சுற்றுப்பயணத்திற்கு அனுப்பும் பணியில் ஈடுபட்டுள்ளது. இதில் பயணம் செய்ய விண்ணப்பித்தவர்களில் முதற்கட்டத் தேர்வில் தேர்ச்சி பெற்ற 705 பேர்களின் பட்டியல்

லண்டன் : செவ்வாய் கிரகத்திற்கு பயணம் மேற்கொள்ள உள்ளவர்களில் முதற்கட்ட பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. நெதர்லாந்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் தொண்டு நிறுவனம், 2024ம் ஆண்டில், செவ்வாய் கிரகத்திற்கு, மனிதர்களை சுற்றுப்பயணத்திற்கு அனுப்பும் பணியில் ஈடுபட்டுள்ளது. இதில் பயணம் செய்ய விண்ணப்பித்தவர்களில் முதற்கட்டத் தேர்வில் தேர்ச்சி பெற்ற 705 பேர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த முதற்கட்ட பட்டியலில், 17 பெண்கள் உள்ளிட்ட 44 இந்தியர்கள் இடம்பெற்றுள்ளனர். இந்த முதற்கட்டதேர்வில், 140 நாடுகளிலிருந்து, 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X