சிரியாவில் குண்டு வெடிப்பு: கட்டடங்கள் தரைமட்டம்

Added : மே 09, 2014 | கருத்துகள் (1) | |
Advertisement
டமாஸ்கஸ்: சிரியாவில், பிரபல ஓட்டல் அருகே நிகழ்ந்த குண்டு வெடிப்பில், அந்த ஓட்டலும், அதை சுற்றியுள்ள கட்டடங்களும் தரைமட்டமாயின. கடந்த, 40 ஆண்டுகளுக்கும் மேலாக, சிரிய அதிபராக பதவி வகிக்கும், பஷர் அல் ஆசாத்தை, பதவி விலகக் கோரி, அங்கு போராட்டம் நடந்து வருகிறது.இந்தப் போராட்டத்தில், அரசுக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில், ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர்
 சிரியாவில் குண்டு வெடிப்பு: கட்டடங்கள் தரைமட்டம்

டமாஸ்கஸ்: சிரியாவில், பிரபல ஓட்டல் அருகே நிகழ்ந்த குண்டு வெடிப்பில், அந்த ஓட்டலும், அதை சுற்றியுள்ள கட்டடங்களும் தரைமட்டமாயின. கடந்த, 40 ஆண்டுகளுக்கும் மேலாக, சிரிய அதிபராக பதவி வகிக்கும், பஷர் அல் ஆசாத்தை, பதவி விலகக் கோரி, அங்கு போராட்டம் நடந்து வருகிறது.
இந்தப் போராட்டத்தில், அரசுக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில், ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்து உள்ளனர். ரசாயன தாக்குதல் மற்றும் கொடூரமான முறையில், ஏராளமான குழந்தைகளும் கொல்லப்பட்டு உள்ளனர். இந்நிலையில், சிரியாவின் புராதன நகரமான, அலெப்பாவில் உள்ள கார்ல்டன் ஓட்டல் அருகே, நேற்று சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. இதில், அந்த பகுதியில் உள்ள ஓட்டல் உள்ளிட்ட, பல கட்டடங்கள் பலத்த சேதமடைந்தன. உயிர் சேதம் குறித்து, அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடப்படவில்லை.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
TIRUVANNAMALAI kulasekaran - AUSTRALIA  ( Posted via: Dinamalar Android App )
09-மே-201404:34:42 IST Report Abuse
TIRUVANNAMALAI kulasekaran என்ன அநியாயம் இது. ஒரு லட்சம் பேரா இறந்துபோனார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X