துபாயில் சாலை விபத்து: 10 இந்தியர்கள் பலி| Dinamalar

துபாயில் சாலை விபத்து: 10 இந்தியர்கள் பலி

Added : மே 11, 2014 | கருத்துகள் (1) | |
துபாய் : துபாயில் நடந்த சாலை விபத்தில், இந்திய தொழிலாளர்கள் 10 பேர் உட்பட, 15 தொழிலாளர்கள் பரிதாபமாக இறந்தனர்.ஐக்கிய அரபு எமிரேட்டில் உள்ள துபாயில், ஏராளமான இந்திய தொழிலாளர்கள், பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், இந்தியா மற்றும் வங்கதேசத்தை சேர்ந்த, 27 தொழிலாளர்கள், கட்டுமான பணி நடக்கும் இடத்துக்கு, மினி பஸ்சில் சென்றனர்.அப்போது, சாலையோரத்தில்

துபாய் : துபாயில் நடந்த சாலை விபத்தில், இந்திய தொழிலாளர்கள் 10 பேர் உட்பட, 15 தொழிலாளர்கள் பரிதாபமாக இறந்தனர்.ஐக்கிய அரபு எமிரேட்டில் உள்ள துபாயில், ஏராளமான இந்திய தொழிலாளர்கள், பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், இந்தியா மற்றும் வங்கதேசத்தை சேர்ந்த, 27 தொழிலாளர்கள், கட்டுமான பணி நடக்கும் இடத்துக்கு, மினி பஸ்சில் சென்றனர்.அப்போது, சாலையோரத்தில் நின்று கொண்டிருந்த டிராக்டர் மீது, தொழிலாளர்கள் சென்ற பஸ் மோதியது. இதில், 15 பேர் தொழிலாளர்கள், சம்பவ இடத்திலேயே இறந்தனர். இவர்களில், 10 பேர், இந்தியர்கள்.'இவர்கள் அனைவரும், பீகார் மாநிலத்தை சேர்ந்தவர்கள். அவர்களின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது' என, அங்குள்ள இந்திய துாதரகம் தெரிவித்துள்ளது. துபாயில், இந்தாண்டு நடந்த விபத்துக்களிலேயே, இதில் தான், அதிகம் பேர் இறந்துள்ளனர்' என, அங்குள்ள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X