சமாளிக்க முடியாத கையெறி குண்டு வீச்சு| Dinamalar

சமாளிக்க முடியாத கையெறி குண்டு வீச்சு

Added : மே 13, 2014
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
சமாளிக்க முடியாத கையெறி குண்டு வீச்சு

துப்பாக்கி முனையில்: 78. டிகே வெளியில் வந்தவுடன் மருத்துவமனையில் இருந்து வெளியே செல்லும் வழி எங்கேயென்று கஸாப் கேட்டான். வெளியே செல்வதற்கு ஒரேயொரு படிக்கட்டு வழிமட்டுமே உள்ளதென்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே, உயரமான பயங்கரவாதி போலீஸ், போலீஸ் என்று கத்தி கொண்டே படிக்கட்டுகளை நோக்கிச் சுட ஆரம்பித்தான். கஸாப் டிகேயின் முதுகின்மீது துப்பாக்கியை அழுத்திக் கொண்டே படிக்கட்டுகளை நோக்கித் தள்ளினான். இரண்டு பயங்கரவாதிகளும் டிகேயை 6வது தளத்துக்கும் மொட்டை மாடி - டெரஸ் - இடையில் உள்ள இடத்துக்குத் தள்ளிக் கொண்டு வந்தனர். அங்கே 6வது மாடியின் முன்புள்ள லிப்ட் அருகில் 3-4 போலீஸ்காரர்களை டிகே பார்த்தான். தன்னையும் தீவிரவாதி என்று போலீஸ் சந்தேகப்படலாம் என்ற பயத்தில் டிகே கைகளை உயர்த்தினான். போலீசாருடன் மேலே வந்த காமா மருத்துவமனை ஊழியர் கைலாஷ் (பி.டபிள்யூ111) டிகேயை தங்களது மருத்துவமனை ஊழியர் என்று அடையாளம் காட்டினார். கஸாப் மற்றும் அவனது கூட்டாளியை மொட்டை மாடிக்குப் பின்வாங்குமாறு செய்து போலீசார் சுட்டனர். இந்த நேரத்தில் டிகே தப்பித்துக் கொண்டு ஆறாவது தளத்துக்கு வந்து சேர்ந்து, போலீசாரிடம் தீவிரவாதிகள் இருவர் நுழைந்துள்ளதைத் தெரிவித்தார்.


கையெறி குண்டு வீச்சு:

79. கசாப் மேலேயிருந்து சுட ஆரம்பித்தான். ஆறாவது தளத்தின்மீது ஒரு கைக்குண்டையும் எறிந்தான். அதிலிருந்து தெறித்த சிதறல்கள் டிகேயின் கழுத்தைக் காயப்படுத்தி ரத்தம் வழிந்தது. இந்த வெடியில் சில போலீசாரும் காயமடைந்தனர். போலீசாரை நோக்கி நெட்டையனும் குட்டையனும் தொடர்ந்து சுட்டனர். ஒரு போலீஸ் அதிகாரியும், போலீஸ்காரரும் குண்டடி பட்டு லிப்ட் முன்பு விழுவதை டிகே கண்டார். சிறிது நேரத்துக்குப் பின் இரண்டு பயங்கரவாதிகளும் ஒரு கைக்குண்டை மீண்டும் ஏறிந்து, லிப்டை நோக்கிக் கண்மூடித்தனமாகச் சுட்டனர். இந்த இரண்டாவது குண்டு, துப்பாக்கித் தாக்குதலில் மற்ற போலீசாரும் அதிகாரிகளும் காயமடைந்தனர்.
80. இந்த சமயத்தில் டிகே இரண்டாவது தளத்துக்கு இறங்கி வந்தார். அவருடன் சக ஊழியர் கைலாஷ் மற்றும் இரண்டு போலீசார் உடன் வந்தனர். ஒருவர் உடன் இருந்தார். மற்றவர் இறஙண்கிச் சென்றார். டிகே மற்றும் ஒரு போலீசாருக்கும் முதலுதவி அளிக்கப்பட்டுப் பின்னர் ஜிடி மருத்துவமனைக்கு மேலும் சிகிச்சைக்கு அனுப்பப்பட்டார். கைக்குண்டுச் சிதறல்கள் கழுத்தில் தங்கியிருந்ததால், டி.கே. கேஈஎம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் அனுமதிக்கப்பட்டு ஏழு நாட்கள் சிகிச்சை அளிக்கப்பட்டது.

81. 2008 டிசம்பர் 27 நடைபெற்ற அணிவகுப்பிலும் டிகே மனுதாரரை - கசாப் - அடையாளம் காட்டினார்.


மொட்டை மாடிக்கு செல்லும் வழியில்:

82. சம்பவ சமயத்தில், மும்பை மத்திய பிராந்தியத்தில் கூடுதல் போலீஸ் கமிஷனராக இருந்தவர் ஐபி 5 அந்தஸ்துள்ள போலீஸ் அதிகாரி சதானந்த வஸந்த தாதே (பி.டபிள்யூ118). சிஎஸ்டியில் தாக்குதல் நடந்த 26.11.2008 நாளில் இரவு சுமார் 10.00 மணிக்கு இவர் தனது வீட்டில் இருந்தார். சிஎஸ்டி இவரது கடமை எல்லைக்கு உட்பட்டதல்ல. என்றாலும் சிஎஸ்டி உள்ளிட்ட பகுதியின் அதிகாரியாக இருந்த டாக்டர் வெங்கடேசன் கேட்டுக் கொண்டதற்கிணங்க, கடமை உணர்வுடன், தாதே உடனே கிளம்பினார். அவரது வீட்டுக்கு அருகே இருந்த மலபார் ஹில்ஸ் காவல் நிலையத்துக்குச் சென்று ஒரு கார்பைன் அதற்குத் தேவையான 30 ரவுண்டுகளை எடுத்துக் கொண்டார். சிஎஸ்டி செல்லும் வழியில் பயங்கரவாதிகள் நடமாட்டம் பற்றி அறிந்து கொண்டார். இந்தச் செய்தியைக் கொண்டு காமா மருத்துவமனைக்குத் தனது குழுவுடன் இரவு சுமார் 11.00 மணிக்கச் சென்றடைந்தார். பயங்கரவாதிகள் காமா மருத்துவமனை மொட்டைமாடிக்குச் சென்றுள்ளார்கள் என்பதை அறிந்து, ஆறாவது தளத்துக்கு லிப்ட் மூலம் சென்றார். அங்கிருந்து மொட்டை மாடிக்குப் படிக்கட்டுகள் உள்ளன. அங்கே டி.கேயைப் பிடித்து வைத்துக் கொண்டிருந்த இரண்டு பயங்கரவாதிகளையும் அவர் எதிர்கொள்ள நேர்ந்தது.


லிப்டுக்கு முன் வெடித்த குண்டு:

83. ஆறாவது தளத்தை அடைந்தவுடன், மொட்டை மாடிக்குள் நுழைய அவசரப்படாமல், அங்கிருந்த ஒரு இரும்புப் பொருளை, பயங்கரவாதிகள் நிற்குமிடத்தைத் தெரிந்து கொள்ள, கதவை நோக்கி தாதே வீசியெறிந்தார். ஒரு தானியங்கி ஆயுத மூலம் - ஆடோமேடிக் வெபன் - மூலம் அங்கிருந்து குண்டு வெடித்தது. அதே சமயம் மொட்டை மாடிக்கும் ஆறாவது தளத்துக்கும் இடையே ஒரு குண்டு மனிதர் இறங்கி வருவதைக் கண்டு, தாதே அந்த மனிதரை எதிர்கொண்டார். ஆனால் அவர் மருத்துவமனை ஊழியர் என்று கைலாஷ் எடுத்துரைத்தார். அந்தக் குண்டு மனிதரும் தனக்குப் பின்னால் யாரோ இருப்பதாக அடையாளம் காட்டினார். அவரைக் குனிந்து கொள்ளும்படி கூறி, தாதே அவர் தலைக்கு மேலே போகுமாறு மொட்டை மாடியை நோக்கிச் சுட்டார். அதனால் பயங்கரவாதிகள் மொட்டை மாடிக்குப் பின்நோக்கிச் செல்லுமாறு நிர்பந்தித்தது. அதே சமயம் மேலேயிருந்து ஒரு கைக்குண்டு பாயந்தது. ஆறாவது மாடியில் லிப்டுக்கு முன்னால் அது வெடித்தது. போலீஸ் அதிகாரி தாதே, குண்டு மனிதர் டிகே உட்பட போலீஸ் அதிகாரிகளைக் காயப்படுத்தியது.


தடுக்க முடியவில்லை:

84. தாதேவின் குழுவில் போலீஸ் அதிகாரிகள், போலீஸ்காரர்கள் உட்பட 7 பேர் இருந்தனர். எல்லோரிடமும், துப்பாக்கி இருந்தது. தாதே, ஆபரேடர் திலேகர் மற்றும் கான்ஸ்டபிள் கண்டேல்கர் ஆகியவர்களிடம் ஒவ்வொருவரிடமும் ஒரு கார்பைன் இருந்தது. தாதே குண்டு துளைக்காத ஜேக்கட் அணிந்திருந்தார். அவரிடம் கார்பைன் மற்றும் 20 ரவுண்டுகள் இருந்தது. ஆனால் இவை எல்லாம் கஸாப் மற்றும் அபு இஸ்மாயில் இருவரையும் முடிக்கவோ அல்லது தடுத்து நிறுத்தவோ முடியவில்லை. இரண்டு பயங்கரவாதிகளும் தங்களது நெருக்கடியான நிலையைச் சமாளித்து, தப்பித்து மொட்டை மாடியிலிருந்து படி வழியாகப் போய்விட்டனர். போலீஸ் வசம் நல்ல ஆயுத பலம் இருந்த போதிலும், தீவிரவாதிகளுக்கு அவர்களது கையெறி குண்டுகள் மிகவும் சாதகமாக இருந்தது. அந்தச் சிறிய இடத்தில் வெடித்த கையெறி குண்டுகள் போலீசாரை மிகவும் காயப்படுத்திவிட்டது.


40 நிமிடம் நடந்த சண்டை:

85. முதல் கையெறி குண்டு வெடித்ததும் தனது ஆபீசர்கள் தொடர்ந்து மொட்டை மாடியை நோக்கித் தொடர்ந்து சுட்டதாக தாதே நீதிமன்றத்தில் தெரிவித்தார். அடுத்து இரண்டாவது கையெறி குண்டு வீசப்பட்டபோது, தாதே உட்பட எல்லாருமே காயமடைந்து விட்டனர். காயமடைந்த போலீஸ் அதிகாரிகள், கான்ஸ்டபிள்கள், காமா மருத்துவமனை ஊழியர்கள் கீழே செல்லுமாறு பணிக்கப்பட்டார்கள். இறந்தவர்கள், படுகாயமடைந்தவர்கள் கீழே செல்லவில்லை. பின்னர் இறந்துவிட்ட போலீஸ் கான்ஸ்டபிள் காண்டேகர் பலத்த காயம் காரணமாகக் கீழே போக முடியவில்லை. நினைவிழந்து விட்டார். மொட்டை மாடியிலிருந்து வந்த தாக்குதலுக்கு தாதே பதிலடி கொடுத்துத் தொடர்ந்து சுட்டார். இந்தப் போராட்டம் சுமார் 40 நிமிடம் நடந்தது. அப்போது லிப்டின் வலப்புறம் தாதே மறைந்து நின்றார். சற்று நேரம் கழித்து, ஏதோ நடமாட்டம் இருப்பதாக உணர்ந்து, இரண்டு பேரும் 5வது தளத்துக்கு இறங்கிச் சென்று விட்டதைத் தெரிந்து கொண்டார். இரண்டு பேரை நோக்கி இரண்டு முறை சுட்டார். அவரது காலிலும் குண்டு காயம் பட்டிருந்ததால், அவரால் பயங்கரவாதிகளைத் தொடர முடியவில்லை. அதனால் தான் துப்பாக்கியால் சுட்டது அவர்களைத் தாக்கியதா என்று தாதேயால் கோர்ட்டில் சொல்ல முடியவில்லை.
86. அப்போது நேரம் 11.50 இரவாக இருக்கக் கூடுமென்று அவர் கூறினார்.

87. இரண்டு நபர்கள் 6வது தளத்திலிருந்து கீழே சென்றுள்ளார்களென்றும் அவர்களிடம் தானியங்கி ஆயுதங்களும் (ஆடோமேட்டிக் வெபன்ஸ்) மற்றும் கையெறி குண்டுகள் இருப்பதாகவும் தாதே தனது மேலதிகாரிகளுக்குத் தெரிவித்தார்.
88. தாதே மேலும் கூறினார். சுமார் 00.45 மணிக்கு (இரவு 12.45மணி) உதவி வந்தது. அவரை உடனே கேஈஎம் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு 3 நாட்கள் இருந்து சிகிச்சை பெற்றார். அவருக்குப் பல சிறிய காயங்களுடன் கையெறி குண்டுச் சிதறங்களால் வலது கண், இடது தோள் பட்டைக்குக் கீழ் மார்பு, தொண்டை, வலது முழங்கால், இடது மணிக்கட்டு ஆகிய இடங்களில் காயம் பட்டிருந்தது. காமா மருத்துவமனையில் இறந்தவர் 9, காயமடைந்தோர் 24.

89. துப்பாக்கி குண்டுகளும் கையெறி குண்டுச் சிதறங்களும் 6வது தளத்தில் இருந்த தாதேயைப் பாதித்ததால், இரண்டு பயங்கரவாதிகள் கசாப் மற்றும் அபு இஸ்மாயிலை அவரால் தடுத்து நிறுத்த முடியவில்லை. இருவரும் சுவரில் மறைந்துகொண்டே படிகள் வழியாகக் கீழே இறங்கிச் சென்று விட்டார்கள்.


போலீஸ் அதிகாரியைச் சுட்டுத் தள்ளினர்:

90. சரேஷ் சாந்தாராம் காடம் (பி.டபிள்யூ 138) மற்றும் யஷ்வந்த சங்கர் தோராவாடே (பி.டபிள்யூ128) ஆகியோர் கசார் மற்றும் அபு இஸ்மாயில் காமா மருத்துவமனையில் இருந்து மகாபாலிகா சாலை முன்வாசல் வழியாக வருவதையும் ஒரு போலீஸ் அதிகாரியைச் சுட்டுத் தள்ளுவதையும் அவர் கீழே விழுவதையும் பார்த்துள்ளார்கள்.

91. தோராவாடே ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர். அவரது மூத்த அதிகாரி அன்று வரமடியாத நிலையில், 2008 நவம்பர் மாலை, ஆசாத் மைதான் காவல் நிலையப் பொறுப்பில் அவர் இருந்தார். அதே காவல் நிலையத்தில் காடம் கான்ஸ்டபிளாகப் பணியாற்றுகிறார். சிஎஸ்டி ரயில் நிலையத்தில் பயங்கரவாதிகள் நுழைந்து சுட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்ற செய்தி கிடைத்தவுடன் இரண்டு போலீஸ் வாகனங்களில் அவர்கள் ரயில்வே ஸ்டேஷனை நோக்கி விரைந்தார்கள். செல்லும் வழியில், இரண்டு பயங்கரவாதிகளும் சிஎஸ்டியை விட்டுச் சென்று விட்டதாகவும் மெட்ரோ சினிமா திசையில் சென்று கொண்டுஇருப்பதாகவும் அறிந்தனர். மெட்ரோ சந்திப்புக்கு வந்தனர். அங்குதான் கூடுதல் போலீஸ் கமிஷனர் தாதேயை (பி.டபிள்யூ118) சந்தித்தனர். ஆசாத் மைதான் காவல் நிலையத்துக்கு விரைந்து குண்டு துளைக்காத ஜாக்கெட்டுகள், ஆயுதங்கள், புல்லட்டுகள் எடுத்து வருமாறு உத்தரவிட்டார். காமா மருத்துவமனைக் கட்டிட மொட்டை மாடியில் ஏறி இரண்டு பயங்கரவாதிகளும் சுட்டுக் கொண்டிருக்கும் செய்தியும் வந்து விட்டது. தாதே உத்தரவுப்படி, காடம், ஷெல்கே (பி.டபிள்யூ141) மற்றும் பிறர் ஆசாத் மைதான் காவல் நிலையம் சென்று, இரண்டு புல்லட் ப்ரூப் ஜாக்கெட் மற்றும் ஆயுதங்களுடன் திரும்பினர்.
92. சம்பவ இடத்துக்குத் திரும்பிய போலீஸ் படையினர், பயங்கரவாதிகள் காமா மருத்துவமனை முன்வாசல் வழியாக வரலாம் என்று எதிர்பார்த்து, அங்கு சென்று நிற்பதென்று முடிவு செய்தார்கள். போலீஸ் இன்ஸ்பெக்டர் தோராவாடே (பி.டபிள்யூ128), போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஷெல்கே (பி.டபிள்யூ141) மற்றும் கான்ஸ்டபிள்கள் உதேகார், ராதோர் தன்னுடன் வந்ததாக காடம் தனது சாட்சியத்தில் கூறினார். போலீஸ் வண்டி (பீடர் 1 ஆசாத் மைதான்) போரேரோ வண்டியை கான்ஸ்டபிள் காவாடே ஓட்டி வந்தார். இந்த வண்டியில் தான் இந்தக் குழுவினர் வந்தனர். மெட்ரோ ஜங்ஷனை நோக்கியிருந்த சாலையின் இடது புறத்தில் வண்டியை நிறுத்தி, வண்டியை ஒட்டி இவர்கள் தக்க இடத்தில் நின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X