மக்கள் வைத்த நம்பிக்கையை ஏமாற்ற மாட்டேன்: மோடி பேச்சு

Added : மே 17, 2014 | கருத்துகள் (43) | |
Advertisement
ஆமதாபாத்: மக்கள் என் மீது வைத்த நம்பிக்கையை ஏமாற்ற மாட்டேன் எனவும், நாட்டை முன்னெடுத்து செல்வதில் ஆர்வமாக உள்ளதாாகவும் பிரதமராக பதவியேற்க உள்ள நரேந்திர மோடி கூறினார்.பா.ஜ., அமோக வெற்றி பெற்றதை தொடர்ந்து ஆமதாபாத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய மோடி, தேர்தலுக்கு முன்னர், குஜராத்தின் வளர்ச்சி திட்டங்கள் அனைத்தும் பலூன் போன்றது என எதிர்க்கட்சியினர் பிரசாரம்
மக்கள் வைத்த நம்பிக்கையை ஏமாற்ற மாட்டேன்: மோடி பேச்சு

ஆமதாபாத்: மக்கள் என் மீது வைத்த நம்பிக்கையை ஏமாற்ற மாட்டேன் எனவும், நாட்டை முன்னெடுத்து செல்வதில் ஆர்வமாக உள்ளதாாகவும் பிரதமராக பதவியேற்க உள்ள நரேந்திர மோடி கூறினார்.

பா.ஜ., அமோக வெற்றி பெற்றதை தொடர்ந்து ஆமதாபாத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய மோடி, தேர்தலுக்கு முன்னர், குஜராத்தின் வளர்ச்சி திட்டங்கள் அனைத்தும் பலூன் போன்றது என எதிர்க்கட்சியினர் பிரசாரம் செய்தனர். எனது கருத்திற்கு எதிர்மறையாக பிரசாரம் செய்தனர். அவர்கள் நான் எந்தவகையான மேஜிஷியன் என்பதை புரிந்து கொள்ள மறுத்தனர். ஆனால் வளர்ச்சிதொடர்பாக பிரசாரம் செய்வதை நான் கட்டாயமாக்கினேன். வளர்ச்சிக்கு ஆதரவாக மக்கள் இருப்பார்கள் என்பதை இந்த தேர்தல் உறுதி செய்துள்ளது. மக்களின் தீர்ப்பு வளர்ச்சிக்கான தீர்ப்பு.நாட்டை முன்னெடுத்து செல்வதற்கான தீர்ப்பு. மக்களின் கனவுகளை நிறைவேற்ற கடுமையாக உழைக்க வேண்டும் என கூறும் தீர்ப்பு

அவசர நிலைக்கு பிறகு , மக்கள் ஒரு குறிப்பிட்ட திட்டத்திற்கு ஆதரவாக ஓட்டளித்துள்ளனர். மதம் அல்லது ஜாதி ஆகியவற்றை தள்ளி வைத்துவிட்டு ஓட்டளித்துள்ளனர். என்னை கடுமையாக விமர்ச்சித்தவர்களுக்கு பதில் தரும் முடிவு. எதிர்க்கட்சியினர் கடுமையாக உழைக்காமல் என்னை விமர்சனம் செய்வதில் மட்டும் ஆராய்ச்சி செய்து தோல்வியடைந்துள்ளனர்.

சில மக்கள் விரோத சக்திகள், மக்களின் கவனத்தை திசைதிருப்ப தேவையற்ற விவகாரங்களை கையிலெடுத்து பிரசாரம் செய்தனர். இதன் மூலம் என்னை விமர்சனம் செய்தனர். இருப்பினும், இதன் மூலம் மறைமுகமாக அவர்கள் வளர்ச்சி பற்றி பேசினர். தேர்தலுக்கான திட்டத்தையும், யார் அதிகாரத்திற்கு வர வேண்டும் என்பதையும் முதல்முறையாக அதிகாரத்தில் இல்லாத மக்கள் முடிவு செய்துள்ளனர். நாங்கள் வளர்ச்சி திட்டத்தை முன்வைத்தோம். ஆனால், காங்கிரஸ் என்ன செய்வதென்று தெரியாமல் இருந்தது.

மக்கள் பா.ஜ.,வுக்கு உத்தரவிட்டுள்ளனர். ஆனால் இந்த உத்தரவு, மற்ற கட்சிகளுக்கு எதிரானதல்ல. தேர்தலில் வெற்றி பெறாத கட்சிகளுக்கும் எதிராகவும் உத்தரவுபிறப்பிக்கப்படவில்லை. எங்களை பொறுத்த வரையில், பல தொகுதிகளில் வெற்றி பெற்றவர்களைபோல், அனைவரும் சமமானவர்கள். விரோதம் மற்றும் கடுமையான வெறுப்பு காட்டுதல் முடிவுக்கு வந்தள்ளது. நாட்டை முன்னெடுத்து செல்வதில் நான் ஆர்வமாக உள்ளேன்.

இந்த தேர்தலில் மக்கள் பிரிவினைவாத அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.வாரிசு அரசியல் இல்லாத கட்சி ஆட்சிக்கு வந்துள்ளது. பா.ஜ.,வுக்கு மக்கள் தெளிவான உத்தரவு கொடுத்துள்ளனர். 40 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியா வளர்ச்சி பெற்றிருக்க வேண்டும் ஆனால் பெறவில்லை.தோல்வியடைந்தவர்களை அவமானப்படுத்த வெற்றி பெறவில்லை.மக்களின் தெளிவான உத்தரவால் பொறுப்பு வந்துள்ளது. என் மீது மக்கள் வைத்த நம்பிக்கையை ஏமாற்ற மாட்டேன்.

சுதந்திரத்திற்கு பின்னர், வளர்ச்சி திட்டத்தை எந்த அரசும் இயக்கமாக மாற்றியதில்லை. நம்நாட்டிற்கு பின் சுதந்திரம் கிடைத்த நாடுகள் அனைத்தும், இந்தியாவை முந்தி சென்றுள்ளன. 21ம்நூற்றாண்டை, இந்தியாவின்நூற்றாண்டாக மாற்ற 10 ஆண்டுகள் தேவைப்படுகிறது என கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (43)

Jana - rajapalayam,இந்தியா
18-மே-201400:06:16 IST Report Abuse
Jana தற்போது உள்ள நிலைமையில் பொது மக்கள் என்னதான் கத்தினாலும் காங்கிரஸ் கணக்கு போட்டு வைத்திருக்கும் விகிதாசார கணக்குப்படி ( முஸ்லிம் ஒட்டு 22 % ல் 18 %,கிறிஸ்தவர்களில் 6 % ல் 4 % தாழ்த்தப்பட்டோர் 20 %ல் 12 %) மதசார்பில்லாத கட்சி போர்வையில் இந்த சதவிகிதம் கிடைத்தாலே ஆட்சி அமைத்து விட முடியும் என்று தான் இத்துனை முடிவுகளையும் தெளிவாக எடுக்கிறது. ஆனால் சரித்திரம் மறந்த காங்கிரெஸ், விடாமல் இந்திரா காந்தி ஒன்னரை ஆண்டுகள் எமர்ஜன்சி காலத்தில் தொடர்ந்து சுய விளம்பரம் செய்தும் அடுத்து வந்த தேர்தலில் நம் மக்கள் இந்திராவையே விட்டுக்கு அனுப்பி விட்டார்கள்.இன்னும் நம் மக்கள் ஜாதி மத வேறு பாடுகள் களைந்து நாட்டின் நன்மைக்காக நல்ல முடிவு எடுப்பார்கள் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.குறைந்தபட்சம் உழல் இல்லாத ஆட்சி அமைய முடிவு எடுப்பார்கள். 08-நவ-2012 11:04:28 IST இது மேலே உள்ள தேதியில் நான் எழுதிய கருத்து உண்மையாகிவிட்டது உலகத்தின் மிகப்பெரிய ஜனநாயகம் எங்கள் பாரதம் என்பதை நம் மக்கள் நிரூபித்து விட்டர்கள்.மதசார்பின்மை பேசும் அரசியல் வியாதிகளுக்கு நம் ஜனநாயகம் கொடுத்த சாட்டை அடி. இனிமேலாவது இந்த வியாதிகள் மக்களுக்கு தாங்கள் என்ன செய்யப்போகிறார்கள் என்பதை விளக்கி தேர்தல் அறிக்கையாக விடுவார்கள் என்று எதிர்பார்ப்போம்
Rate this:
Cancel
kalaiarasan - trichy,இந்தியா
17-மே-201415:20:25 IST Report Abuse
kalaiarasan வாழ்த்துக்கள் திரு மோடிஜி உங்களது வெற்றி பயணம் தொடர மனமார்ந்த வாழ்த்துக்கள்.
Rate this:
Cancel
Tamilar Neethi - Chennai,இந்தியா
17-மே-201415:07:10 IST Report Abuse
Tamilar Neethi எப்படிங்க முடியும் ..குஜராத்தை எப்படி தொழிலதிபர்களுக்கு அடகுவைத்து விட்டு அதற்கு ஈடாக அவர்கள் முதலீட்டில் கிடைத்த பதவி ..நீங்கள் வெறுப்பு பேச்சு பேசி தேசிய திட்டம் இல்லாமல் ஆட்சி பிடித்துள்ளீர்கள். பணம் கொடுதோர் இனிதான் போட்ட முதலீட்டை எடுக்க திட்டம் சமர்பிப்பார்கள். அதான் அதுவரை வெற்றி விழ கொண்டாடுவது எவருக்கும் தெரியாது .அப்புறம் பலஜாதிகள், பலமொழிகள், பல சூழல்கள், சோறு இல்லை, குடிநீர் இல்லை, வேலை இல்லை, சாலை இல்லை, சாலை போட இடமில்லை ,போட்ட சாலை ஆக்கிரமிப்பு, வறட்சி,வெள்ளம்,லஞ்சம், மத வெறி, இதில் வேறு சூறையாட காத்திருக்கும் மத வெறி இத்தனை சூழல் இது அடக்கி ஆள்வதற்கு ,குஜராத் அல்ல தேசம் ,பெரிய தேசம் .. உலக பணக்காரர்கள் ,இல்லாமல் கைஎந்துவொர் உள்ள தேசம் .. வேவு பார்க்கும் வேலை அல்ல ..கடல் ,மண் ,நீர் ,நிலம் ,காற்று எல்லாம் கையேந்தி பெறும்நிலை .. இதிலின்னும் அடகு வைத்தால் அழிந்துபோகும் தேசம் .. அண்டை நாடுகள் வேறு சில அன்புடன் சில வம்புடன் ,சில முழுங்க பார்க்கும் ... தங்களுக்கு தெரிந்தது மாநிலத்தை அடகு வைத்து பட்டம் விடுவது .. இது தேசம் .. வெறுப்பு பேச்சு விலை போகாது இனி ..விவேகம் ,வேகம் ,தியாகம் ,பொறுமை ,மக்கள்மீது கரிசனை ,அரவணைத்தல் வேண்டும் .. பாரளுமன்றம் வேறு புதியது .. இது எல்லாம் கூடி வர 360 நாட்கள் போய் விடும் ,அப்புறம் மீதி எழும் பிரச்சினை அது இது என்று ஓடிவிடும் ..அப்புறம் தேர்தல் .. 60 மாதம்கள் முடிந்து மறு தேர்தல் வந்துவிடும் .. போட்ட காசினை எடுத்துக்கொண்டு தொழிலதிபர்கள் ஓடிவிடுவார்கள் .. நீங்களும் ஓடி விடுவீர்கள் .. தேசம் அப்படி வேறு ஒருவரை தேடும் .. இதுதான் மாறி மாறி மாறி .. இந்தியன்தான் பாவம் ..
Rate this:
Renugadevi Dinakaran - Chennai,இந்தியா
17-மே-201416:50:40 IST Report Abuse
Renugadevi Dinakaranஇத்தனை நாள் ஒரு வெத்து வேட்டு அரசுக்கு கொடுத்த சப்போர்ட்டை இவருக்கு கொடுங்க...முடியலேன்னா கொஞ்சம் அமைதியா இருந்து நடக்கறதை பாருங்க... பைத்தியகார தனமா ஒளறி கொட்டாதிங்க...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X