சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பனியன் தொழிலாளி கடத்தி கொடூர கொலை: தலை, கைகளை வெட்டி வீசினர்

Added : அக் 02, 2010
Share
Advertisement
திருப்பூர் : திருப்பூரில் ஒரு மாதத்துக்கு முன் கடத்திச் செல்லப்பட்ட பனியன் தொழிலாளி கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார். கொலைகார கும்பலில் இருவரை கைது செய்த போலீசார், தலைமறைவான மூவரை தீவிரமாக தேடுகின்றனர். வேலூர் மாவட்டம் குடியாத்தம் கல்லப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் கார்த்திக் (26); அவிநாசி- சேவூர் ரோடு காமராஜர் நகரில் வசித்து வந்தார். இவரது மனைவி ஸ்வாதி லட்சுமி
பனியன் தொழிலாளி கடத்தி கொடூர கொலை: தலை, கைகளை வெட்டி வீசினர்

திருப்பூர் : திருப்பூரில் ஒரு மாதத்துக்கு முன் கடத்திச் செல்லப்பட்ட பனியன் தொழிலாளி கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார். கொலைகார கும்பலில் இருவரை கைது செய்த போலீசார், தலைமறைவான மூவரை தீவிரமாக தேடுகின்றனர்.


வேலூர் மாவட்டம் குடியாத்தம் கல்லப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் கார்த்திக் (26); அவிநாசி- சேவூர் ரோடு காமராஜர் நகரில் வசித்து வந்தார். இவரது மனைவி ஸ்வாதி லட்சுமி (22). கார்த்திக், அவிநாசியில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். கடந்த ஆக., 31ம் தேதி இரவு 7.00 மணிக்கு, அவரது வீட்டுக்கு வந்த கார்த்திக்கின் நண்பர்கள், திருப்பூர் கொங்கு மெயின் ரோடு எம்.எஸ்., நகரை சேர்ந்த செந்தில், திருப்பூர் கண்ணகி நகரைச் சேர்ந்த ஆனந்தகிருஷ்ணன் (23), திருப்பூர் எம்.எஸ்., நகரைச் சேர்ந்த சதாசிவம் (24) மோகன், நவீத் இஸ்மாயில் ஆகியோர் கார்த்திக்கை அழைத்துச் சென்றுள்ளனர். 25 தினங்களுக்கு மேலாகியும் கார்த்திக் வீடு திரும்பவில்லை.


இதுகுறித்து கார்த்திக்கின் மனைவி ஸ்வாதி லட்சுமி, எஸ்.பி., அலுவலகத்தில் புகார் அளித்தார். திருப்பூர் வடக்கு போலீசார் கார்த்திக் காணாமல் போனதாக வழக்கு பதிவு செய்தனர். வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் செட்ரிக் இமானுவேல் தலைமையில் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில், செந்தில் மற்றும் அவரது நண்பர்கள் கார்த்திக்கை கடத்திச் சென்று மரக் கட்டைகளால் கொடூரமாக அடித்துக் கொன்றது தெரிந்தது. கொலைகார கும்பலைச் சேர்ந்த ஆனந்தகிருஷ்ணன், சதாசிவம் இருவரையும் கைது செய்த போலீசார், தலைமறைவான மற்ற மூவரையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.


பணத்துக்காக கொலை: கொலைகார கும்பலைச் சேர்ந்த செந்தில் திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட பல குற்ற வழக்குகளில் தொடர்புடையவன். கடந்த 2008ம் ஆண்டில் ஒரு குற்றத்துக்காக சிறையில் இருந்த அவனை ஜாமீனில் எடுப்பதற்காக 30 ஆயிரம் ரூபாய் கார்த்திக்கிடம் தரப்பட்டுள்ளது. பணத்தை பெற்ற கார்த்திக், செந்திலை ஜாமீன் எடுக்காமல் பணத்துடன் தலைமறைவாகி விட்டான். இந்நிலையில், சில மாதங்களுக்கு முன் சிறையில் இருந்து வெளிவந்த செந்தில், கார்த்திக்கை தேடி கண்டுபிடித்து கொலை செய்ய திட்டமிட்டான். கடந்த ஒரு மாதத்துக்கு முன் கார்த்திக் வீட்டை தெரிந்து கொண்ட செந்தில், அவனது நண்பர்கள் ஆனந்தகிருஷ்ணன், நவீத் இஸ்மாயில், சதாசிவம், மோகன் ஆகியோருடன் சென்று கார்த்திக்கை, திருப்பூர், கொங்கு மெயின் ரோடு எம்.எஸ்., நகருக்கு அழைத்து வந்தான். அங்கு, நள்ளிரவில் பெட்ரோல் பங்க் பின்பகுதியில் காட்டுக்குள் கார்த்திக்கை அழைத்துச் சென்று, செந்தில் உள்ளிட்ட ஐந்து பேரும் கட்டைகளால் பலமாக தாக்கினர். தலை மற்றும் உடல் பகுதிகளில் பலத்த அடிபட்ட கார்த்திக், அதே இடத்தில் உயிரிழந்தான். தலை மற்றும் கைகளை தனியாக வெட்டி எடுத்த அவர்கள், உடல் பகுதியை அதே இடத்தில் பள்ளம் தோண்டி புதைத்தனர். தலையை போயம்பாளையத்தில் உள்ள பாறைக்குழியிலும், கைகளை போயம்பாளையம் செல்லும் ரோட்டில் பாலம் பகுதியிலும் வீசியதாக போலீசார் விசாரணையில் தெரிந்துள்ளது. இன்ஸ்பெக்டர் செட்ரிக் இமானுவேல் கூறுகையில், ""கொலையாளிகளில் இருவரை கைது செய்துள்ளோம்; தலைமறைவான மற்ற மூவரையும் தீவிரமாக தேடி வருகிறோம்,'' என்றார்.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X