100 மூடை ரேஷன் அரிசி பறிமுதல் : மதுரையில் இரண்டு பேர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

100 மூடை ரேஷன் அரிசி பறிமுதல் : மதுரையில் இரண்டு பேர் கைது

Added : அக் 02, 2010
Share
மதுரை : மதுரை அருகே ரேஷன் அரிசி கடத்திய இருவர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரேஷன் அரிசி 100 மூடைகள், இரண்டு வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. மதுரை மாவட்ட வழங்கல் அதிகாரி முருகையா, உணவு கடத்தல் தடுப்புப்பிரிவு போலீஸ் டி.எஸ்.பி., கார்த்திகேயன் தலைமையில், இன்ஸ்பெக்டர் சக்ரவர்த்தி, எஸ்.ஐ., சீனிவாசன், திருமங்கலம் வட்ட வழங்கல் அலுவலர் மனோகரன் ஆகியோர் நேற்று முன்தினம்
100 மூடை ரேஷன் அரிசி பறிமுதல் : மதுரையில் இரண்டு பேர் கைது

மதுரை : மதுரை அருகே ரேஷன் அரிசி கடத்திய இருவர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரேஷன் அரிசி 100 மூடைகள், இரண்டு வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.


மதுரை மாவட்ட வழங்கல் அதிகாரி முருகையா, உணவு கடத்தல் தடுப்புப்பிரிவு போலீஸ் டி.எஸ்.பி., கார்த்திகேயன் தலைமையில், இன்ஸ்பெக்டர் சக்ரவர்த்தி, எஸ்.ஐ., சீனிவாசன், திருமங்கலம் வட்ட வழங்கல் அலுவலர் மனோகரன் ஆகியோர் நேற்று முன்தினம் இரவு திருமங்கலம் - சாத்தூர் மேலப்பட்டி ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மதுரை நோக்கி வந்த (டிஎன்58 எஸ் 6177) டாடா 207 வாகனத்தில் தலா 50 கி., எடையுள்ள 80 மூடை ரேஷன் அரிசி கடத்தப்படுவது தெரியவந்தது. இதுதொடர்பாக மதுரை கீரைத்துறையை சேர்ந்த ராஜாராம் மகன் கணேசன், டிரைவர் பாக்கியம் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். ரேஷன் அரிசி 80 மூடைகள், வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. கிழக்கு சிந்தாமணி ரோட்டில் நேற்று அதிகாலை தாசில்தார் (கிழக்கு) ஜோதிகுருநாதன், வருவாய் ஆய்வாளர் பாண்டி மற்றும் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது (டிஎன்63 இ 2014) எண் கொண்ட வாகனத்தை சோதனை செய்தனர். அதில் இருந்தவர்கள் தப்பியோடினர். வாகனத்தில் தலா 50 கி., எடையுள்ள 20 ரேஷன் அரிசி மூடைகளை கைப்பற்றினர்.


Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X