சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சர்வதேச போதை கடத்தல் மன்னன் சுற்றிவளைப்பு: ரூ.100 கோடி மதிப்பிலான வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்

Updated : அக் 03, 2010 | Added : அக் 02, 2010
Share
Advertisement
சென்னை : சென்னையை தலைமையிடமாகக் கொண்டு, சர்வதேச அளவில் கேடமைன் போதை மருந்தை கடத்தி வந்த பிரபல கடத்தல் மன்னனை, வருவாய் புலனாய்வு இயக்குனரக அதிகாரிகள் சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர். மொத்தம் 100 கோடி ரூபாய் கேடமைன் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் இவர் தேடப்பட்டு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. மும்பை மற்றும் டில்லியில் செயல்பட்டு வரும் கடத்தல் கும்பல்கள், சென்னை

சென்னை : சென்னையை தலைமையிடமாகக் கொண்டு, சர்வதேச அளவில் கேடமைன் போதை மருந்தை கடத்தி வந்த பிரபல கடத்தல் மன்னனை, வருவாய் புலனாய்வு இயக்குனரக அதிகாரிகள் சுற்றி வளைத்து கைது செய்துள்ளனர். மொத்தம் 100 கோடி ரூபாய் கேடமைன் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் இவர் தேடப்பட்டு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


மும்பை மற்றும் டில்லியில் செயல்பட்டு வரும் கடத்தல் கும்பல்கள், சென்னை வழியாக மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட தெற்காசிய நாடுகளுக்கும், துபாய் உள்ளிட்ட வளைகுடா நாடுகளுக்கும் பல்வேறு வகையான போதை பொருட்களை கடத்தி வருகின்றன. சென்னை வழியாக கடத்தல் நடந்து வந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வருவாய் புலனாய்வு இயக்குனரக அதிகாரிகள் போதைப் பொருள் கடத்தல் குறித்த விஷயத்தை தொடர்ந்து கண்காணித்தனர். இதில், பல கோடி ரூபாய் போதை மருந்து சிக்கியது. இதையடுத்து, கடத்தல்காரர்கள் பெங்களூரு, திருச்சி, திருவனந்தபுரம் ஆகிய இடங்களை தேர்வு செய்து, அங்கிருந்து விமானம் மூலம் தெற்காசிய நாடுகளுக்கு போதை பொருட்களை கடத்தி வருகின்றனர்.


கடந்த சில மாதங்களாக சென்னை மற்றும் புறநகரில் உள்ள பல்வேறு லாரி போக்குவரத்து நிறுவனங்களில் நடத்திய சோதனையில் 60 கோடி மதிப்பிலான கேடமைன் போதை பொருட்களை சென்னை, வருவாய் புலனாய்வு இயக்குனரக அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்நிலையில், சென்னையை தலைமையிடமாகக் கொண்டு சர்வதேச அளவில் கேடமைன் போதை பொருட்களை கடத்திய நபரை, வருவாய் புலனாய்வு இயக்குனரக அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.


வருவாய் புலனாய்வு இயக்குனரக கூடுதல் தலைமை பொது இயக்குனர் ராஜன் கூறியதாவது: சென்னை, சேப்பாக்கம், கிருஷ்ணசாமி தெருவில் வசிப்பவர் சுபுகான் (50). இவர், ரிச்சி தெருவில் எஸ்.கே.செல் வேர்ல்டு என்ற பெயரில் எலக்ட்ரானிக் பொருட்கள் விற்பனை செய்யும் கடை ஒன்றை நடத்தி வருகிறார். கடந்த 2009ம் ஆண்டு, டிசம்பர் மாதம் தூத்துக்குடியில் இருந்து வெளிநாடுகளுக்கு கடத்தப்பட இருந்த 44 கோடி ரூபாய் சர்வதேச மதிப்பிலான, 440 கிலோ கேடமைன் போதை பொருள் வழக்கிலும், சமீபத்தில் சென்னையில் உள்ள டிரான்ஸ்போர்ட் அலுவலகங்களில் பறிமுதல் செய்யப்பட்ட 60 கோடி மதிப்பிலான, 600 கிலோ கேடமைன் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கிலும் இவர் சம்பந்தப்பட்டவர்.


மேலும், இரண்டு போதை பொருட்கள் கடத்தல் வழக்குகளும் இவர் பெயரில் உள்ளன. போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதை தொடர்ந்து இவர் தலைமறைவாகிவிட்டார். கடந்த ஒன்றாம் தேதி காலை, இவரை அதிகாரிகள் சுற்றி வளைத்து கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. விசாரணையின் முடிவில், சென்னையில் இருந்து வெளிநாடுகளுக்கு போதை மருந்து கடத்தும் கும்பல் குறித்த பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு ராஜன் கூறினார்.


Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X