போலீஸ் காரைக் கடத்திய பயங்கரவாதிகள்| Dinamalar

போலீஸ் காரைக் கடத்திய பயங்கரவாதிகள்

Added : மே 19, 2014
Advertisement
போலீஸ் காரைக் கடத்திய பயங்கரவாதிகள்

போலீஸ் அதிகாரி சுட்டுக் கொலை: 93. இரவு சுமார் 11.45 மணி அளவில் போலீஸ் குழு இரண்டு பேர் காமா மருத்துவமனையில் இருந்து வெளிவருவதைக் கண்டனர். காலடிப் பாதை வழியாக இவர்கள் வருவதை முதலில் காடம் பார்த்தார். செயின் சேவியர் கல்லூரி அருகில், (மருத்துவமனையை ஒட்டியிருப்பது) தோராவாடே இவர்களை பார்த்தார். ஒருவன் உயரமானவன், மற்றவன் குள்ளமானவன் என்று காடம் கூறினார். அதே சமயம் மெட்ரோ ஜங்ஷனில் இருந்து, மகாபாலிகா சாலையில் ஒரு மோட்டார் சைக்கிள் வருவதை அவர்கள் பார்த்தார்கள். ஒரு போலீஸ் கான்ஸ்டபிள் அதை ஓட்டி வந்தார். பின்னால் போலீஸ் அதிகாரி இருந்தார். வண்டி சிஎஸ்டி ஐ நோக்கிச் சென்றது. அதிகாரி செயின்ட் சேவியர் கல்லூரி அருகில் இறங்கிக் கொண்டதும் பைக் யூ டர்ன் அடித்து மெட்ரோவை நோக்கிச் சென்றுவிட்டதென்று கான்ஸ்டபிள் தோர்வாடே தெரிவித்தார். கீழே இறங்கிய அதிகாரி, சிஎஸ்டியில் இருந்து வந்தவர்களைத் திரும்பிச் செல்லுமாறு கட்டளையிட்டார். நெட்டையன் மற்றும் குள்ளனுக்கும் அவ்வாறே கூறியதுபோலத் தெரிந்தது. ஆனால் அவர்கள் அவரை நோக்கியே நகர்ந்து வந் சுமார் 15 - 20 அடி தூரத்தில் இருந்து அவரை - அதிகாரியை - நோக்கிச் சுட்டனர். அவர் சுருண்டு விழுந்து இறந்தார். தாங்கள் காத்துக் கொண்டிருந்த, காமா மருத்துவமனையில் இருந்து வெளியே வந்த இரண்டு பயங்கரவாதிகள் இவர்களே என்று கூறியது இதிலிருந்து உறுதியாகத் தெரிகிறது. உடனே அவர்களை நோக்கி தோரா வாடே சுடத் தொடங்கினார். காடம் அவரது பிஸ்டலில் இருந்து சுட்டார். மற்றவர் பயங்கரவாதிகளை நோக்கிச் சுட்டதால் காடம் சுடுவதை நிறுத்திக் கொண்டார். பயங்கரவாதிகள் பதிலுக்கு சுட்டனர்.


ஒயர்லஸ் மூலம் தகவல்:

94. தனது போலேரோ போலீஸ் வண்டியில் இருந்து தோராவாடே தெற்கு கட்டுப்பாட்டு அறைக்கு செய்து அனுப்ப முயன்றதாகவும், ஆனால் அவரது ஒயர்லெஸ் கருவி நெட்வொர்க் வழியில் ஹெவியாக இருந்ததால் முடியவில்லையென்றும் கோர்டில் தோராவாடே கூறினார். எனவே, மெட்ரோ ஜங்ஷன் சென்று அங்கிருந்து போலீஸ் வண்டி ஒன்றில் இருந்து ஒயர்லெஸ் மூலம் செய்தி அனுப்பியதாக அவர் கூறினார்.
95. மெட்ரோ ஜங்ஷனில் அனேகம் பேர் கூடியிருந்தனர். சிறிது நேரத்தில் ஒரு போலீஸ் வண்டி (க்வாலிஸ்) பத்ருதீன் தயாப்ஜி சாலையில் தோன்றியது. மகாபாலிகா சாலையில் வலது புறம் மெட்ரோ ஜங்ஷனை நோக்கித் திரும்பியது. அந்த வண்டியில் இரண்டு பயங்கரவாதிகள் இருப்பதø தோராவாடே பார்த்தார். வலது பக்கத்தில் இருந்தவன் மெட்ரோ ஜங்ஷன் பெரிய கூட்டத்தை நோக்கிச் சுட்டுக் கொண்டேயிருந்தான். இதில் ஒரு போலீஸ்காரருக்கும் மற்றொருவரும் காயமடைந்தனர்.
96. இந்த சம்பவங்களுக்கிடையில் காதம் காமா மருத்துவமனைமுன்பு மட்டுமே இருந்தார். பத்ருதீன் தாயாப்ஜி சாலையில் இருந்து மகாபாலிகா சாலையை நோக்கி சிகப்பு விளக்குடன் ஒரு வெள்ளை நிற கார் வருவதைக் கண்டதாகவும், உடனே அந்தக் கார் பத்ருதீன் தாயாப்ஜி சாலையில் பின்னோக்கிச் சென்று விட்டதாகவும் காடம் கோர்ட்டில் கூறினார். நெட்டையனும் குள்ளனும் அந்தக் காரை நோக்கிச் சுட்டனர். ஒருவன் ஒரு கைக்குண்டையும் அந்த வெள்ளைக் கார் மீது வீசினான். பின்னர் இருவரும் பிடி சாலையின் ரங் பவன் சந்தை நோக்கிச் சென்றனர். செயினட் சேவியர் கல்லூரி அருகில் சுடப்பட்டவர் துர்குடே என்ற அதிகாரி என்பது அவரது சீருடையில் இருந்த பெயர் பகை மூலம் (நேம் பிளேட்) பின்னர் அடையாளம் காணப்பட்டது.
96. நெட்டையனுடன் கூட இருந்து துர்குடேயைச் சுட்டவன் கசாப் என்று காடம் அடையாளம் காட்டினார். இவனை 2008 டிசம்பர் 27 அணிவகுப்பிலும் அடையாளம் காட்டியுள்ளதாகவும், பின்னர் ஜே.ஜே. மருத்துவமனை சவக் கிடங்கில் நெட்டையனையும் 2009 ஜனவரி 6ம் தேதி அடையாளம் காட்டியதாகவும் காடம் கோர்டில் தெரிவித்தார்.


அரசு செயலர் கார் மீது தாக்குதல்:

97. பத்ருதீன் தாயாப்ஜி சாலையில் இருந்து மகாபாலிகா சாலையை நோக்கி வந்து, பின்னர் பின்னோக்கிச் சென்ற சிவப்பு விளக்கு வெள்ளைக் காரை ஓட்டி வந்தவர் மாருதி மாதவராவ் ஃபத். இதைத்தான் காடம் பார்த்ததாகக் கூறினார். இது ஹோண்டா சிடி வெள்ளிக்கார். அரசு வண்டி. மருத்துவக் கல்வி மற்றும் ட்ரக்ஸ் டிபார்ட்மென்ட் செயலாளர் பூஷன் கக்ரானி ஐஏஎஸ்க்கு ஒதுக்கப்பட்ட கார். அந்த வண்டியில் ட்யூடி டிரைவர் ஃபத் 2008 நவம்பர் 26ம் தேதி மாலை சுமார் 6.30 மணிக்கு வழக்கம் போல் பத்ருதீன் தாயாப்ஜி சாலையில் உள்ள ஹை ரைஸ் கட்டிடத்தில் இந்தக் கார் நிறுத்தப்பட்டிருந்தது. இரவு 11.30 - 11.45 மணிக்கு கக்ரானியிடமிருந்து டிரைவருக்கு - ஃபத் - அவருடைய வீட்டுக்குக் காரைக் கொண்டு வரும்படி அழைப்பு வந்தது. மும்பையில் பயங்கரவதிகள் தாக்குதல் செய்தி வந்துள்ளதாகவும், அதையொட்டி மந்த்ராலயாவில் நடைபெறவுள்ள அவசரக் கூட்டத்துக்குச் செல்லக் காரைக் கொண்டு வருமாறும் கக்ரானி கூறியுள்ளார். அவரது உத்தரவுப்படி டிரைவர் ஃபத், பத்ருதீன் தாயாப்ஜி சாலையில் இருந்து காரை எடுத்துக் கொண்டு மகாபாலிகா சாலை வழியாக கக்ரானி வீட்டுக்குப் புறப்பட்டார். மகாபாலிகா சாலையை அணுகும் போது, இரண்டு நபர்களை, ஒருவன் நெட்டை, ஒருவன் குட்டை பார்த்து வண்டியை பின்னோக்கி எடுத்தார். அதைக் கண்டதும் இந்த இரண்டு நபர்களும் வண்டியை நோக்கிச் சுட்டனர். டிரைவர் ஃபத் வலது கை ஸ்டியரிங் மீது இருந்தது. இரண்டு புல்லட்கள் காரின் முன் கண்ணாடியை உடைத்துக் கொண்டு, அவரது வலது கையில் பாய்ந்தது. பாய்ந்து வரும் புல்லட்டுகளில் இருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள, ஃபத் தொடர்ந்து வண்டியைப் பின்னால் கொண்டு சென்றார். ஆனால் மூன்றாவது புல்லட் அவரது இடுப்பில் பாய்ந்து விட்டது. காரின் முன் சக்கரம் பஞ்சர் ஆகி விட்டதையும் உணர்ந்தார். காரில் உள்ள சென்டல் லாக்கிங் சிஸ்டம் மூலம் நான்கு கதவுகளையும் பூட்டி விட்டு, இறந்தவர் போல காருக்குள்ளேயே ஃபத் கிடந்தார். சிறிதுநேரம் கழித்து இரண்டு பயங்கரவாதிகளும் கார் அருகே வந்து காவுகளை திறக்க முயன்றனர். ஆனால் முடியவில்லை. சற்று நேரம் கழித்து, பின்னால் இருந்த எஸ்பிஐ அலுவலகம் அருகில் இருப்பதைப் பின்புறக் கண்ணாடி வழியாகப் பார்த்தார். அவர்கள் கார் அருகில் வந்து அதைத் திறக்க முயன்றனர். ஆனால் கதவுகள் பூட்டப்பட்டிருந்ததால் திறக்க முடியவில்லை. இவரது (ஃபத்) கார் சாலையில் சாயந்து நின்று கொண்டிருந்தது. என்றாலும் மற்றக் கார்களுக்கு இரண்டு பக்கமும் செல்ல இடம் இருந்தது. இரண்டு பயங்கரவாதிகளும் ஹை ரைஸ் கட்டிடத்தை அணுகி அங்கிருந்த செடி கொடிகளுக்கு அருகில் மறைந்து கொண்டனர். பத்ருதீன் தாயாப்ஜி சாலையில் உள்ள எஸ்பிஐ அலுவலத்தின் பக்கத்திலிருந்து, தனது காரை நோக்கி ஒரு போலீஸ் வாகனம் வருவதை ஃபத் பார்த்தார். செடிகளுக்குப் பின்னால் ஒளிந்து கொண்டிருந்தவர்கள் போலீஸ் வண்டியை நோக்கிச் சரமாரியாகச் சுட்டார்கள். இதில் குள்ளன் காயமடைந்தான். அவன் துப்பாக்கி கீழே விழுந்து விட்டது. சாமர்த்தியமாக அதை மீன்டும் எடுத்து போலீஸ் வண்டியை நோக்கி மீண்டும் சுடத் தொடங்கினான்.


போலீஸ் காரை கடத்தினர்:

98. போலீஸ் வண்டியில் சுடுவது நின்றுவிட்டது. நெட்டையன் முன்புறம் வலது கதவைத் திறந்து டிரைவரை இழுத்துத் தெருவில் போட்டான். வண்டியின் நடுவில் இருந்த சீட்டில் இருந்த மற்றவனையும் இழுத்துப் போட்டான். குள்ளன் வண்டியில் இடது பக்கம் சென்று இடது பக்க முன் இருக்கையில் இருந்தவரை இழுத்துப் போட்டான். நெட்டையன் டிரைவர் ஆசனத்தில் அமர்ந்தான். குள்ளன் முன் சீட்டில் இடதுபுறம் அமர்ந்தான்.
99. இந்த சம்பவங்களையெல்லாம் சுமார் 150 அடி தூரத்தில் இருந்து பார்த்ததாக ஃபத் கோர்டில் தெரிவித்தார். பயங்கரவாதிகள் எடுத்துச் சென்ற வண்டி மகாபாலிகா சாலையை நோக்கிச் சென்றது. இவர்களிடமிருந்து அபாயம் நேரக்கூடும் என்று பயந்த டிரைவர் ஃபத் இறந்து விட்டவர் போலவே வண்டிக்குள் கிடந்தார். தீவிரவாதிகள் கைப்பற்றிச் சென்ற போலீஸ் க்வாரிஸ் வண்டி இவரைக் கடந்து சென்றது.
100. தனக்கு ஏற்பட்ட துப்பாக்கிக் காயங்களினால், தனது வலது கை மோதிர விரலை இழந்து விட்டதாகவும், மற்றும் இரண்டு விரல்கள் சரியாக வேலை செய்வதில்லை என்றும் ஃபத் கோர்டில் கூறினார். அவரால் இனிமேல் கார் ஓட்ட முடியாது.
101. பத்ருதீன் தாயாப்ஜி சாலையில், சுட்டுக் கொண்டிருந்த இரண்டு நபர்களைப் பற்றியும் ஃபத் கோர்டில் விவரமாகக் கூறினார். ஒருவன் 6 அடி உயரமானவன், வயது 22-25 இருக்கும். நல்ல சிகப்பு நிறம். மற்றவன் 5 அடி 3 அங்குல உயரம். இவனும் சிவப்பானவன். நல்ல உடற்கட்டு உடையவன். கோர்டில் அவனை அடையாளம் காட்டினார். 2008 டிசம்பர் 28ல், 7 பேர்களுக்கு நடுவிலும் இவனை அடையாளம் காட்டியதாகவும் ஃபத் கூறினார். நெட்டையனைப் புகைப்படத்தில் இருந்து அடையாளம் காட்டியதாகவும் ஃபத் கூறினார். இந்த அணிவகுப்பை நடத்தியவர் எஸ்ஈஓ விசாரே என்னும் அதிகாரி. நெட்டையனைப் புகைப்படத்தில் இருந்து அடையாளம் காட்டினார். ஆர்டிகிள் 61. அவனது சடலத்தையும் ஜே.ஜே. மருத்துவமனையில் 10 சடலங்களுக்கு நடுவில் அடையாளம் காட்டியுள்ளார்.
102. குறுக்கு விசாரணையில், மகாபாலிகா சாலையை நெருங்கும் போது போலீஸ் வாகனம் பஸ் ஸ்டாப் அருகில் இருந்ததாகவும், அந்த வண்டியின் அருகில் இருந்த போலீஸ் அதிகாரிகளைப் பயங்கரவாதிகள் சுட்டதைப் பார்த்ததாகவும் ஃபத் கூறினார்.


டிரைவர் தந்த தகவல்:

103. ப்ராசிக்யூஷன் தரப்பில் 140வது சாட்சியாக விசாரிக்கப்பட்ட பூஷன் அசோக் கக்ராணி தனது சாட்சியத்தில் கூறியதாவது: இரவு சுமார் 11.30 - 11.45 மணிக்கு இவர் தனது டிரைவர் ஃபத் இடம் தனது காரைத் தனது யசோதான் கட்டிடத்துக்குக் கொண்டு வருமாறும், மந்திராலயா செல்ல வேண்டுமென்றும் அழைத்தார். கார் வராத காரணத்தால் அவர் மீண்டும் மொபைலில் அழைத்தார். ஆனால் அவர் வரவில்லை. எனவே, கக்ராணி தனது சொந்தக் காரில் மந்திராலயா சென்றார். நள்ளிரவு சுமார் 12.15 மணிக்கு ஃபத் உடன் தொடர்பு கொள்ள முயன்றார். இப்போது பதில் கிடைத்தது. காரில்தான் சுடப்பட்டுக் கிடப்பதாகக் கூறினார். ரங்பவன் பகுதியில் கார் சிக்கியுள்ளதாகக் கூறினார். காருக்குள் காயமடைந்து கிடக்கும் செய்தியையும் தெரிவித்தார். உடனே கக்ராணி போலீஸ் கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பு கொண்டார். ஆனால் அந்த எண் தொடர்ந்து உபயோகத்தில் இருந்ததால் தொடர்பு கிடைக்கவில்லை. உடனே ஜி.டி. மருத்துவமனை தலைமை அதிகாரியுடன் தொடர்பு கொண்டு டிரைவர் ஃபத் க்கு உதவியளிக்குமாறு கோரினார். துப்பாக்கிக்குண்டு காயங்களுடன் ஃபத் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக கக்ராணிக்குத் தெரிவிக்கப்பட்டது.
104. கக்ராணியின் மொபைல் தொலைபேசியிலிருந்து ஃபத் மற்றும் மருத்துவமனைக்கு மேற்கொள்ளப்பட்ட அழைப்புகள் தனித்தனியாகப் பதிவு செய்யப்பட்டு உறுதி செய்யப்பட்டுள்ளன.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X