தமிழ்நாடு

ஓடைப்பாலத்தை உயர்த்தி கட்ட நடவடிக்கை தேவை

Added : அக் 02, 2010
Share
Advertisement
தேவதானப்பட்டி : அழகர்நாயக்கன்பட்டி அருகே உள்ள சம்பா ஓடை பாலத்தை உயர்த்தி கட்டி, கண்மாய்களுக்கு தடையின்றி நீர் கொண்டு வர, பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். பெரியகுளம் வராகநதியில் வரும் நீரை வடுகபட்டி வெள்ளக்கரடு அணை அருகே ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டி அங்கிருந்து 7 கி.மீ., தூரம் வாய்க்கால் மூலம் நீர் கொண்டு வரப்பட்டு நல்ல கருப்பன்பட்டி நாரணன்

தேவதானப்பட்டி : அழகர்நாயக்கன்பட்டி அருகே உள்ள சம்பா ஓடை பாலத்தை உயர்த்தி கட்டி, கண்மாய்களுக்கு தடையின்றி நீர் கொண்டு வர, பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


பெரியகுளம் வராகநதியில் வரும் நீரை வடுகபட்டி வெள்ளக்கரடு அணை அருகே ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டி அங்கிருந்து 7 கி.மீ., தூரம் வாய்க்கால் மூலம் நீர் கொண்டு வரப்பட்டு நல்ல கருப்பன்பட்டி நாரணன் குளம், சில்வார்பட்டி சிறுகுளம் கண்மாய்கள் நிரப்பப்படுகின்றன. இவ்வாறு அணையில் தேக்கப்படும் நீர், வாய்க்காலில் வரும் நீரையும் ஆதாரமாக கொண்டு இரண்டாயிரம் ஏக்கர் பரப்பளவில் முதல்போக நெல்சாகுபடி நடந்து வருகிறது.


நீர்வரத்தில் தடை: அழகர்நாயக்கன்பட்டி அருகே சம்பா ஓடையில், நீர் வரும் வாய்க்காலின் குறுக்கே 50 ஆண்டுகளுக்கு முன்பு பாலம் கட்டப்பட்டு அதன் வழியாக நீர் வந்து கொண்டிருக்கிறது. பாலம் மிக தாழ்வாகவும், நீர் வெளியேறும் பகுதியின் அளவு குறைவாகவும் இருப்பதால் வாய்க்காலில் அதிகமான நீர் கொண்டு வரமுடியவில்லை. அடிக்கடி இந்த பாலத்தில் குப்பைகளால் அடைப்பு ஏற்பட்டு வாய்க்காலில் அடிக்கடி கரைகள் உடைப்பு ஏற்பட்டு வருகிறது.


இதனால் நீர் வருவதில் தடை ஏற்பட்டு, கண்மாய்கள் நிறைவதில் தாமதம் ஏற்படுகிறது. எனவே விவசாயிகளின் நலன் கருதி சம்பா ஓடைப்பாலத்தை உயர்த்தி கட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X