3 வயது குழந்தையை வீசி எறிந்த தந்தை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

3 வயது குழந்தையை வீசி எறிந்த தந்தை

Added : மே 21, 2014
Share

பேரையூர்: மதுரை மாவட்டம் பேரையூரை சேர்ந்தவர் ராஜாத்தி(21). இவரது கணவர் மணிகண்டன்(25). இவர்களுக்கு 3 வயதில் குழந்தை உள்ளது. இருவரும் திருப்பூரில் வேலைபார்த்து வந்தனர். ராஜாத்தி சொந்த ஊருக்கு வந்திருந்தார். அவரை அழைத்து செல்ல மணிகண்டன் பேரையூர் வந்துள்ளார். அப்போது இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்தரமடைந்த மணிகண்டன், குழந்தையை வீசி எறிந்தார். இதில் பலத்த காயமடைந்த குழந்தை, ரத்த வாந்தி எடுத்தது. இதனையடுத்து மதுரை அரசு மருத்துவமனையில், குழந்தை அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X