காலில் அடிபட்டவரை காலனிடம் அனுப்பிய மொபைல்| Dinamalar

காலில் அடிபட்டவரை காலனிடம் அனுப்பிய மொபைல்

Updated : மே 28, 2014 | Added : மே 28, 2014 | கருத்துகள் (1)
Advertisement
காலில் அடிபட்டவரை காலனிடம் அனுப்பிய மொபைல்

படுகாயம் அடைந்த நிலையிலேயே பயணம் செய்தவர்: 105. 136வது ப்ராசிக்யூஷன் சாட்சி அருண்தாதா ஜாதவ் ஒரு சிறப்புச் சாட்சியாவார். அவரது நிலைமை மிகவும் பிரத்யேகமானது. 3 மூத்த போலீஸ் அதிகாரிகள் 3 போலீசாரை பத்ருதீன் தாயாப்ஜி சாலையில் கொன்று விட்டு, பயங்கரவாதிகள் கடத்திச் சென்ற போலீஸ் க்வாரிஸ் வாகனத்தில் படுகாயமடைந்து, பின்சீட்டில் கிடந்து, அவர்களுடனேயே பிரயாணம் செய்தவர் இவர்.

106. கூடுதல் போலீஸ் கமிஷனர் தாதே (பி.டபிள்யூ118) புதிய காமா மருத்துவமனை புதிய கட்டிடத்தில் 6வது தளப்பகுதியில் பயங்கரவாதிகளை எதிர்த்து நினறபோது, பல மூத்த அதிகாரிகளும், போலீசாரும் மருத்துவமனை பின்புறத்தில் ஒன்று சேர்ந்தனர். அப்போது காயமடைந்த போலீஸ்காரர் ஆஸ்பத்திரி பின்புறத்திலிருந்து தோன்றினார். தாதே மற்றும் சில போலீஸ் அதிகாரிகள் மருத்துவமனை மேல் தளங்களில் காயமடைந்து விழுந்து கிடப்பதாகத் தெரிவித்தார். உடனே கிழக்கு பிராந்திய கூடுதல் போலீஸ் கமிஷனர் கமாதே, பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவு (ஏடிஎஸ்) இணை போலீஸ் கமிஷனர் சர்காரே, மூத்த போலீஸ் அதிகாரி சலாஸ்கார் ஆகியோர் காமா மருத்துவமனை முன்வாசலுக்குச் செல்ல தீர்மானித்தார்கள். பயங்கரவாதிகள் அந்த வழியாக வெளியே செல்லக் கூடுமென்று அவர்கள் எதிர்பார்த்தனர். அங்கே இருந்த பைதோனி டிவிஷன் க்வாரிஸ் ஜீப்பை அவர்கள் எடுத்துக் கொண்டனர். சலாஸ்கர் டிரைவர் இருக்கையில் அமர்ந்தார். கமாதே முன்னால் இடப்புறம் அமர்ந்தார். வாகனத்தின் நடு இருக்கையில் கர்காரே, மரட்டல் பண வசூல் தடுப்புப் பிரிவைச் சேர்ந்த ஜாதவ் கடைசிப் பின் இருக்கையிலும் அமர்ந்தனர். இந்த வண்டியின் டிரைவர் பாஸ்லே (கொல்லப்பட்டவர்) ஜாதவ் அருகில் இருந்தார். கான்ஸ்டபிள்கள் யோகேஷ் பாட்டீல் (கொல்லப்பட்டவர்) மற்றும் ஜே வந்த் படீல் பின் சீட்டில் ஜாதவ், பாஸ்லேக்கு அமர்ந்தனர். இந்த வண்டியின் ஒயர்லெஸ் ஆபரேடராக யோகேஷ் பாட்டீல் இருந்தார். காம்தே வண்டியின் ஒயர்லெஸ் ஆபரேடராக ஜே வந்த பாடீல் பணியில் இருந்தார்.
போலீஸ் கார் மீது சரமாரி துப்பாக்கிச்சூடு:

107. இவர்கள் பத்ருதீன் தாயாப்ஜி சாலையில் எஸ்பிஐ அலுவலகத்தை நோக்கிச் செல்லும் போது, இரண்டு பயங்கரவாதிகள் ரங்க் பவன் சந்தில் ஒரு சிவப்புக் கார் அருகில் ஒளிந்து கொண்டிருப்பதாக ஒயர்லெஸ் செய்தி வந்தது. எஸ்பிஐ அலுவலகத்தில் இருந்து ரங்க் பவன் சந்து ஆரம்பமாகிறது. வண்டியை மெதுவாகச் செலுத்தும்படி காமாதே டிரைவர் சலாஸ்கரிடம் கூறினார். எச்சரிக்கையோடு ஓட்டும்படி கூறினார். 5 அடி 5.5. அடி உயரத்துக்குச் சாலையின் வலது புறம் செடி கொடிகள் இருந்ததாக ஜாதவ் நீதிமன்றத்தில் தெரிவித்தார். இந்தப் புதர்களுக்கு அருகாமையில் க்வாலிஸ் வண்டி வந்ததும் குண்டுகள் வெடித்ததை வண்டியின் ஜன்னல் வழியாக ஜாதவ் பார்த்தார். உயரமான ஒருவனும், குள்ளமான ஒருவனும் ஏகே 47 துப்பாக்கியால் தங்கள் வண்டியின் மீது சுட்டனர். ஜாதவ், கர்காரே, கபாதே மற்றும் சலாஸ்கர் அனைவரும் அந்த பயங்கரவாதிகள் மீது சுட்டனர். இந்த தாக்குதலில் ஜாதவுக்குக் குண்டுக்காயம். வலது, இடது தோளில் ஏற்பட்டது. பயங்கரவாதிகள் தொடர்ந்து சுட்டார்கள். காயம் காரணமாக ஜாதவ் கார்பைன் கையிலிருந்து வண்டியில் விழுந்து விட்டது. இதற்குள் எல்லா போலீசாருமே காயமடைந்து விட்டார்கள். ஜாதவ் தனது கார்பைனை எடுக்க முடியவில்லை.


இறந்தது போல் பாசாங்கு:

108. சில நேரம் கழித்து சுடுவது நின்றது. நெட்டையன் வண்டியின் பின் கதவைத் திறக்க முயன்றான். ஆனால் முடியவில்லை. தனது கார்பைனை எடுக்க மீண்டும் முயன்றார். டிரைவர் பாஸ்லே படு காயம் அடைந்திருந்தார். யோகேஷ் பாடீல், ஜேவந்த் பாடீல் இருவராலும் நகரவே முடியவில்லை. தன்னால் திருப்பித் தாக்க முடியாது என்று உணர்ந்த ஜாதவ் இறந்து விட்டதுபோல் பாசாங்கு செய்தார். அப்போது வண்டி ஸ்டார்ட் செய்யப்படும் சத்தம் கேட்டது. டிரைவர் இருக்கையில் நெட்டையன் இருந்தான். கர்காரே, சலாஸ்கர், கமாதே யாரும் வண்டியில் இல்லை.
109. மெட்ரோ ஜங்ஷனில் ஜாதவ் குண்டு வெடிப்புச் சத்தங்களை கேட்டார். என்றாலும் தொடர்ந்து இறந்து விட்டது போலவே பாசாங்கு செய்தார். வண்டியின் ஒரு சக்கரம் பஞ்சர் ஆகிவிட்ட தென்பதையும், சற்றுபிறகு டயர் ட்யூப் இரண்டுமே சக்கரத்தை விட்டுக் கழன்று விட்டதென்பதையும், ஒரு அனுபவ மிக்க டிரைவர் என்ற முறையில் அவரால் உணர முடிந்தது.


வேறு காருக்கு மாறிய பயங்கரவாதிகள்:

110. விதான் பவன் சாலைக்குப் பின்னால் வண்டி நின்றுவிட்டது. மேலும் வெடிச்சத்தங்கள் கேட்டது. கீவாரிஸ் வண்டியை விட்டுப் பயங்கரவாதிகள் போவதை ஜாதவ் பார்த்தார். அங்கேயிருந்த இன்னொரு காரில் ஏறினார்கள். அது ஹோண்டா சிடி போலத் தெரிந்தது. தெரு விளக்கு வெளிச்சத்தில் அவரால் நன்றாகப் பார்க்க முடிந்தது.
111. பயங்கரவாதிகள் சென்ற பின்னர், வண்டியில் இருந்த ஒயர்லெஸ் மூலம் ஜாதவ் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்குச் செய்தி தெரிவித்தார். இரண்டு பயங்கரவாதிகளும் சென்றுவிட்டனர் என்றும், பைதோனி டிவிஷன் வண்டியில், ஸ்டேட் பேங்க் ஆப் மைசூர் எதிரில் காயம் பட்டுக் கிடப்பதையும் தெரிவித்தார். மூத்த போலீஸ் அதிகாரி அம்ருதே உள்ளிட்ட ஒரு போலீஸ் குழு உடனே வந்து அவரை மீட்டது. அம்ருதே ப்ராசிக்யூஷன் சாட்சி 137.
112. ஜாதவ் இரண்டு பயங்கரவாதிகளையும் நீதிமன்றத்தில் வர்ணித்தார். நெட்டையன் 6 அடி உயரமானவன். நல்ல உடற்கட்டும் இருந்தது. சிவந்த மேனியன். வயது 22-25 இருக்கலாம். குள்ளன் 5 அடி 3 அங்குல உயரமானவன். சுமாரான உடற்கட்ட. இவனும் சிவப்பன். வயது 20-22 இருக்கலாம். இவனே அந்தக் குள்ள பயங்கரவாதி மனுதாரர் கசாப் என்றும் ஜாதவ் நீதிமன்றத்தில் அடையாளம் காட்டினார். 2008 டிசம்பர் 27 அன்று அர்தர் ரோடு சிறையில் நடந்த அடையாள அணிவகுப்பிலும், இவனை ஜாதவ் அடையாளம் காட்டினார். 2009 ஜனவரி 9ம் நாள் மருத்துவமனையில் 7 பிணங்களுக்கு நடுவில் நெட்டையன் சடலத்தையும் இவர் அடையாளம் காட்டினார்.
113. இந்த பயங்கர சம்பவங்கள் நடந்த சமயம் தன்னிடத்தில் இருந்த கார்பைன் மற்றும் கார்பைன் (மொத்தமாக ஆர்டிகிள் 444) ஆகிய பொருட்களையும் அவர் அடையாளம் காட்டினார்.


மொபைல் சப்தம் கேட்டதும் சுட்ட கசாப்:

114. மனுதாரர் கசாப் சார்பில் நடந்த குறுக்கு விசாரணையில் ஜாதவ் கூறியது: பக்ருதீன் தாயாப்ஜி சாலை வழியாகப் போகும்போது ஜாதவ் சிவப்பு விளக்குடன் கூடிய வெள்ளை நிறக் கார் ஒன்றைப் பார்த்தார். போலீஸ் வண்டியில் இருந்தவர்களுக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையேயான துப்பாக்கிச் சண்டை ஏடிஎம் மையத்துக்கு எதிராக நடந்தது. இந்தச் சண்டை நேரத்தில் அவரது கார்பன் சிங்கிள் சுடுதல் முறையில் இருந்தது. அதை வெடிப்பு முறையில் மாற்ற அவருக்குச் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. ஜாதவ், சலாஸ்கார், கர்காரே, கமாதே பயங்கரவாதிகளை நோக்கித் திருப்பிச் சுட்டார்கள்
மனுதாரன் கசாப் கையிலிருந்த ஏகே 47 ஜாதவ் சுட்டதில் கீழே விழுந்து விட்டது. ஆனால் அவன் அதை மீண்டும் எடுத்துச் சுடத் தொடங்கினான். பயங்கரவாதிகள் க்வாரிஸ் வண்டியை ஓட்டும்போது யோகேஷ் பாட்டீல் முழங்காலில் அடிபட்டுப் படுத்திருந்தார். அப்போது பாட்டீலின் மொபைல் மணி அடித்தது. மனுதாரர் கசாப் உடனே தனது துப்பாக்கியைப் பின்னோக்கித் திருப்பி குண்டுகளைப் பொழிந்தான். புல்லட்டுகள் நடு இருக்கையைத் தாக்கி யோகேஷ் பாட்டில் உடலைத் துளைத்தன. அவர் இறந்து விழுந்தார். இதில் ஜாதவ் காயமடையவில்லை. மனுதாரன் கசாப் 10-15 முறை சுட்டிருக்கக் கூடுமென்று ஜாதவ் கூறினார். நெட்டையன் சலாஸ்காரை வெளியில் இழுத்தான். இதற்குக் குள்ளன் உதவினான். கமாதேயை கசாப் இழுத்தான். கர்காரேயை நெட்டையன் இழுத்தான். கர்காரேயை வெளியே இழுக்கும்போது கசாப் அவரை சபித்தான். குண்டு துளைக்காத ஜாக்கெட் அணிந்து கொண்டிருப்பதாக மோசமான வார்த்தைகளால் திட்டினான். இந்த சம்பவங்கள், ஆரம்ப முதல் முடிவு வரை - குண்டு வெடிப்புகள் 3-4 நிமிடங்கள் நீடித்தனவென்று ஜாதவ் கூறினார்.
ஸ்கோடா கொள்ளை:

115. ஷரண் அரசா (பி.டபிள்யூ144), சமித் விஜய் அஜ்கோன்கர், அவரது மனைவி மேகா மூவரும் வெள்ளை ஸ்கோடா காரில் இருந்தனர். இதையே துப்பாக்கி முனையில் கசாப், அபு இஸ்மாயில் இருவரும் கைப்பற்றினர். போலீஸ் க்வாலிஸ் வண்டியின் பின்னால் கிடந்த அருண்தாதா ஜாதவ் (பி.டபிள்யூ147) இந்த வெள்ளை ஸ்கோடா வண்டியைத் தான் ஹோண்டா சிடி என்று நினைத்தார்.

116. சித்தார்த் உமாசங்கர் (பி.டபிள்யூ238) ஓபிராய் ஹோட்டலில் சேல்ஸ் மேனேஜராகப் பணியாற்றுகிறார். அரசா மற்றும் அஜ்கோன்கர் இருவருக்கும் இவர் நண்பர். இரண்டு பயங்கரவாதிகள், அப்துல் ரெஹிமான் (சோட்டா) மற்றும் பகதுல்லா இருவரும் ஓபிராய் ஹோட்டலுக்குள் நுழைந்து சுடத் தொடங்கினார்கள். உமாசங்கர் மற்றும் வந்திருந்தோர், ஊழியர்கள் அப்போது லூபி பகுதியில் இருந்தனர். அவர்கள் அஙகிருந்த வெளிக்கதவு வழியாகத் தப்பிச் சென்று விட்டார்கள். இனாக்ஸ் மல்டிப்ளெக்ஸ் பகுதிக்குச் சென்றனர். சில நிமிடங்களில் நடந்தே இதை அடைந்து விடலாம். அஸ்கோன்கர் அவரை அழைத்தபோது, தன்னை உடனே வந்து அழைத்துப் போகுமாறு போன் செய்து அவரது காரை எடுத்து வருமாறும், இனாக்ஸ் சென்று உமாசங்கரை அழைத்து வரலாமென்றும் கூறினார். உடனே அரசா ஸ்கோடா (கார் அவர் தந்தையை உரிமையாளராகக் காட்டிப் பதிவு செய்யப்பட்டது) காரை எடுத்துக் கொண்டு அனுகோன்கரின் மஹீம் வீட்டுக்கு வந்தார். மஹீம்-ல் இருந்து அவர்கள் இனாக்ஸ் நோக்கிச் சென்றனர். காரை அரசா டிரைவ் செய்து வந்தார். முன்பக்க இடது இருக்கையில் அனுகோங்கர் இருந்தார். பின்சீட்டில் அவர் மனைவி மேகா இருந்தார். அவர்கள் உமா சங்கர் உதவிக்குச் சென்று கொண்டிருந்தார்கள். ஆனால் இரண்டு பயங்கரவாதிகளை நேருக்கு நேர் சந்தித்து, அவர்களே உயிரிழந்து விட்டார்கள்.


நாரிமன் பாயின்ட் பகுதியில்:

117. அவர்கள் நரிமான் பாயின்டில் நள்ளிரவு 12.15 மணிக்கு 2008 நவம்பர் 27ல் அடைந்தனர். (அதாவது நேரக் கணக்குபடி இரவு 12.00 மணிக்கு நவம்பர் 26 முடிந்து 27 தொடங்கி விட்டது. 12.45 மணி என்பது அடுத்த நாளையே குறிப்பதாகும்). எதிர்திசையில் இருந்து போலீஸ் கிவாரிஸ் வண்டி 60 அடி தூரத்தில் வந்து கொண்டிருப்பதைக் கண்டார்கள். அந்த வண்டியிலிருந்து, உடனே நிறுத்தும்படி யாரோ கத்தினார்கள். க்வாரிஸ் நின்றது. அதிலிருந்து இரண்டுபேர் இறங்கி இவர்கள் காரை நோக்கி வந்தனர். காரிலிருந்து இறங்கியவன் இவர்கள் காரை நோக்கி வந்தனர். அரசாவை காரை விட்டு இறங்குமாறு கட்டளையிட்டான். க்வாலிஸ் காரை ஓட்டி வந்தவன் அரசாவை ஸ்கோடா காரில் இழுத்து, அவன் காலரைப் பற்றிக்கொண்டான். அதேசமயம் சமீத், மேகா இருவரும் காரை விட்டு நடைபாதையில் உட்கார்ந்தார்கள். வண்டியின் சாவி தன்னிடமே இருப்பதை உணர்ந்த அரசா, உடனே அதைத் தூர எறிந்து விட்டனர்.
118. க்வாலிஸ் காரின் இடதுபுறத்தில் இருந்து இறங்கியவன் குள்ளமாக இருந்தான். தன்னிடமிருந்து கார் சாவியைக் கேட்டவன் இந்தக் குள்ளமான மனுதாரனே என்று அரசா நீதிமன்றத்தில் அவனை அடையாளம் காட்டினார். அரசா சாவியை எறிந்தபோது அது காரின் வலது பின்பக்கத்தில் விழுந்திருந்தது. அரசா அதை எடுத்து மனுதாரன் கசாபிடம் கொடுத்தார். அவன் காரின் முன்இடது பக்கம் உட்கார்ந்தான். அவனுடைய கூட்டாளி வண்டியை ஓட்டிச் சென்றான்.
119. இந்த நிகழ்ச்சியை அனுகோன்கர் எவ்வாறு விளக்கினார் என்று அடுத்த வாரம் பார்க்கலாம்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X