பஞ்சாப் பொற்கோவிலுக்குள் ரத்தக்களறி ; ஈட்டி- வாள் கொண்டு கொடூர தாக்குதல்

Updated : ஜூன் 06, 2014 | Added : ஜூன் 06, 2014 | கருத்துகள் (40) | |
Advertisement
அமிர்தசரஸ்: பஞ்சாப் சீக்கிய பொற்கோவில் வளாகத்தில் சீக்கியர்கள் இரு பிரிவனர்கள் வாள் மற்றும், ஈட்டி போன்ற ஆயுதங்களுடன் கடுமையாக மோதிக்கொண்டனர். இதில் 6 பேர் காயமுற்றனர். சினிமாவில் வரும் காட்சி போல கொடூரமாக மோதிக்கொண்டதை பார்க்க முடிந்தது. 1984ல் பஞ்சாப் பொற்கோவிலில் ராணுவம் நுழைந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சீக்கியர்கள் கடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்று 30
ஈட்டி- வாள் கொண்டு கொடூர தாக்குதல்

அமிர்தசரஸ்: பஞ்சாப் சீக்கிய பொற்கோவில் வளாகத்தில் சீக்கியர்கள் இரு பிரிவனர்கள் வாள் மற்றும், ஈட்டி போன்ற ஆயுதங்களுடன் கடுமையாக மோதிக்கொண்டனர். இதில் 6 பேர் காயமுற்றனர். சினிமாவில் வரும் காட்சி போல கொடூரமாக மோதிக்கொண்டதை பார்க்க முடிந்தது.

1984ல் பஞ்சாப் பொற்கோவிலில் ராணுவம் நுழைந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சீக்கியர்கள் கடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்று 30 வது ஆண்டு நாள் ஆகும். இது தொடர்பான விவாத கூட்டம் இன்று பஞ்சாப் பொற்கோவிலில் நடந்தது.

இதில் சிரோண்மணி அகாலிதள் மற்றும் சிரோண்மனி குருத்துவாரா பிரபந்த கமிட்டியினரும் பங்கேற்றனர். இதில் புளுஸ்டார் ஆப்ரேஷன் தொடர்பாக ஐ.நா., குழு விசாரணை வேண்டும் என்று ஒரு தரப்பினர் குரல் எழுப்பினர். ஆனால் சிலருக்கு பேச வாய்ப்பு மறுக்கப்பட்டது. இதனால் ஆத்திரமுற்ற ஒரு பிரிவினர் மற்றொரு பிரிவினரை தாக்க முற்பட்டனர். தொடர்ந்து கையில் தயாராக வைத்திருந்த நீள வாள் மற்றும் பல அடி நீளம் கொண்ட ஈட்டி போன்றவற்றால் மாறி, மாறி தாக்கினர். இந்த சண்டைகாட்சி ஒரு போர்க்களம் போல் காட்சியளித்து. இந்த தாக்குதலில் 10க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (40)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
suna paana - singapore,சிங்கப்பூர்
07-ஜூன்-201405:59:29 IST Report Abuse
suna paana இவர்கள் பேச வாய்ப்பு மறுக்க பட்டதுக்கே கொலைவெறியா சண்டை போடுறீங்களே, நம்ம மன்னுமோகன் ஜி 10 வருசமா பேசாமயே பிஎம் ஆ இருந்திருக்காரே
Rate this:
Cancel
Siva - Singapore  ( Posted via: Dinamalar Android App )
07-ஜூன்-201404:38:52 IST Report Abuse
Siva Its only a small clash and few people had minor injuries. But to catch attention??? , in the news title don't use the word ரத்தக்களறி. It totally gives a wrong meaning and especially for sensitive news, it will only fuel the hatred between involved parties and make the situation worse. As a responsible newspaper you should have known this !!!
Rate this:
Cancel
novm - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
07-ஜூன்-201403:18:15 IST Report Abuse
novm அடே பலே பலே பலே பல்லே பல்லே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X