செம்மரம் வெட்டுபவர்களுக்கு வார கூலி ரூ.1.25 லட்சம்: அதிக பணத்திற்கு ஆசைப்பட்டு உயிரை இழக்கும் கூலிகள்: புரோக்கர்களை ஒடுக்கும் பணியில் போலீசார்| Daily wage for redsandalwood smugglers | Dinamalar
பதிவு செய்த நாள் :
கருத்துகள் (11)  கருத்தை பதிவு செய்ய

வாரத்திற்கு, 1.25 லட்சம் ரூபாய் கூலி என்ற புரோக்கர்களின், 'பசப்பு' வார்த்தைக்கு ஆசைப்பட்டு, செம்மரங்களை கடத்த, வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களை சேர்ந்தவர்கள் ஆந்திராவிற்கு சென்று, போலீசாரிடம் சிக்கி உயிரை இழந்து வருகின்றனர்.

தமிழகத்தின் வட மாவட்டங்களில் ஒன்றான திருவண்ணாமலை மாவட்டத்தில் தான், இயற்கை வளம் மிகுந்த, ஜவ்வாது மலை உள்ளது. ஆசியாவிலேயே, தரம் மிகுந்த சந்தன மரங்கள் வளரும் பகுதி இது தான். ஜவ்வாது மலையில், 272 கிராமங்கள் உள்ளன. 50 ஆயிரம் மக்களின் வாழ்வாதாரப் பகுதி இது.இங்கு, 25 ஆண்டுகளுக்கு முன், அதிகளவில் சந்தன மரங்கள் இருந்தன; தற்போது இருப்பது சொற்பமே. ஆந்திர மாநில, சந்தன மரக்கடத்தல் 'மாபியா' கும்பல், இங்குள்ள மலைவாசிகளுக்கு அதிக கூலி கொடுத்து, சந்தன மரங்களை, அதிகளவில் வெட்டிக் கடத்திச் சென்றதே இதற்கு காரணம்.ஜவ்வாது மலையில், சந்தன மரங்கள் வெட்டிக் கடத்தப்பட்டதால், இப்பகுதியைச் சேர்ந்தவர்கள் வருவாய் இன்றி தவித்தனர். தொடர்ந்து, இவர்கள் ஆந்திரா, கர்நாடக மாநிலங்களுக்கு கூலி வேலைக்கு சென்றனர். அங்கும் போதிய வருவாய் கிடைக்காததால், கள்ளச்சாராயம் காய்ச்சுதல், நாட்டு துப்பாக்கி தயாரித்தல் என, சமூக விரோத நடவடிக்கைகளில் ஈடுபட துவங்கினர்.இதையறிந்த போலீசார், கள்ளச்சாராயம் மற்றும் துப்பாக்கி தயாரித்தவர்களை தேடிப்பிடித்து நடவடிக்கை எடுத்தனர். இதனால், ஜவ்வாது மலை கிராம மக்களின் வருவாய் மீண்டும் தள்ளாடியது.புரோக்கர்கள் தொடர்புமக்களின் இந்த நிலையை புரிந்து கொண்ட, சந்தன கடத்தல் புரோக்கர்கள், குறிப்பாக, ஜவ்வாது மலையில், 1995 முதல் 2000 வரை, சந்தன மரக்கடத்தலில் ஈடுபட்டவர்களை தொடர்பு கொண்டு, ஆந்திர மாநிலத்தில் செம்மரங்களை (சிவப்பு சந்தன மரம்) வெட்டி, கடத்திக் கொடுத்தால், அதிக பணம் தருவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளனர்.இவ்வாறு, 50 புரோக்கர்கள் மூலம், ஜவ்வாது மலை கிராமங்களில் இருந்து, 3,000 பேரை, ஆந்திர மாநிலம், திருப்பதிக்கு அழைத்துச் சென்று, மரக் கடத்தலில் ஈடுபடுத்தி வந்தனர்.இதுதவிர, கர்நாடகா, ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த, 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இத்தொழிலில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அப்பாவி மலைவாழ் மக்கள்
சந்தையில் செம்மரம், ஒரு கிலோ, 4,000 - 5,000 ரூபாய் வரை விற்கப்படுகிறது. காட்டிற்குள், 10 கிலோ மீட்டர் தூரத்துக்கு சென்று, செம்மரம் வெட்டி வெளியே கொண்டு வந்தால், ஒரு கிலோவுக்கு, 100 முதல் 200 ரூபாய் வரை கூலி வழங்கப்பட்டது. தொடர்ந்து, 10 கிலோ மீட்டர் சுற்றளவு பரப்பில் உள்ள அனைத்து செம்மரங்களையும் அவர்கள் வெட்டிக் கடத்தி விட்டனர்.தற்போது, 40 கி.மீ., முதல் 50 கி.மீ., தூரம் வரை, காட்டின் உட்பகுதிக்கு சென்று மரங்களை வெட்டி, கடத்தி வருகின்றனர். ஒருவர், தினசரி, 40 முதல் 60 கிலோ வரை சுமந்து, வெளியே கொண்டு வந்து கொடுக்கின்றனர். தூரம் அதிகமாகியதால், நாள் ஒன்றுக்கு இவர்களுக்கு கூலியாக, 15 ஆயிரம் முதல் 30 ஆயிரம் ரூபாய் வரை, கிடைக்கிறது.இதன் மூலம், மரம் வெட்டி, கடத்திக் கொண்டு வரும் தொழிலாளர்களுக்கு, வாரத்துக்கு, 75 ஆயிரம் முதல் 1.25 லட்சம் ரூபாய் வரை கூலி கிடைக்கிறது. இது தவிர, கூலியாட்களை

அழைத்து வரும் புரோக்கர்களுக்கு, கிலோவிற்கு, 100 ரூபாய் கமிஷன் வழங்கப்படுகிறது.இதனால், புரோக்கர்களும் பணத்திற்கு ஆசைப்பட்டு, அப்பாவி மலைவாழ் மக்களை, செம்மரக் கடத்தல் பணிக்கு அதிகளவில் வரவழைக்கின்றனர்.

எலும்பு கூடாய் கூலிகள்
தமிழக கூலிகள் அதிகளவில் செம்மரங்களை வெட்டுவது ஒருபுறம் இருக்க, மறுபுறம் ஆந்திர வனத்துறையினர் தீவிர ரோந்தில் ஈடுபட்டு, செம்மரக்கடத்தலை தடுக்க முயற்சித்தனர். ஆனால், வனப்பகுதியில், குறைவான எண்ணிக்கையில் வனத்துறையினர் ரோந்து வரும் போது, கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள், அவர்களை ஆயுதங்களை கொண்டு தாக்கி வந்தனர்.இதையும் மீறி, வனத்துறையினர் பிடியில், செம்மரக் கூலிகள் சிக்கினால், அவர்களுக்கான வழக்கு செலவு மற்றும் குடும்ப செலவை, புரோக்கர்கள் ஏற்றுக் கொள்கின்றனர். இதனால், சிறையிலிருந்து வெளியே வந்தவுடன், அவர்களை மீண்டும் செம்மரம் வெட்டும் தொழிலில் ஈடுபடுத்துகின்றனர். சில நேரங்களில், செம்மரக் கூலிகள் மீது ஆந்திர வனத்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்துகின்றனர். இதில், சில தொழிலாளிகள் இறக்க நேரிடுகிறது.அப்போது வனத்துறையினரே, இறந்தவர்கள் குடும்பத்திற்கு தகவல் அளித்து, உடலை ஒப்படைக்கின்றனர். சில நேரங்களில், துப்பாக்கிச்சூடு நடத்தியதை வனத்துறையினர் தெரிவிப்பதில்லை. இதனால், பலியானவர்களின் உடல்கள், வனப் பகுதியிலே கிடக்கும். கடத்தல் குழுவில் உள்ளவர்கள், அவர்களது உறவினர்களுக்கு தகவல் மட்டும் அளிக்கின்றனர்.உடலை தேடிச் சென்றால், வழக்கு கள் பாயும் என்பதால், இறந்தவர்களின், குடும்பத்தினர் தேடிச்செல்வதில்லை. இதனால், ஏராளமான தொழிலாளர்களின் உடல்கள், வனப்பகுதியில், எலும்புக் கூடுகளாக கிடப்பதாகவும், ஆந்திர வனத்துறையினரே தெரிவிக்கின்றனர்.

மூவர் பலி
ஆந்திர வனப் பகுதியில், இரண்டு மாதங்களுக்கு முன், ரோந்தில் ஈடுபட்ட வனத்துறை அலுவலர்களை, கடத்தல் கும்பல் கொலை செய்தது. இதையடுத்து, மே, 27ம் தேதி, ஆந்திர மாநில, அதிரடிப்படை போலீசார், வனப்பகுதியில், செம்மர கடத்தல் கும்பலை பிடிக்க, தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது, ஜவ்வாது மலை அடிவாரப் பகுதியில் உள்ள, தானியாறு கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன், விஜயகாந்த், சிவா ஆகியோர் சுட்டு கொல்லப்பட்டனர். இதே போல், மூன்று மாதங்களுக்கு முன், ஜவ்வாது மலையை சேர்ந்த மூன்று பேர், சுட்டுக் கொல்லப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக, தானியாறைச் சேர்ந்த குமார் கூறியதாவது:இப்பகுதி மக்கள், விவசாயத்தை நம்பியே உள்ளனர். கடும் வறட்சியினால், கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களுக்கு கூலி வேலை தேடி செல்கின்றனர். வெளி மாநிலங்களுக்கு செல்லும், ஒரு சிலரை, புரோக்கர்கள், பண ஆசை காட்டி, செம்மரம் வெட்ட அழைத்து செல்கின்றனர்.இதனால், அசம்பாவிதம் ஏற்பட்டு உயிரிழக்கும் நிலை ஏற்படுகிறது. எனவே, இதை தடுத்து நிறுத்த, இப்பகுதி மக்களுக்கு ஆண்டு முழுவதும் வேலை கிடைக்கும் வகையில், விவசாயம் சார்ந்த தொழிற்சாலையை உருவாக்கி கொடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

தமிழக வனத்துறை தரப்பில் கூறப்படுவதாவது:

Advertisement

ஜவ்வாது மலையில் உள்ள மக்கள், ஏற்கனவே கள்ளச்சாராயம் காய்ச்சும் தொழிலில் ஈடுபட்டு வந்தனர். அவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி, கள்ளச்சாராயம் காய்ச்சுவது, முற்றிலும் தடுத்து நிறுத்தப்பட்டது.இவர்களுக்கு சரியான வேலை வாய்ப்பு இல்லாததால், வெளிப்பகுதிகளுக்கு வேலை தேடி செல்கின்றனர். இதை புரோக்கர்கள் பயன்படுத்திக் கொண்டு, செம்மர கடத்தல் தொழிலில் ஈடுபடுத்த வைக்கின்றனர்.அவ்வப்போது, சோதனையில் ஈடுபட்டு, ஆந்திராவுக்கு மரம் வெட்டும் தொழிலுக்காக செல்பவர்கள் தடுத்து நிறுத்தப்படுகின்றனர். போலீசாரும் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கின்றனர். இருந்தாலும் அவர்கள் மீண்டும் இத்தொழிலில் ஈடுபடுகின்றனர். செம்மரம் வெட்டி, கடத்தும் கும்பல், தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா வனத்துறையினருக்கே சவால் விடும் வகையில் பெரிய, 'நெட்வொர்க்'காக செயல்படுகின்றனர். இதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு, அவர்கள் கூறினர்.

நூதன முறையில்செம்மர 'நெட்வொர்க்'
சீமாந்திரா, சேஷாசல மலையில் விளையும் செம்மரம், உலகளவில் தரம் வாய்ந்தது. கடத்தப்படும், செம்மரம், தெற்காசிய நாடுகளான சீனா, தென்கொரியா, வடகொரியாவிற்கு, கப்பல்கள் மூலம் கடத்தப்படுகிறது. அயல்நாடு களில் அதிகளவில் செம்மரம் பயன்படுத்தப்படுவதால், சர்வதேச அளவில், செம்மரக் கடத்தல் தொழில் நடக்கிறது.ஒருலோடு செம்மரக்கட்டை, 4 கோடி முதல் 6 கோடி ரூபாய் வரை விற்கப்படுகிறது. செம்மரக் கட்டைகளை, காட்டில் இருந்து லோடு ஏற்றி கொண்டு, எந்த இடத்துக்கு செல்ல வேண்டுமோ, அங்கு செல்லும் வழியில், இரண்டு அல்லது மூன்று, 'நெட்வொர்க்' செயல்படுத்தப்படுகிறது.

செம்மரம் கடத்தும் லாரி, குறிப்பிட்ட தூரம் சென்றவுடன் நிறுத்தி விட்டு, டிரைவர் சென்று விடுவார். பின், வேறொரு டிரைவர், லாரியை எடுத்து செல்வார்.அவர், மரங்களை இறக்கி விட்டு, மீண்டும் அதே இடத்தில் லாரியை கொண்டு வந்து நிறுத்தி விடுவார். இடையில், வனத்துறை அதிகாரிகள் சோதனையில் சிக்கினால், லாரியை விட்டு விட்டு, டிரைவர் தப்பிவிடுவார்.இதில், லாரி உரிமையாளருக்கு, புரோக்கர்கள், புதிய லாரியை வாங்கி கொடுத்து விடுவதால், லாரி பிடிபட்டாலும், உரிமையாளர்கள் கவலை அடைவதில்லை.

புரோக்கர்களை தேடும்ஆந்திர போலீஸ்
சமீபத்தில், சீமாந்திரா வனப்பகுதியில், செம்மரம் கடத்தியவர்களை அங்குள்ள போலீசார், வனத்துறையினர் தடுத்த போது, செம்மரக் கூலிகள் தாக்குதல் நடத்தினர். போலீசார் துப்பாக்கிச் சூட்டில், மூவர் இறந்தனர். இதையடுத்து, ஆந்திர வனப்பகுதிகளில், பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. தொடர்ந்து, கடந்த, 1ம் தேதி, ரேணிகுண்டா ரயில் நிலையத்தில், மும்பை எக்ஸ்பிரஸ் ரயிலில், வாள், கோடாரி, பேட்டரி ரம்பங்களுடன் இறங்கி வந்த, 250 பேரை பிடித்து, போலீசார் விசாரித்ததில், வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் என்பதும், ஸ்ரீசைலத்தில் செம்மரம் வெட்டிக் கடத்த வந்ததும் தெரிந்தது.மேலும், 300 பேர், வேலூரில் இருந்து, பஸ் மார்க்கமாக, திருப்பதி வந்து கொண்டிருப்பதாகவும், அவர்களை, வேலூரைச் சேர்ந்த ரகுபதி, முனிசாமி, பாபு, மகேந்திரன் ஆகிய புரோக்கர்கள் அனுப்பி வைப்பதும், விசாரணையில் தெரிந்தது. இதையடுத்து, ஆந்திர போலீசார் புரோக்கர்களை பிடிக்க, வேலூரில் முகாமிட்டு உள்ளனர்.

- நமது நிருபர் குழு -
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (11)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ganapati sb - coimbatore,இந்தியா
09-ஜூன்-201412:52:17 IST Report Abuse
ganapati sb கூலிகளையும் ப்ரோகேர்களையும் லாரி உரிமையாளர்களையும் பணத்தின் ஆசை காட்டி பயன்படுத்தி மரத்தை வெட்டி கொண்டுவரச்செய்து விற்று சம்பாதிப்பவர்கள் யார் என கண்டறிந்து அவர்களுக்கு கடும் தண்டனை அளிக்க வேண்டும். வேறு வேலை இல்லாமல் இதில் ஈடுபடும் மற்றவர்களுக்கு வேறு வேலை வாய்ப்பு அளிக்க வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
gummanguthu gopi - abudhabi ,ஐக்கிய அரபு நாடுகள்
08-ஜூன்-201415:25:29 IST Report Abuse
gummanguthu gopi சின்ன மீனை மட்டுமே பிடிப்பார்கள் இந்த அதிகாரிகள். கடத்தலில் ஈடுபட்ட பெரும்புள்ளிகள் இன்று கோடீஸ்வரர்களாகவும் அரசியல் பலம் பொருந்தியவர்களாகவும் இருப்பார்கள். கப்பலில் ஏற்றி வெளிநாடு செல்லும்போது ஏன் இவர்கள் பிடிப்பதில்லை. இது ஒன்றும் மறைத்து எடுத்து செல்லும் பொருள் அல்ல. இப்படிதான் வீரப்பனை மட்டுமே பிடித்தார்கள். அவன் யாருக்கு தந்தம், சந்தன மரம் விற்றான் என்றெல்லாம் இவர்களுக்கு தெரிந்து இருந்தாலும், அவனுக்கு ஆயுதங்கள் கொடுத்தவர்களையும் அரசு பிடிக்கவே இல்லை.ஏமாந்த கூலிக்காரன் மாட்டுமே இவர்களுக்கு சமூக விரோதிகளாக தெரிவார்கள் .
Rate this:
Share this comment
Cancel
kumar - chennai,இந்தியா
08-ஜூன்-201413:51:05 IST Report Abuse
kumar இவர்கள் சுட்டு கொல்லப்படுவது என்பது நல்ல விஷயம் .
Rate this:
Share this comment
Cancel
BalaG - Doha,கத்தார்
08-ஜூன்-201412:54:39 IST Report Abuse
BalaG பக்காவா பிளான்பண்ணி கடத்தறாங்க....எங்க போலீஸ் பிடிச்சாலும் அந்த நஷ்ட ஈட குடுத்து மீண்டும் தொழில தொடர்ந்து பண்றாங்க....வெட்டின அவ்வளவு மரமும் எங்க கொண்டுபோய் விற்கபடுது? எங்க கை மாறுது? ஏன் அங்க இன்னும் வனத்துறை மின்சார கம்பிகளை போடல? இதுக்கு பின்னாடி, பெரிய அரசியல்வாதியோட தலையீடு இருக்கும்னு தெரியுது.....இல்லனா இந்த கும்பல் இவ்வளவு தைரியமா செயல்படாது....ஆனா இந்த கதை ரொம்ப நல்ல இருக்கு....நம்ம வீரப்பன் கதை மாதிரி....கேப்டன் விஜய்காந்த் அவர் பையனை ஹீரோவா வச்சி இந்த படத்தை எடுக்கலாம்.....
Rate this:
Share this comment
Cancel
Kathirvelu Mahendran - Bangalore,இந்தியா
08-ஜூன்-201407:37:19 IST Report Abuse
Kathirvelu Mahendran தகவல் தொழில்நுட்ப வேலையில் இருப்பவர்கள் கூட பொறாமைப்படும் அளவில் உள்ளது இவர்களுடைய சம்பளம்.
Rate this:
Share this comment
madhavan rajan - trichy,இந்தியா
10-ஜூன்-201422:06:54 IST Report Abuse
madhavan rajanஅந்த மலையில் இருப்பவர்கள் அனைவருக்கும் நமது அரசாங்கம் வேலை தரத் தயாராக இருக்கிறது. ஆனால் அவர்கள் கல்வித் தகுதிக்கு 15000 அல்லது 20000 தான் மாதச் சம்பளமாகக் கிடைக்கும். அதனால் லாபகரமாக இருக்கும் இந்தத் தொழிலுக்குத்தான் அவர்கள் போவார்கள்....
Rate this:
Share this comment
Cancel
Raamji - chennai,இந்தியா
08-ஜூன்-201406:40:24 IST Report Abuse
Raamji ஏன் அரசாங்கமே இப்பழங்குடி மக்களை காடு வளர்க்க பயன் படுத்தினால் உபயோகமா இருக்குமே
Rate this:
Share this comment
Cancel
அறிவா லயதாத்தா - Chennai,இந்தியா
08-ஜூன்-201406:18:18 IST Report Abuse
அறிவா லயதாத்தா ராணுவத்தில் சிப்பாயா வேலை பார்த்து உயிரைவிட்டால் கூட லட்சகணக்கில் கிடைக்குமா?
Rate this:
Share this comment
Cancel
TIRUVANNAMALAI kulasekaran - AUSTRALIA  ( Posted via: Dinamalar Android App )
08-ஜூன்-201405:13:56 IST Report Abuse
TIRUVANNAMALAI kulasekaran கடத்தல் காரனுக்கே டெண்டர்விட்டு அரசே லம்ப்பா ஒரு தொகை வாங்கிட்டு விட்டுடலாமே
Rate this:
Share this comment
Cancel
TIRUVANNAMALAI kulasekaran - AUSTRALIA  ( Posted via: Dinamalar Android App )
08-ஜூன்-201405:12:07 IST Report Abuse
TIRUVANNAMALAI kulasekaran இவ்வளவு விவரமா எல்லாம் தெரிஞ்சிருக்கு. ஆனாலும் செம்மர கடத்தலை தடுக்க முடியலையா? பல கிலோ மீட்டர் தூரத்துக்கு மரங்களை வெட்டி ஏற்றும் வரை எல்லாரும் சும்மா இருந்துட்டாங்களா... அதுசரி.. வனத்துறையில ஒருவருசத்துக்கு அரசாங்கம் கொடுக்கிற சம்பளத்தைவிட அதி்கமா மாசாமாசம் கொடுப்பானுங்க போலுள்ளதே கடத்தல்காரனுங்க
Rate this:
Share this comment
madhavan rajan - trichy,இந்தியா
10-ஜூன்-201422:04:42 IST Report Abuse
madhavan rajanஅது நிச்சயமாக உண்டு. அது சரியாக வராத நேரத்தில்தான் நடவடிக்கை பாயும், விஷயம் வெளியே வரும்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X