நிராயுதபாணியாக பயங்கரவாதிகளை எதிர்கொண்ட அதிகாரிகள் | Dinamalar

நிராயுதபாணியாக பயங்கரவாதிகளை எதிர்கொண்ட அதிகாரிகள்

Added : ஜூன் 08, 2014
Advertisement
நிராயுதபாணியாக பயங்கரவாதிகளை எதிர்கொண்ட அதிகாரிகள்

நள்ளிரவு 2 மணிக்கு எப்.ஐ.ஆர்.: 131. காடம் தயாரித்த முதல் செய்தி அறிக்கை எஃப்ஐஆர் ஐ இன்ஸ்பெக்டர் சாவந்த் நள்ளிரவு 2.10 மணிக்குப் பதிவு செய்தார். இதுவே சிஆர் எண். 305/2008 ஆகவும் பின்னால் டிசிபி சிஐடி எண் 182/2008 ஆக மாற்றப்பட்டது. இதை இவர் கோர்ட்டில் அடையாளம் காட்டினார். ஒவ்வொரு பக்கத்திலும் இருந்த தனது கையெழுத்துக்களையும் அடையாளம் காட்டினார். இந்த எஃப்ஐஆர் 57 எண் காட்சி ஆவணமாக (ஈஎக்ஸ்டி எண்.57) குறிக்கப்பட்டது.
132. ஸ்கோடா வண்டியில் முன்பக்கத்தில் இடப்புறமாக உட்கார்ந்திருந்து மனுதாரரே (பயங்கரவாதி கசாப்) என்று காடம் நீதி மன்றத்தில் அடையாளம் காட்டினார். வண்டியை ஓட்டி வந்தவன் நல்ல உடற்கட்டும் ஆறடி உயரமும் கொண்டவன் என்றும் விவரித்தார். நல்ல நிறம், சுத்தமாக முக ஷவரம் செய்திருந்தான், நல்ல கறுப்பு முடி, சாம்பல நிற டி-ஷர்ட், நீலநிற கார்கோ ட்ரவுசர் அணிந்திருந்தானென்றும் விரிவாகக் கூறினார்.
133. இந்த ஆடைகளை, ஒரு ஜோடி நீலநிற கார்க்கோ டிரவுசர் (ஆர்டிகிள் 3), சாம்பல் நிற டி-ஷர்ட் ஆகியவையும், இறந்துவிட்ட ஸ்கோடா டிரைவருடையதே என்றும், சம்பவ சமயத்தில் அவன் அணிந்திருந்த ஆடைகள் இவையே என்றும் நீதி மன்றத்தில் அவர் அடையாளம் காட்டினார்.
134. அவர் (காடம்) இறந்து விட்ட போலீஸ் அதிகாரி ஒம்பலேயைச் சுட்டவன் மனுதாரன் (கசாப்) என்றும் அவன் பச்சை நிற கார்கோ டிரவுசர், நீலநிற அரைக்கை டி-ஷர்ட் அணிந்திருந்தான் என்றும் கோர்டில் அடையாளம் காட்டினார். சம்பவ சமயத்தில் அவன் அணிந்திருந்த இதே ஆடைகளை (ஆர்டிகிள் 7) என்றும் அடையாளம் காட்டினார்.


இரண்டு ஏ.கே.47:

135. சம்பவ இடத்தில் இருந்து 4 ஆயுதங்கள், இரண்டு ஏ.கே. 47 ரைபின்ஸ், 2 பிஸ்டல்கள் கைப்பற்றப்பட்டன என்றும் காடம் நீதி மன்றத்தில் கூறினார். இரண்டு (பிஸ்டல்கள்) தெருவிலிருந்து கண்டெடுக்கப்பட்டன. ஒன்று டிரைவர் இருக்கைக்கு வலது புறம் தெருவில் கிடந்தது. மற்றொன்று காருக்கு அருகில் இடது கதவுக்குப் பக்கத்தில் கிடந்தது. ஒரு ஏ.கே.47 ரைபிள் டிரைவர் இருக்கையில் கால் வைக்கும் இடத்தில் இருந்தது. இரண்டாவது காரின் இடது புறம் தெருவில் கிடந்தது. துகாராம் ஓம்பலேயைச் சுடப் பயன்படுத்திய ஏ.கே.47 துப்பாக்கியைத் தன்னால் அடையாளம் காட்ட முடியுமென்றும் அவர் உறுதியுடன் கூறினார்.
136. துகாராம் ஓம்பலேயைச் சுட்ட ஏ.கே 47 (ஆர்டிகிள் 10) துப்பாக்கியை (கசாப் உபயோகித்தது) காடம் நீதிமன்றத்தில் அடையாளம் காட்டினார். ஸ்கோடா காரின் டிரைவர் இருக்கைக்குக் கீழே கால்வைக்கும் இடத்தில் கண்டெடுக்கப்பட்ட இன்னொரு ஏ.கே.47 துப்பாக்கியையும் அவர் அடையாளம் காட்டினார். இதில் ஆர்டிகிள் 10 என்று குறியிடப்பட்டிருந்த ஏ.கே.47ல் ஒரு மாகசின் இருந்த தென்றும், செல்லோ டேப் மூலமாக மற்றொரு மாகசின் இணைக்கப்பட்டிருந்ததென்றும் அவர் கூறினார்.
137. சம்பவ இடத்திலிருந்து கைப்பற்றப்பட்ட பிஸ்டல்களையும் அடையாளம் காட்ட முடியுமென்று கூறிய காடம், ஒரு 9 னை பிஸ்டல், இன்னொரு 9 னை பிஸ்டல் இரண்டையும் அடையாளம் காட்டினார். அவற்றில் தயாரிப்பாளரின் பெயர் டயமண்ட் நேடி ப்ராண்டியர் ஆர்ட்ஸ் கம்பெனி, பெஷாவார் என்ற பெயர் பதிப்பும் இருந்தது. இவையே (ஆர்டிகிள் 14 அன்ட் 16) பஞ்சநாமா மூலம் சம்பவ இடத்தில் இன்ஸ்பெக்டர் சாவந்த் (பி.ட்பிள்யூ.31) கைப்பற்றிய இரண்டு பிஸ்டல்கள்.
138. காடம் இன்னொரு 9னை பிஸ்டலையும் (ஆர்டிகிள் 18) ஒரு காலி மேகசின் (ஆர்டிகிள் 20), 5 உயிருள்ள கார்ட்ரிட்ஜ் (ஆர்டிகிள் 22 மொத்தமாக), 2 புல்லட்டுகள் (ஆர்டிகிள் 23) அடையாளம் காட்டினார். இவை காடம் எடுத்துச் சென்ற அவரது சர்விஸ் பிஸ்டல். இதைக் கொண்டு தான் சம்பவ நேரத்தில் அவர் மூன்று ரவுண்டுகள் சுட்டார்.


கசாப்பை அடையாளம் காட்டினார்

: 139. ஆர்தர் ரோடு சிறையில் 2008 நவம்பர் 27ல் நடைபெற்ற அடையாள அணிவகுப்பில் மனுதாரனை - கசாப் - தான் அடையாளம் காட்டியதாகவும், பின்னர் ஜே.ஜே. மருத்துவமனையில் பிணவறையில் ஜனவரி 6ம் தேதி 2009ல் இறந்துபோன பயங்கரவாதியின் சடலத்தை 7 பிணங்களுக்கு நடுவில் அடையாளம் காட்டியதாகவும் காடம் நீதி மன்றத்தில் கூறினார்.
140. இந்த சம்பவம் (சௌபாத்தி சம்பவம்) 4 நிமிடங்களில் முடிந்து விட்டது, இரவு மணி 0.30 அல்லது 0.35 நிமிடங்களில் முடிந்துவிட்டதென்றும் காடம் நீதிமன்றத்தில் கூறினார்.
141. மனுதாரன் கசாப் மற்றும் இறந்துவிட்ட டிரைவர் (பயங்கரவாதி அபு இஸ்மாயில்) இருவரும் தனித்தனி ஆம்புலன்சில் கொண்டு செல்லப்பட்டனர்.
142. வினோரி சௌபாத்தியில் கசாபை உயிருடன் பிடித்த போலீஸ் குழுவில் இருந்தவர் சஞ்சய் யஷ்வந்த் கோவில்கார். தனது மூத்த அதிகாரி போலீஸ் இன்ஸ்பெக்டர் மாலியின் உத்தரவுப்படி சௌபாத்தி ஐடியல் கபே முன்பு நாகபந்தி நடவடிக்கைக்கு இரவு சுமார் 00.05 நிமிஷங்களுக்கு வந்து சேர்ந்தார். இவரது சாட்சியமும் காடம் கூற்றுக்கு ஏற்பவே இருந்தது. தடைகளுக்கு அருகில் ஸ்கோடா கார் இரவு 00.30 மணிக்கு வந்தது, போலீசாரைக் குழப்புவதற்காக முன் விளக்குகளை அணைக்காமல் முன் கண்ணாடித் துடைப்பான்களை இயக்கியது, வண்டியை யூ திருப்பம் செய்து தப்ப முயற்சித்ததில் தோல்வி ஆகிய விளக்கங்கள் காடம் விளக்கத்துடன் ஒத்திருந்தது. கார் நின்று, சாலைப் பிரிவுச் சுவரில் மோதியதும் அவரும் (கோவில்கார்) துணை சப் இன்ஸ்பெக்டர் துகாராம் ஓம்பலே மற்றும் ஒரு போலீஸ்காரர் காரின் இடது பக்கத்தை நோக்கிச் சென்றனர். இன்ஸ்பெக்டர் பவந்த்கார் (பி.ட்பிள்யூ.3) பாஸ்கட் காடம் (பி.ட்பிள்யூ.1) மற்றும் இன்னொரு போலீஸ்காரர் டிரைவர் பக்கத்தை நோக்கிச் சென்றனர்.


நிராயுதபாணி அதிகாரிகள்:

143. கோவில்கார் ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டராக இருந்த போதிலும், சம்பவ சமயத்தில் அவரிடம் ஆயுதங்கள் இல்லை. சில நாட்கள் முன்புதான் அவர் டிபி சாலை காவல் நிலையப் பணிக்கு வந்திருந்தார். அதற்கு முன்பு இமிக்ரேஷன் இலாக்காவில் இருந்தார். அங்குள்ள அதிகாரிகளுக்கு அதிகார ரீதியாக ஆயுதங்கள் வழங்கப்படுவதில்லை. சம்பவம் நடந்த நாள் வரையிலும் அவருக்கு ஆயுதங்கள் வழங்கப்படவில்லை. துகாராம் ஓம்பலேயிடமும் ஆயுதங்கள் இல்லை. இந்த இருவருமே ஏ.கே.47 துப்பாக்கி பலத்தில் இருந்த வெறிபிடித்த பயங்கரவாதியை நிராயுத பாணியாகவே அணுகினார்கள்.
144. கோவில்கார், துகாரம் ஓம்பலே இருவரும் காரின் இடது முன்பகுதியை அடைந்தவுடன், அங்கு உட்கார்ந்திருந்த பயங்கரவாதி காவைத் திறந்து கொண்டு கையில் ஏ.கே.47 துப்பாக்கியுடன் வெளியில் வந்தான். கோவில்கார் மற்றும் ஓம்பலே இருவரும் அவனது துப்பாக்கியைப் பிடுங்கிவிட முயற்சித்தனர். பயங்கரவாதி சாலையில் விழுந்து விட்டான். ஆனால் கிழே விழுந்தவாறே சுடத் தொடங்கினான். இந்தத் தாக்குதலில் கோவில்கார் மற்றும் ஓம்பலே இருவரும் காயமடைந்தனர். கோவில்கார் இடுப்பில் குண்டுக் காயம் ஏற்பட்டது. இருவரும் ரத்தம் சொட்டச் சொட்ட நின்றனர். உடனே மற்ற போலீசார் அவனை லத்தியால் அடித்தனர். பின்னறே அவன் கட்டுக்குள் வந்தான். அவனது ஏ.கே. 47 பிடுங்கப்பட்டது. அவனைத் தெரு விளக்கு வெளிச்சத்தில் கோவில்கார் நன்றாகப் பார்த்தார். அவனைத்தான்னால் அடையாளம் காட்ட முடியுமென்றும் அவர் கூறினார். அதே போல் ஏ.கே.47 துப்பாக்கியுடன் இன்ஸ்பெக்டர் துகாராம் ஓம்பலேயைச் சுட்ட பயங்கரவாதியை அடையாளம் காட்டினார். அவரிடம் இரண்டு ஏ.கே.47 ரைபின்கள் காட்டப்பட்டன (ஆர்டிகிள் 10 மற்றும் 12) அவன் பயன்படுத்திய சரியான ஏ.கே. 47ஐ அவர் அடையாளம் காட்டி, அதைக் கொண்டே மனுதாரன் - கசாப் - சுட்டதாகவும் தெரிவித்தார்.
145. மனுதாரன் - கசாப் - நீல நிற டி-ஷர்ட் மற்றும் பச்சை நிற கார்கோ டிரௌசர் அணிந்திருந்தான் என்றும் கோவில்கார் நீதி மன்றத்தில் தெரிவித்தார். அவன் க்ரே நிற, விளையாட்டு வகை ஷூ அணிந்திருந்தான். இந்தக் காலணி ஜோடியை அவர் நீதி மன்றத்தில் அடையாளம் காட்டினார்.
146. கோவில்கார், துகாரம் ஓம்பாலே இருவரும் பீடர் மொபைல் வேன் மூலம் ஹர்கிஷன்தாஸ் மருத்துவமனைக்கு எடுத்தச் செல்லப்பட்டனர். ஓம்பலே மருத்துவமனையில் இறந்து விட்டார். கோவில்கார் 2008 நவம்பர் 29ம் தேதிவரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
147. ஆர்தர் ரோடு சிறைச் சாலையில் நடந்த சோதனை அணி வகுப்பில் மனுதாரன் கசாபை 2008 டிசம்பர் 27ம் தேதி அடையாளம் காட்டியதாகவும் கோவில்கார் நீதிமன்றத்தில் தெரிவித்தார். சிறையின் சிறப்புச் செயல் அதிகாரி விசாரே இந்த அணிவகுப்பை நடத்தினார்.
148. மனுதாரன் சார்பில் நடந்த குறுக்கு விசாரணையில், காரில் இருந்து இறங்கிய போது மனுதாரன் வேண்டுமென்றே கீழே விழுந்தான். தனக்குக் காயம் ஏற்பட்ட போதிலும், அவனது துப்பாக்கியைத் தொடர்ந்து பிடித்துக் கொண்டிருந்ததாக கோவில்கார் கூறினார். மேலும் துகாரம் ஓம்பலே அவன்மீது விழுந்து (அழுத்தியதாக) தடுத்ததாகவும் கோவில்கார் கூறினார். அப்போதே அவர் சுடப்பட்டு விட்டார். மேலும் ஏ.கே.47 மனுதாரனுடையதே (ஆர்டிகிள் 10) என்றும் அடையாளம் காட்டிய கோவில்கார் அதில் ஸ்லிம் இல்லை மற்றதில் இருந்ததென்றும் குறுக்கு விசாரணையில் கூறினார்.
149. ஹேமந்த் அனந்த் பவ் தங்கார் இன்னொரு போலீஸ் அதிகாரி (பி.ட்பிள்யூ.3) மூத்த போலீஸ் அதிகாரி மாலியின் உத்தரவின் பேரில் வினோலி சௌபாத்தி நாகபந்தி நடவடிக்கைக்கு வந்தவர். இவர் இந்த இடத்துக்க 26.11.2008 இரவு சுமார் 9.55க்கு வந்து சேர்ந்தார். இவரது விளக்கங்களும் காடம் மற்றும் கோவில்கார் கூறியது போலவே இருந்தது. 27.11.2008 இரவு 00.30 மணியளவில் ஸ்கோடகார் நாகப்நதியைச் சமீபத்தது, யூ திருப்பம் செய்து டிரைவர் தப்பிக்க முயன்றது, சாலை பிரிவுச் சுவற்றில் கார் சிக்கியது. ஆகிய செய்திகள் முன்னவர்களது போலவே இருந்தது. கார் சாலைப் பிரிவுச் சுவற்றில் (டிவைடர்) மோதியபோது தான் அந்தச் சுவர் மீது நின்று கொண்டிருந்ததாகவும் பவ்தங்கார் கூறினார். ஆர்சிசி கான்க்ரீட்டால் கட்டப்பட்டிருந்த சுவரின் உயரம் சுமார் இரண்டரை அடி. காரின் வலது பக்கம் பிரிவுச் சுவற்றின் மீது அவர் நின்று கொண்டிருந்தார். அவரிடமிருந்து 15 அடி தூரத்தில், சாலையின் கிழக்குப் புறத்தில் காடம் நின்றிருந்த இடம். இது தெற்கு நோக்கிச் செல்லும் போக்குவரத்துக்கு உரியது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X