தாழங்குணம்-கீழ்தாங்கல் சாலை சீரமைக்கப்படுமா?| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தாழங்குணம்-கீழ்தாங்கல் சாலை சீரமைக்கப்படுமா?

Added : ஜூன் 12, 2014
Share
அவலூர்பேட்டை: தாழங்குணத்திலிருந்து கீழ்தாங்கல் கிராமத்திற்கு செல்லும் தார் சாலை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.மேல்மலையனூர் ஒன்றியம் தாழங்குணத்திலிருந்து கீழ் தாங்கல் கிராமத்திற்கு செல்லும் 1 கி.மீ., தூரத்திற்கு தார் சாலை உள்ளது. இந்த சாலை வழியாக சென்றால் கீழ்தாங்கல், ஓடை தாங்கல் , களர் பாளையம், காந்தி நகர், கீரந்தப்பட்டு,கோட்டப்பூண்டி, உள்ளிட்ட

அவலூர்பேட்டை: தாழங்குணத்திலிருந்து கீழ்தாங்கல் கிராமத்திற்கு செல்லும் தார் சாலை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.மேல்மலையனூர் ஒன்றியம் தாழங்குணத்திலிருந்து கீழ் தாங்கல் கிராமத்திற்கு செல்லும் 1 கி.மீ., தூரத்திற்கு தார் சாலை உள்ளது. இந்த சாலை வழியாக சென்றால் கீழ்தாங்கல், ஓடை தாங்கல் , களர் பாளையம், காந்தி நகர், கீரந்தப்பட்டு,கோட்டப்பூண்டி, உள்ளிட்ட கிராமங்களுக்கு செல்ல இயலும். இரண்டு ஆண்டுகளாக சாலையில் ஜல்லிகள் பெயர்ந்து குண்டும் குழியுமானது. இதனால் கிராம மக்கள் அருகில் உள்ள ஊர்களுக்கு செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். இரவு நேரத்தில் இந்த சாலையில் பைக்கில் செல்லும் போது விபத்துக்குள்ளாகின்றனர். அந்தளவுக்கு படுமோசமான நிலையில் சாலை உள்ளது. கிராம மக்கள் நலன் கருதி இப்பகுதியில் புதிதாக தார் சாலை அமைத்திட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X