பொது செய்தி

தமிழ்நாடு

பாலியல் வழக்கு விசாரணை: பாத்ரூமில் ஒளிந்த துணை மேயர்

Added : ஜூன் 13, 2014 | கருத்துகள் (15)
Advertisement
பாலியல் வழக்கு விசாரணை: பாத்ரூமில் ஒளிந்த துணை மேயர்

பெண் பாலியல் பலாத்கார வழக்கு தொடர்பாக, திருச்சி மாநகராட்சி துணை மேயர் மரியம் ஆசிக்கிடம், பொன்மலை மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயசுதா, நேற்று விசாரணை மேற்கொண்டார்.திருச்சியை சேர்ந்த துர்க்கேஸ்வரி, 28. சுற்றுச் சூழல் அமைச்சராக இருந்த மரியம் பிச்சையின் மகன் ஆசிக் மீரான், தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக, போலீசில் புகார் தெரிவித்தார். இந்த புகார் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால், துர்க்கேஸ்வரி, முதல்வரின் தனிப் பிரிவுக்கு புகார் அனுப்பினார். அவர் கொடுத்த புகாரை விசாரித்து, நடவடிக்கை எடுக்கும்படி, முதல்வரின் தனிப் பிரிவில் இருந்து, பொன்மலை மகளிர் போலீசாருக்கு உத்தரவிடப்பட்டது. அதனால், நேற்று மதியம், 2:00 மணிக்கு, துர்க்கேஸ்வரி, துணை மேயர் மரியம் ஆசிக் ஆகியோர், பொன்மலை மகளிர் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைக்கப்பட்டனர். இந்த தகவல் அறிந்த, பத்திரிகையாளர்கள், போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்றனர். பத்திரிகையாளர்களை கண்டதும், மரியம் ஆசிக், இன்ஸ்பெக்டர் ஜெயசுதாவுடன், ஸ்டேஷனில் இருந்த பாத்ரூமுக்குள் சென்று ஒளிந்து கொண்டார். தொடர்ந்து, இன்ஸ்பெக்டரின் அறையை மூடிக்கொண்டு, போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணை குறித்து, துர்க்கேஸ்வரி கூறியதாவது: விசாரணை நியாயமாக நடக்கும் என, தெரியவில்லை. ஆசிக் மீரானும், போலீசாரும் சேர்ந்து என்னை மிரட்டுகின்றனர். முதல்வர் தலையிட்டால் மட்டுமே, எனக்கும், என் குழந்தைக்கும் நீதி கிடைக்கும். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Robert - London,யுனைடெட் கிங்டம்
14-ஜூன்-201402:02:19 IST Report Abuse
Robert மரியம் ஆசிக், இன்ஸ்பெக்டர் ஜெயசுதாவுடன், ஸ்டேஷனில் இருந்த பாத்ரூமுக்குள் சென்று .....................மீதிய சொல்லுங்க
Rate this:
Share this comment
Cancel
Sampath Kumar - chennai,இந்தியா
13-ஜூன்-201411:39:58 IST Report Abuse
Sampath Kumar இன்ஸ்பெக்டர் உடன் பாத்ரூமில் ஒளிந்து கொண்டார் அப்போ இன்ஸ்பெக்டர் கதி ??? ஹி ஹி ஹி
Rate this:
Share this comment
Cancel
LAX - Trichy,இந்தியா
13-ஜூன்-201411:30:53 IST Report Abuse
LAX தன்மீது தப்பில்லை என்றால் எதற்கு ஒளிந்துகொள்ளவேண்டும்..? அதிலும், மகளிர் போலீஸ் ஸ்டேஷன் பாத்ரூமுக்குள்.. இன்ஸ்பெக்டர் எதற்கு கூட சேர்ந்துகொண்டு ஒளிய வேண்டும்..? குற்றம் நிரூபிக்கப்பட்டால்தான் ஃபோட்டோவுக்கு சிரிச்சுக்கிட்டே போஸ் குடுப்பாங்கபோல.. ஏற்கனவே பரஞ்சோதி இடம்பெற்றிருக்கும் லிஸ்டில் இப்போது ஆசிக் மீரா.. சி.எம். இதையெல்லாம் கவனத்தில்கொண்டு, து.மேயர் பதவியைப் பறித்து, அடிப்படை உறுப்பினர் பதவி உள்பட அனைத்து பொறுப்பிலிருந்தும் நீக்கி உத்தரவிடவேண்டும்.. (மரியம் பிச்சை அவர்கள் சாலைவிபத்தில் மரணமடைந்ததால், அவரது மகன் என்ற அடிப்படையில்தான், கருணையின் பேரில், இந்த பதவி ஆசிக்குக்கு வழங்கப்பட்டது.. இல்லைனா ஒரு ____ம் இல்லை..)
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X