துயரமான டாக்சி குண்டு வெடிப்பு

Updated : ஜூன் 15, 2014 | Added : ஜூன் 15, 2014
Advertisement
துயரமான டாக்சி குண்டு வெடிப்பு

சரமாரி துப்பாக்கிச்சூடு: 150. பயங்கரவாதிகளை நோக்கிக் கூச்சலிட்டுக் கொண்டே அவர்கள் காரை அணுக முயன்றார்கள். காரின் டிரைவர் உடனே பவந்த்கார், காடம் மற்றும் போலீசாரை நோக்கித் தனது துப்பாக்கியால் சுட்டான். அவனது புல்லட்டுகள் தவறி விட்டதால் பவந்த்கார் காயமடையவில்லை. அதே சமயம் அவர் வடபுறம் செல்லும் போக்குவரத்துப் பகுதியில் இருந்தார். அவர் காரின் பின் கண்ணாடி வழியாக தனது பிஸ்டலில் இருந்து மூன்று முறை சுட்டார். அதே சமயம் காடம் டிரைவரை நோக்கிச் சுட்டார். இதில் டிரைவர் காயமடைந்தான். அவன் உடனே அங்கிருந்த போலீஸ் அதிகாரிகள் பிடியில் சிக்கினார். அதே சமயம் பவ்தங்கார் காரின் இடது முன் கதவுப் பக்கம் சென்றார். அங்கு உட்கார்ந்திருந்தவன் துணை சப் இன்ஸ்பெக்டர் துகாராம் ஓம்பலே, இன்ஸ்பெக்டர் சஞ்சய் கோவில்கார், மற்றும் போலீசார் மீது சுட்டான். கோவில்கார் மற்றும் ஓம்பலே இருவரும் இவனால் சுடப்பட்டுக் காயம் அடைந்தனர். இவர்களோடு இருந்த போலீசார், இவனை ஆயுதமில்லாமல் செய்து பிடித்து விட்டனர். இடது முன் சீட்டில் இருந்தவனைத் தன்னால் அடையாளம் காட்ட முடியுமென்று பவ்தங்கர் கோர்டில் கூறினார். மேலும் அவன் நீதி முன்றத்தில் இருக்கிறான் என்று கூறி அவனை அடையாளமும் காட்டினார். இவனே கோவில்கார், ஓம்பலே இருவரையும் சுட்டவன் என்றும் கூறினார். தெரு விளக்கு வெளிச்சத்தில் இந்தச் சம்பவத்தைத் தன்னால் முழுமையாகப் பார்க்க முடிந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


காரில் இருந்த கையெறி குண்டு:

151. வெடிகுண்டுகளைக் கண்டுபிடித்துச் செயலிழக்கச் செய்யும் பிரிவினர் காரை சோதனை செய்த போது ஒரு கையெறிகுண்டு, ஏ.கே. 47 துப்பாக்கிக்குரிய இரண்டு மாகசின் ஒரு ஜாக்கெட்டுக்குள் பொதிந்து காரின் பின் சீட்டில் இருந்ததைக் கண்டனர். டிரைவர் சீட்டில் கால் வைக்கும் இடத்தில் ஒரு ஏ.கே.47 காணப்பட்டது. பிஓஓஎஸ். பிரிவு சப் இன்ஸ்பெக்டர் கோட்சே கையெறி குண்டை அங்கிருந்து அகற்றிவிட்டு கிர்கான் சௌபாத்தி நோக்கிச் சென்றார். கார் டிரைவர் சீட் கால் வைக்கும் இடத்தில் காணப்பட்ட ஏ.கே. 47, தங்களைத் தாக்கியவன் கையில் இருந்த ஏ.கே. 47 (ஆர்டிகிள் 10 மற்றும் 12) தன்னால் அடையாளம் காட்ட முடியும் என்று பவ்தங்கர் கூறினார். அதன்படியே அவற்றைத் தனித்தனியாக சரியாக அடையாளம் காட்டினார்.
152. பின்னர் காரின் டிரைவரை அவர் வர்ணித்தார். இவன் மாநிலமானவன் - வீடிஷ் காம்ப்ளெக்ஷன். நல்ல உடற்கட்டு. வயது 24-26 இருக்கலாம். உயரம் சுமார் 6 அடி. சாம்பல் நிற அரைக்கை டி-ஷர்ட், நீலநிற கார்கோ டிரௌசர் அணிந்திருந்தான். இவனுடைய சடலத்தை ஜேஜே மருத்துவமனை பிணவறையில் 7 சடலங்களுக்கு இடையே 2009 ஜனவரி 6ம் தேதி அடையாளம் காட்டியதாகவும் தெரிவித்தார். மேலும் ஆர்தர் ரோடு சிறையில் மனுதாரன் கசாபையும் 2008 டிசம்பர் 21 அன்று அடையாளம் காட்டியதாகவும் கூறினார்.
153. கோர்டில் தாக்கல் செய்யப்பட்ட பொருட்களை பவ்தங்கர் அடையாளம் காட்டினார். ஒரு பிஸ்டல், ஒரு மாகசின், 5 நல்ல நிலை கார்ட்ரிட்ஜ், இரண்டு காரியாவை, இரண்டு புல்லட் ஆகியவற்றைக் கொண்டே சம்பவ இடத்தில் தான் உபயோகித்தவை என்றும், அவற்றை, அதற்குரிய ரவுண்டுகளுடன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவந்திடம் (பி.ட்பிள்யூ.31) பின்னர் ஒப்படைத்ததாகவும் பவ்தங்கார் அடையாளம் காட்டினார்.


குறுக்கு விசாரணை

: குறுக்கு விசாரணையில் பவ்தங்கர் கூறியதாவது:
154. அவருடைய புல்லட்டுகள் டிரைவரைத் தாக்கியது. ஆனால் எத்தனை புல்லட்டுகள் தாக்கின என்று அவரால் சொல்ல முடியவில்லை. இன்ஸ்பெக்டர் காடம் சுட்ட புல்லட்டுகளும் டிரைவரைத் தாக்கின. இருவரும் டிரைவரை அவன் சீ"டடிலிருந்து இழுத்தார்கள். புல்லட் காயங்கள் காரணமாக அவன் அப்போது நினைவிழந்து விட்டான்.
இந்த இடத்தில் ஒரு விஷயத்தைத் தெளிவு படுத்தினார் நீதிபதி. காடம் (பி.ட்பிள்யூ.1) கோவில்கார் (பி.ட்பிள்யூ.2) இருவரும் அடையாளம் காட்டிய, டிரைவர் சீட்டில் கால் வைக்கும் பகுதியிலிருந்து மீட்கப் பட்ட ஏ.கே. 47 துப்பாக்கி (ஸ்கோடா காரில் இருந்து மீட்கப்பட்டது) உண்மையில் கொல்லபபட்ட போலீஸ் அதிகாரி அசோக் காம்தேவுக்கு சொந்தமானது. டிரைவர் அபு இஸ்மாயில் சாமர்த்தியமாக அவனது ஏ.கே. 47 துப்பாக்கியை முந்தைய, சேதமாகிவிட்ட, கீவாரிஸ் வண்டியில் விட்டு விட்டு, ஸ்கோடா காருக்கு மாறும்போது அதில் விட்டு விட்டான். போலீஸ் அதிகாரி - கூடுதல் போலீஸ் கமிஷனர் அசோக் காம்தேயின் துப்பாக்கியை இவன் எடுத்து வந்து விட்டான்.
155. அருண் பாலகிருஷ்ணா ஜண்டே (பி.ட்பிள்யூ.7) நைகான் போலீஸ் ஆயுதப் பிரிவில் (போலீஸ் ஆர்மரி) சம்பவ சமயத்தில் பணியில் இருந்தார். இந்தக் குறிப்பிட்ட ஏ.கே. 47, அதற்குரிய மேகசின் (ஆர்டிகிள் 12) கூடுதல் போலீஸ் கமிஷனர் காம்தேவுக்கு 2008, ஆகஸ்டு 4ம் தேதி வழங்கப்பட்டது என்று தனது சாட்சியத்தில் கூறினார். இந்த ஏ.கே. 47ஐ அதன் கைப்பிடி பகுதியில் (பியூடிடி) இருந்த எண் 94, உடல் பாகத்தில் இருந்த எல்ஒய் 8860 எண்ணைக் கொண்டு தனது பதிவேட்டில் குறித்திருந்தபடி அடையாளம் காட்டினார். அதனுடன் இருந்த காலியான மேகசின் மீதும் இதே எண் இருந்தது.


பாகிஸ்தான் துப்பாக்கிகள்:

156. சேதமாகி விட்ட குவாரிஸ் வண்டியில் இருந்த கைப்பற்றிப் பட்ட ஏ.கே.47 மற்றும் மேகசின் (ஆர்டிகிள் 427 - 427) பஞ்சநாமா ஆவணம் (ஈஎக்ஸ்டி 529) அபு இஸ்மாயிலுக்குச் சொந்தமானது. அவன் இவற்றை பாகிஸ்தானில் இருந்து வரும்போதே கொண்டு வந்திருந்தான். சிஎஸ்.டி ரயில் நிலையத்தில் கொல்லப்பட்ட அஷ்ராப் அலி, க்வாலிஸ் போலீஸ் வாகனத்தில் கொல்லப்பட்ட போலீஸ் அதிகாரி அசோக் காம்தே இருவருமே இந்த (பாகிஸ்தானில் இருந்து கொண்டு வரப்பட்டது) ஏ.கே. 47 (ஆர்டிகிள் 427) புல்லட்டுகளினால் தான் கொல்லப்பட்டனர் என்பது பாலிஸ்டிக் ஆய்வு மூலம் தெளிவாகிறது. மனுதாரன் கசாப் மேஜிஸ்ட்ரேடிடம் அளித்த ஒப்புதல் வாக்கு மூலத்திலும், க்வாலிஸ் போலீஸ் வாகனத்தை விட்டு வெளி வந்த போது, மாகசின்கள் காலியாகி விட்டபடியால், தனது துப்பாக்கியை அதில் விட்டு விட்டு, க்வாரிஸ் வண்டியில் இறந்து கிடந்த போலீஸ் அதிகாரியின் துப்பாக்கியை அபு இஸ்மாயில் எடுத்துக் கொண்டான் என்று கூறியுள்ளதும் இந்தத் துப்பாக்கி கைமாறிய விஷயத்தை உறுதிப்படுத்துகிறது.
157. விலி பார்லே குண்டுவெடிப்பு, இருவர் மரணம், மூவர் காயம்: அபு இஸ்மாயில் உடன் இணைந்து கசாப் நேரடியாக நிகழ்த்திய குற்றங்களை விவரித்து முடிப்பதற்கு முன்னால் இன்னொரு நிகழ்ச்சியையும் நினைவு கூற வேண்டும். எம். 01-ஜி-7792 பதிவு எண் கொண்ட ஒரு டாக்சி, 2008, நவம்பர் 26 இரவு சுமார் 10.45 மணிக்கு, குண்டு வெடிப்புக்கு இலக்காகி வெடித்துச் சிதறியது. ஸ்வான் சிடி க்ளப் குருகில், கிழக்கு விலி பார்லே, மேற்கு எக்ஸ்ப்ரஸ் ஹைவேயில் இந்தப் பயங்கர சம்பவம் நடந்துள்ளது. இந்த விபத்தில் டாக்ஸி முழுவதும் நாசமாகி, டிரைவர் மற்றும் அதிலிருந்த பயணி உடனே கொல்லப்பட்டு விட்டனர்.
158. இந்தக் கொடூரக் காட்சியை நேரில் பார்த்தவர் ஷ்யாம் சுந்தர் ராம் பரத் கவுத்ர் (பி.ட்பிள்யூ.171), பால்கிருஷ்ணா ராமச்சந்திர பாரே (பி.ட்பிள்யூ.490) மற்றும் ஷெல்டன் ஆல்மான் (பி.ட்பிள்யூ.491). இந்த குண்டு வெடிப்பின் சவுத்ரி வலது தோளில் ரத்தக் காயம் ஏற்பட்டது. அல்மான் இடது கையில் காயம் ஏற்பட்டது. அல்மான் இடது கையில் காயம் ஏற்பட்டது. சவுத்ரி, பாரே இருவரும் கூபர் மருத்துவமனையிலும், அல்மான் ஹோலி ஸ்பிரிட் மருத்துவமனையிலும் உள் நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டனர்.
159.. இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் டாக்சி டிரைவர் உமர்ஷேக், பயணி லட்சுமி நாராயண் கோயல் இருவராவர்.


யம தூதர்கள்:

160. ஒவ்வொரு நிலையிலும் மூர்க்கத்தனமான, காட்டுமிராண்டித் தனமான கொலைகள் நிகழ்ந்துள்ளன வென்றாலும், அவற்றில் சில, குறிப்பாக இந்த டாக்சி வெடிகுண்டு வெடிப்பு மிகவும் துயரமானது. டாக்சி டிரைவர் தொழில் மூலமான வருமானத்தில்தான் ஷேக் குடும்பம் நடத்தினார். டாக்சியும் அவருக்குச் சொந்தமானதல்ல. கோயல் ஹைதராபாத்தைச் சேர்ந்த ஒரு வழக்கறிஞர். தொழில்நிமித்தமாக மும்பை வந்திருந்தார். பத்வார் பார்க்கில் இருந்து சிஎஸ்டி ஸ்டேஷனுக்குச் செல்ல வந்த இரண்டு யமதூதர்களே இந்த டாக்சியை முதலில் வாடகைக்கு எடுத்தவர்கள். இவர்களின் சூழ்ச்சி டிரைவர் ஷேக்குக்குத் தெரியாது. பின்னர் வந்த வழக்கறிஞர் மும்பையின் ஒவ்வொரு மூலையிலும் மரண ஓலம் ஒலித்தக் கொண்டிருந்த சமயம், ஒரு டாக்சி பிடித்து விரைவில் தனது இடத்துக்குப் போய்விடாலம் என்று நினைத்தார். ஒரே டாக்சியில் இந்த விபரீதம் நடந்து விட்டது.
161. தனது தொழில் ரீதியாக மும்பை வந்த கோயல், அன்று மாலையே 26.11.2008 அன்று சி.எஸ்.டி.யில் இருந்து புறப்படும் ரயில் மூலம் ஹைதராபாத் திரும்ப இருந்தார். ஆனால் சிஎஸ்டியில் அவரால் ரயிலைப் பிடிக்க முடியவில்லை. எனவே, மும்பை - காண்டிவ்லி சார்கோப் என்ற இடத்தில் வசிக்கும் தனது மைத்துனியின் வீட்டுக்குப் போன் செய்தான். தனது போனில் சிஎஸ்டி துப்பாக்கிச் சண்டை விஷயங்களை விவரித்து, சிஎஸ்டியில் ரயிலைத் தவறவிட்டதையும் கூறி, அவரது இல்லத்துக்கு வருவதாகச் சொன்னார். மும்பை நகரில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடப்பதால், லோகல் ட்ரெயின்களில் வர வேண்டாமென்றும், ஒரு டாக்சி பிடித்து வருமாறும் அவரத மைத்துனி யோசனை கூறியுள்ளார். பின்னர் சிஎஸ்டியில் ஒரு டாக்சி பிடித்து விட்டதாகவும், அவர் வீட்டுக்கு வந்து கொண்டிருப்பதாகவும், கோயல் மீண்டும் அவரது மைத்துனிக்குப் போன் செய்துள்ளார்.


கடைசி போன் உரையாடல்:

162. உஷா சரத் சவுத்திரி மிகவும் கவலையோடு, கோயலை மீண்டும் இரவு சுமார் 10.30 மணிக்கு போன் செய்தபோது, தாதர் வந்து விட்டதாகக் கோயல் தெரிவித்தார். கோயலின் மகள் தீட்சா, வாக்லேசுவர் (மும்பையின் மற்றொரு பகுதி) என்ற இடத்தில் வசித்து வருகிறார். இரவு 10.45 மணிக்குத் தந்தையுடன் கடைசியாகப் பேசியுள்ளார். இதுவே தீட்சா-கோயல் கடைசி போன் உரையாடல். பிறகு மீண்டும் மீண்டும் தொடர்பு கொள்ள முயற்சித்ததில் அவருக்கு நாட் ரீசபிள் என்ற பதிலே கிடைத்தது. இறுதியாக அவரது உடலை சிதைந்த நிலையில் கூப்பர் மருத்துவமனையில் இருவரும் பார்த்தனர்.
163. கோயலைத் தனது டாக்சியில் ஏற்றிக் கொண்டு சென்றபோது உமர் ஷேக்குக்கும் அவரது நண்பர் இரிஷாத் அகமது ஷேக் (பிடபிள்யூ 169) இடமிருந்து மொபைல் அழைப்பு வந்தது. அப்போது இரவு சுமார் 10.00 மணி. அதே நாள் நவம்பர் 26, 2008. இர்ஷரத் அவரது டிரைவிங் லைசென்சைஸ் புதுப்பிக்க உமர் இடம் கொடுத்திருந்தார். தனது நண்பரிடம் கொடுத்துள்ள அந்த லைசன்ஸ் தன்னிடம் இன்னும் வரவில்லையென்றும், மும்பை நகரில் அப்போதிருந்த கலவர நிலையில் இரவு டாக்சி ஓட்டவேடண்டாமென்றும் அறிவுரை கூறினார். நிலை இப்படியிருக்க நீ ஏன் காண்டில்லி செல்லவேண்டும் என்று இர்ஷாத் அகமத் தனது நண்பரிடம் திருப்பிக் கேட்டுள்ளார். அந்தப் பயணி மிகவும் சிக்கலான நிலையில் மாட்டிக் கொண்டதாலும், மன்றாடி கேட்டுக் கொண்டதாலும் மறுக்க முடியாது சவாரி செய்து கொண்டிருப்பதாகவும் டிரைவர் உமர் ஷேக் நண்பருக்குப் பதிலளித்துள்ளார். மறுநாள் காலை (நவம்பர் 27, 2008) டி.வி மூலம் தனது நண்பரின் டாக்சி வெடிகுண்டுக்கு விலிபார்லேயில் இரையாகி விட்டதென்று அறிந்த கரோனர் கோர்ட் கூபர் மருத்துவமனையில் அவரது இறந்த உடலை கண்டார்.


கசாப் கொன்றது 72 பேரை:

164. வினோலிக்கு அப்பா: மும்பை பத்வார் பார்க்கில் வந்து இறங்கியதில் இருந்து கசாப், அவனது கூட்டாளி அபு இஸ்மாயில் இருவரும் மும்பை நகரில் மூன்று மணி நேரத்துக்கும் மேலாக நடத்திய பயங்கரவாத நாசவேலைகளை, இறுதியாக வினோலி சௌபாத்தியில் அவர்கள் பிடிபட்டது வரையிலான சம்பவங்களை விரிவாக இது வரை பார்த்தோம். இந்த விவரங்கள் எல்லாம் ப்ராசிக்யூஷன் தரப்பில் கண்ணால் பார்த்த சாட்சியங்கள் மட்டுமே. இந்தச் சாட்சியங்கள் தவிர, இரண்டு பயங்கரவாதிகள் கடந்து வந்த வழியில் கைப்பற்றப்பட்ட பொருட்கள், அவர்கள் நின்ற இடங்கள் இறுதியாகப் பிடிபடும் வரை அவர்கள் பயன்படுத்திய வாகனங்கள், மருத்துவ மற்றும் தடயவியல் அறிக்கைகள், சிசிடிவி பதிவும், தொலைபேசி உரையாடல் பதிவுகள், காவல் நிலைய நாட்குறிப்புகள், போலீஸ் குறிப்புகள் மற்றும் சம்பந்தப்பட்ட பல ஆவணங்களை மிக விரிவாக ப்ராசிக்யூஷன் சமர்ப்பித்துள்ளது. இவை எல்லாவற்றையும் மீண்டும் சரிபார்க்க வேண்டிய அவசியம் இருப்பதாக நாங்கள் கருதவில்லை. ஏனென்றால், மனுதாரன் கசாப் தனியாகவும், கூட்டாளி அபு இஸ்மாயிலுடன் இணைந்தும் குறைந்தபட்சம் 72 கொலைகளைச் செய்துள்ளான், குறைந்த பட்சம் 130 பேரைக் காயப்படுத்தியுள்ளான் என்பதில் எங்களுக்கு எந்த சந்தேகங்களும் இல்லை.
165. விலி பார்லே மற்றும் மாஸ்கான் டாக்சி குண்டு வெடிப்பு தவிர, மேலே குறிப்பிட்ட ஒவ்வொர சாட்சியும் மனுதாரன் கசாப் மற்றும் அவனது கூட்டாளி அபு இஸ்மாயிலுடன் ஜீவ மரணப் போராட்டத்தையே சந்தித்துள்ளனர். இரண்டு பயங்கரவாதிகளின் தோற்றமும், அவர்களது நினைவில் உறுதியாகப் பதிந்து விட்டது. அவர்கள் எல்லோருமே இந்த பயங்கரவாதிகளின் நிறம், வயது, உடற்கட்டு, உயரம், இவர்களில் ஒருவன் குள்ளமானவன், ஒருவன் உயரமானவன் என்று விளக்கமான அடையாளங்களைத் தங்கள் சாட்சியங்களில் பதிவு செய்துள்ளனர். போலி அடையாள அட்டையில் காணப்பட்ட புகைப்படத்திலிருந்து, அபு இஸ்மாயிலையும் இவர்கள் சரியாக அடையாளம் காட்டியுள்ளனர். மேலும் மனுதாரன் கசாபையும் அடையாள அணிவகுப்பில் அடையாளம் காட்டியதாகவும், தெரிவித்துள்ளனர். அவர்களது சாட்சியங்களை நாங்கள் தயக்கமின்றி ஏற்றுக் கொள்கிறோம்.


இறந்தவர்கள் குறித்த விசாரணை தேவையா:

166. தடயவியல் சாட்சியங்களில் இருந்து, இறந்து போன 72 பேரில் குறைந்த பட்சம் 6 பேர், மனுதாரன் கசாப் குண்டுகளால் இறந்துள்ளனர் என்று தெரிகிறது. எனவே, மனுதாரன் கசாப், பல கொலைகளைச் செய்தவன், ஒரு பொதுவான நோக்கத்துடன் தூண்டுதலால் கொலை செய்தவன், பொதுவான நோக்கத்துடன் கொலைகள் செய்ய முயற்சித்தவன், கொலை செய்யவே ஆட்களை கடத்தியவன், சாவைத் தூண்டவோ அல்லது கடுமையான காயங்களை ஏற்படத்துவதற்காக கொள்ளையடித்தவன் மற்றும் சார்புடைய பல குற்றங்களை, இந்தியக் குற்றவியல் சட்டங்களின் கீழும், 1967 சட்ட விரோதச் செயல்கள் (தடுப்பு) சட்டம் 16வது செக்ஷன் 1884 எக்ஸ்ப்ளோசிவ் சட்டம், 1908 எக்ஸ்ப்ளோசிங் சப்ஸ்டன்ஸ் சட்டம் மற்றும் 1908 ஆர்ம்ஸ் சட்டங்களின் படி, குற்றவாளியே என்று தீர்மானிப்பதில் எங்களுக்கு (நீதிபதிகளுக்கு) சிரமம் ஏதும் இல்லை.
167. மனுதாரன் வக்கீல் ராஜு ராமச்சந்திரன் கருத்து பற்றி நீதிபதிகள்: வழக்கை இந்த நிலையில் நிறுத்த வேண்டுமென்பது மனுதாரன் கசாப் வக்கில் ராஜு ராமச்சந்திரனின் ஆசை. மனுதாரன் பற்றிய வழக்கை இறந்துவிட்ட குற்றவாளிகள் வழக்கிலிருந்து தனியாகப் பிரித்துப் பார்க்க வேண்டுமென்று அவர் பெரிதும் வாதாடினார். இந்த மேல் முறையீடு மனுவைப் பொறுத்தவரையில், இறந்துவிட்ட பிறகு குற்றவாளிகளின் குற்றங்களை இந்த நீதிமன்றம் விசாரிக்க வேண்டிய தேவையில்லை, அவர்கள் மனுதாரன் கசாப் மற்றும் அவன் கூட்டாளி அபு இஸ்மாயிலுடன் ஒன்றாகவே வந்தவர்கள் என்றாலும், பின்னர் அவர்கள் தனித்தனியே பிரிந்து விட்டதால், கசாப் சம்பந்தப்பட்ட அளவில் விசாரணை போதும் என்று அவர் வாதாடினார். மனுதாரன் நேரடியாகச் சம்பந்தப்பட் குற்றங்களைக் கொண்டே அவனது நடவடிக்கை, மற்றும் அதற்குரிய தண்டனை தீர்மானிக்கப்பட வேண்டுமென்பது அவரது வாதம். சுருக்கமாகச் சொல்வதானால், கசாப் மற்றும் அவன் கூட்டாளி அபு இஸ்மாயில் இருவரும் பத்வார் பார்க்கில் கரை இறங்கியதில் இருந்து, வினோலி சௌபத்தியில் பிடிபட்டது வரை மட்டுமே இந்த விசாரணையில் இருக்க வேண்டுமென்பதே அவரது வலியுறுத்தல்.


நியாயமற்ற யோசனை:

168. திரு, ராமச்சந்திரனின் இந்த யோசனையைக் கேட்ட மகாராஷ்டிர மாநிலம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் திரு. கோபால் ப்பிரமணியம் அதிர்ச்சியடைந்துவிட்டார். இந்த இடத்தில் வழக்கு விசாரணையை நிறுத்துவது என்பது, ப்ராசிக்யூஷன் வாயைக் கட்டிப் போடுவதாகிவிடுமென்று கோபால் சுப்பிரமணியம் வாதிட்டார். மனுதாரன் கசாப், இறந்து விட்ட அவனது கூட்டாளி அபு இஸ்மாயில் இருவரது செயல்களையும் தனிமைப்படுத்தி விசாரிக்கலாம் என்பது நியாயமாக இருக்க முடியாது. இவர்கள் இருவரும், இவர்களுடன் வந்த மற்ற 8 பயங்கரவாதிகளும் (இறந்துவிட்டவர்கள்) அனைவருமே நன்கு சிந்தித்துத் தக்க திட்டங்களை வகுத்துக் கொண்டு, வெவ்வேறு இலக்குகளைத் தாக்க மும்பை மண்ணில் காலடி எடுத்து வைத்தவர்கள். ஒரு முழுமையான பொதுவான சதித்திட்டத்துடன் வந்தவர்கள், என்று ப்ராசிக்யூஷன் வழக்கறிஞர் விளக்கினார். மேலும் இந்தச் சதித்திட்டம் பற்றிப் ப்ராசிக்யூஷன் தனது சாட்சியங்களை முன்வைக்கும்போது இந்தத் தாக்குதல்களின் முழுப் பரிணாமமும் சக்தியும் தெரிய வரும். இந்த சாட்சியங்களின் மூலம் அடுத்த 5 இடங்களில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல்களின் நோக்கம் தெரிய வரும். இந்தியாவின் ஸ்திரத்தன்மையை உடைத்த, போர் தொடுத்துச் சீரழிக்க வேண்டும் என்று பாகிஸ்தானில் இவர்கள் வகுத்த சதிதிட்டம் முழுமையும் வெளிச்சமாகும். எனவே கசாப், அவனது கூட்டாளி அபு இஸ்மாயில் மற்றும் 8 பேர் ஜோடி ஜோடியாகப் பிரிந்து, இந்தப் பெரிய சதித்திட்டத்தை நிறைவேற்ற வந்தவர்கள். இந்த ஜோடிகள் பத்வார் பார்க்கில் இருந்து, திட்டமிடப்பட்டபடி பிரிந்தவர்கள். இவர்களது திட்டம், நோக்கம், செயல்முறை பொதுவான ஒன்று. இந்திய அரசை நிலைகுலையச் செய்ய வேண்டுமென்பதே இவர்களது சதித்திட்டம்.
இப்படிப் பார்க்கும்போது, இந்தக் குழு வெவ்வேறு இடங்களில் நிகழ்த்திய பயங்கரவாதக் குற்றங்களில், கசாப் உடல் ரீதியாக அங்கு இல்லாமலிருந்தாலும், அந்த நாசவேலைகளில் இவனுக்கும் பங்கு உண்டு.


மக்களுக்கு இழைக்கப்படும் அநீதி

: இந்த உண்மையைப் புறக்கணித்து மனுதாரர் வழக்கறிஞர் திரு. ராமச்சந்திரனின் யோசனையை ஏற்பது ப்ராசிக்யூஷனுக்கு மட்டுமில்லாது, இந்திய மக்களுக்கே இழைக்கப்படும் அநீதியாகிவிடும். சற்றும் எதிர்பாராத திடீர்த் தாக்குதலுக்கு மக்கள் ஆளானார்கள். கஷ்டங்களை அனுபவிக்க நேர்ந்தது. அந்நிய நாட்டில் சதி வகுக்கப்பட்டு, அவ்வப்போது கண்காணிக்கப்பட்டு, நிமிஷத்துக்கு நிமிஷம் வேகமாகி நடக்க அந்நிய மண்ணின் தலைமை வழிகாட்டியுள்ளது, என்று திரு. கோபால் சுப்ரமணியம் விளக்கினார்.
169. ப்ராசிக்யூஷன் வழக்கறிஞர் கோபால் சுப்ரமணியம் தெரிவித்த கருத்துச் சரியானதே என்பது எங்களது (நீதிபதிகள்) கருத்து. மனுதாரர் வக்கீல் ராமச்சந்திரன் தெரிவித்த கருத்து, கசாப், அபு இஸ்மாயில் நிகழ்த்திய தாக்குதல்கள் அவர்களாகவே தனியாக, மற்ற பயங்கரவாதிகளிடமிருந்து பிரிந்து தங்கள் இச்சைப்படி சுதந்திரமாகச் செயல்பட்டார்கள் என்ற எண்ணத்தில் கூறுவதாகும். இவர்கள் வேறு நான்கு இலக்குகளை நோக்கிச் சென்று விட்டார்கள். இவர்கள் ஒரு காற்றடைத்த ரப்பர் படகில் சேர்ந்தே வந்தாலும் 5 ஜோடிகளாகப் பிரிந்து விட்டார்கள். எனவே மற்ற நான்கு ஜோடிகள் தனிமையானவை. மனுதாரன் மற்றும் இஸ்மாயில் குற்றங்களும், மற்றும் 8 பேர் 4 ஜோடிகள் குற்றங்களும் தனித்தனியானை. (இது ராமச்சந்திரன் வாதம்)
இந்த சதித்திட்டத்தின் தன்மை பொதுவாக இருந்தாலும், இந்த 5 ஜோடிகளின் குற்றங்கள் ஒன்றுக்கொன்று இணைந்ததல்ல என்பதும், இவர்கள் ஒரு பொதுவான சதியால் தொடர்புள்ளவர்கள் என்றாலும், தனித்தனியே பிரிந்து விட்டார்கள், என்பதைத் தனது வாதமாக ராமச்சந்திரன் வைத்துள்ளார்.
இந்த அடிப்படை சரியில்லை என்று நாங்கள் கருதுகிறோம். ப்ராசிக்யூஷன் தரப்பு சாட்சியங்கள் பற்றியும் இதுவரை நடந்த விவாதத்தில் இந்த முடிவுக்கே வரவேண்டியுள்ளது. சதித்திட்டத்தைப் பற்றிய விளக்கங்களை அறிந்த பின்னர் இதை ஏற்றுக் கொள்ள முடியாது.
இந்த வழக்கின் பிற கோணங்கள், ப்ராசிக்யூஷன் இதிலுள்ள சதித்திட்டம் பற்றி மேலும் சமர்ப்பித்துள்ள சாட்சியங்கள், மும்பையில் பிற பகுதிகளில் நடந்த பயங்கரவாதிகளின் தாக்குதல், ஆகியவற்றை ஒதுக்கித் தள்ளிவிட்டு, வழக்கைத் தனித்த நிலையில் தொடர்வது தவறாகப் போய்விடும் என்று கருதுகிறோம் (நீதிபதிகள்).
170. பிற இடங்களில் நடைபெற்ற கலவரங்களையும் ஆராய்ந்து வழக்கைத் தொடர்ந்து விவாதிக்க வேண்டும். அதே சமயம், பயங்கரவாத வன்முறை சம்பவங்களை ப்ராசிக்யூஷன் எவ்வாறு சாட்சியங்களைக் கொண்டு சதி விஷயத்தையும், மனுதாரன் மீதான குற்றச் சாட்டுகள் பற்றியும் தருகிறது என்பதையும் ஆழ்ந்து பார்க்க வேண்டும். மேலும் இறந்து விட்ட 8 பயங்கரவாதிகள் குறித்த குற்றங்கள், அதற்கான சாட்சியங்கள் பற்றி நாங்க விவாதிக்கப் போவதில்லை. கரணம் அவர்கள் விசாரணைக்கு உயிருடன் இல்லை, இறந்து விட்டார்கள்.


கரை இறங்கிய பின்:

171. மும்பை கடற்கரையில் பதிவார் பார்க் என்ற இடத்தில் கரை இறங்கிய பின்னர் மனுதாரனும், இந்தக் குழுவின் தலைவனான் அபு இஸ்மாயில் (இறந்த குற்றவாளி1) இருவரும் ஒரு டாக்சி பிடித்துக் கொண்டு சிஎஸ்டி ஸ்டேஷனுக்குச் சென்றனர். ரயில் நிலையத்தில் எவ்வளவு பேரைக் கொல்ல முடியுமோ கொன்று குவித்தார்கள். பின்னர் நடைபாதைப் பாலத்தின் வழியாக பத்ருதீன் தாயாப்ஜி சாலையை அடைந்தனர். காமா மருத்துவமனை ஆறாவது தளத்தில் தங்களை நிறுத்த போலீஸ் எடுத்த முயற்சிகளை வெற்றிகரமாகத் தாண்டிச் சென்றார்கள். மருத்துவமனையின் முன்வாசல், ரங் பவன் சந்து அருகே பத்ருதீன் தாயாப்ஜி சாலை ஆகிய ஒவ்வொரு இடத்திலும் இரண்டு பயங்கரவாதிகள் சாமர்த்தியமாகத் தாண்டிச் சென்றனர். வழியில் 3 மூத்த போலீஸ் அதிகாரிகள் உட்பட பலரைச் சுட்டுக் கொன்றனர். இந்தப் பயங்கரவாதிகளைத் தடுக்க, பிடிக்க வ்நத போலீசாரின் க்வாலிஸ் வண்டியைக் கைப்பற்றிக் கொண்டார்கள். ஆனால் துப்பாக்கிச் சூட்டில் (போலீஸ்) க்வாலிஸ் வண்டியின் ஒரு சக்கரம் முற்றிலும் பழுதாகிவிட்டதால், அவர்களால் வெகுதூரம் செல்ல முடியவில்லை. அவர்கள் அடுத்து ஒரு ஸ்கோடா வண்டியை நிறுத்தி, உள்ளிருந்த பயணிகளைத் துப்பாக்கி முனையில், மிரட்டி, அதைக் கைப்பற்றினார்கள். அதில் மேரின் ட்ரைவ் பாதை வழியாகச் சென்றனர். இறுதியில் வினோலி சௌபாத்தியில் பிடிபட்டனர்.


கவர்னர் இல்லம் நோக்கி:

172. இவர்கள் - பயங்கரவாதிகள் - பயணம் செய்த வழி மலபார் ஹில்ஸ் பகுதிக்கு இட்டுச் செல்வதாகும். இவர்களும் இந்த வழியில் தான் காரைச் செலுத்தினார்கள். உரியவர்களிடமிருந்து ஸ்கோடா வண்டியைக் கைப்பற்றி, அதில் உட்கார்ந்தவுடன், மனுதாரன் கசாப், அபு இஸ்மாயிலிடம் எங்கே போக வேண்டுமென்று கேட்க, மலபார் ஹில்ஸ்-ஐச் சேர்ந்த பின்னர் குறிப்பிட்ட இடத்தைச் சொல்வதாக அபு இஸ்மாயில் கூறியதாகவும் கசாப் மாஜிஸ்ட்ரேடிடம் அளித்த வாக்கு மூலத்தில் தெரிவித்துள்ளான். எனவே மலபார் ஹில்ஸை அடைந்த பின்னர், அவர்கள் எங்கே செல்ல நினைத்தார்கள் அல்லது அவர்களது இலக்கு எது அல்லது யார் என்பது விளக்கமாகத் தெரியவில்லை. ஆனால் மகாராஷ்டிரா முதலமைச்சர், மாநில ஆளுநர், மும்பை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி ஆகியோர் இங்கு தான் வசிக்கிறார்கள் என்பது நினைவில் கொள்ளத்தக்க ஒரு உண்மை. இந்த வெறியர்களின் இலக்கு இவர்களில் ஒருவராக இருக்கக் கூடும் என்பதும் சாத்தியமானது என்று கருதலாம்.
173. மனுதாரன் கசாப், இஸ்மாயிலை தொடர்ந்து நசீர் அகமது - அபு உமேர் (இறந்த குற்றவாளி 4), ஹோயப் அபுஸோ ஹெப் (இறந்து விட்ட குற்றவாளி 9) ஜோடிகள் ஒரு டாக்சி பிடித்துக் கொண்டு பத்வார் பார்க்கில் இருந்து லியோபோல்ட் சென்றார்கள். அப்துல் ரகுமான் ஹாஜாஸி (இறந்த குற்றவாளி 5), ஜாவேத் அபு - அபு அலி ஜோடி (இறந்த குற்றவாளி 8) டாக்சி மூலம் டாஜ் ஹோட்டல் சென்றனர். அவர்களை அடுத்து இம்ரான் பாபர் - அபு அக்ஸா (இறந்த குற்றவாளி 2). நசீர் - அபு அக்ஸா (இறந்த குற்றவாளி 3) ஆகியோர் கால் நடையாக நரிமான் ஹவுஸ் என்ற இடத்தை அடைந்தனர். இந்த 8 பேரும் சென்ற பின்னர், மீதமிருந்த இருவர் பகதுல்லா (இறந்த குற்றவாளி 7) - அப்துல் ரகுமான் சோட்டா - ஸாகிப் (இறந்துவிட்ட குற்றவாளி 6) இருவரும் ரப்பர் படகை நரிமான் பாயின்ட் நோக்கிச் செலுத்தி அங்கிருந்து ஒபிராய் ஹோட்டலுக்கு நடந்து சென்றனர்.


இறந்தவர்களும் காயம் அடைந்தவர்களும்:

174. இறந்து விட்ட இந்த ஒன்பது குற்றவாளிகளை, மனுதாரன் கசாப் அவர்களது இறந்து உடல் புகைப்படங்களில் இருந்து அடையாளம் காட்டியதைக் கொண்டும், அவர்களது பெயர்களைக் கொண்ட மட்டுமே அறியமுடிகிறது. பின்னர் அவர்களது பெயர்கள், அவர்களது பொறுப்புகள் பற்றியும் மாஜிஸ்ட்ரேடிடம் தனது ஒப்புதல் வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளான்.
சுனில் ராஜாராம் ஜாதவ் (பி.டபிள்யூ 224) மற்றும் நிவ்ருதி காராம் காடம் (பி.டபிள்யூ 242) சாட்சியங்களில் இருந்து தாஜ் ஹோட்டலைத் தாக்கிய 4 பயங்கரவாதிகள், அபு ஸோஹெப், ஓமேர், ரஹிமான் மற்றும் அபு அலி என்று தெரிய வருகிறது.
ஓபிராய் மற்றும் நரிமான் ஹவுஸ் தாக்குதலுக்குச் சென்ற பயங்கரவாதிகளின் பெயர்கள், அவர்கள் தங்களது மற்றத் தோழர்களுடன் (கொலாபரேடர்ஸ்) தொலைபேசியில் பேசியதை இடைமறித்துக் கேட்ட பதிவுகளில் இருந்து தெரிய வருகிறது. இந்த விஷயத்தைத் தக்க இடத்தில் பின்னர் கவனிக்கலாம்.
லியோபோல்ட-ல், 11 பேர் இறந்தனர், 28 பேர் காயமடைந்தனர். மெஸகான் வெடிப்புகளில் 3 பேர் இறந்தனர், 19 பேர் காயமடைந்தனர்.
175. நசீர் (இறந்துவிட்ட குற்றவாளி 4) மற்றும் ஹோயப் (இறந்துவிட்ட குற்றவாளி 9) இருவரும் லியோபோல்டில் கைக்குண்டு மற்றும் ஏ.கே. 47 துப்பாக்கிச் சூட்டை நிகழ்த்தி விட்டுச் சில நிமிடங்களில் சென்று விட்டனர். இரண்டு அயல் நாட்டினர் உட்பட 11 பேர் இத்தாக்குதலில் இறந்தனர். 9 அயல்நாட்டினர் உட்பட 28 பேர் காயமடைந்தனர். பின்னர் சுமார் 100 மீட்டர் தூரத்தில் உள்ள ஹோட்டல் தாஜ்-க்கு நடந்து சென்றார்கள். அங்கு அப்துல் ரகுமான் பாடா, ஜாவேத் இருவருடனும் சேர்ந்து கொண்டனர். இந்த பத்வார் பார்க்கில் இருந்து நேரடியாகவே டாக்சி மூலம் இந்த ஓட்டலுக்குச் சென்றவர்கள்.
176. நசீர், ஹோயப் இருவரும் இரண்டு ஆர்டிஎக்ஸ் வெடிகுண்டுகளை வைத்திருந்தனர். பத்வார் பார்க்கில் இருந்து லியோபோர்ட் ஓட்டலுக்கு இவர்கள் சென்ற டாக்சியில் ஒன்றை வைத்தனர். இரவு சுமார் 10.30 மணிக்கு இந்த டாக்சி மும்பை மஸாகான் பகுதியில் வாடி பந்தர் சாலையில் டிரைவர் பூல்சந்திரா ராமச்சந்திரபிங், அதில் இருந்த பயணிகள் ஜரினா ஷம்சுதீன் ஷேக், அவரது மகள் ரீமா முகமது ரெய்பூல் ஷேக் ஆகிய மூவரும் இந்த விபத்தில் கொல்லப்பட்டனர். இவர்கள் முகமது ஷேக் (பி.டபிள்யூ 176) என்பவரின் மாமியார் மற்றும் மனைவி ஆவார்கள். இந்த விபத்தில் சாலையில் இருந்த 19 பேர்கள் காயமடைந்தனர்.
177. இன்னொரு ஆர்டிஎக்ஸ் வெடிகுண்டை இவர்கள் லியோ போல்ட் ஹோட்டலில் இருந்து தாஜ் ஹோட்டல் செல்லும் வழியில், இந்த ஹோட்டலுக்குப் பின்புறமுள்ள கோகுல் ஒயின் ஷாப் சந்தில், கோகுல் உணவகத்துக்கு அருகில், ஸ்டேட் பேங்க் ஆப் ஹைதராபாத் முன்பு வைத்தனர். ஆனால் இந்த குண்டு வெடிக்கவில்லை. இறுதியாக அது கைப்பற்றப்பட்டது. (ஈஎக்ஸ்டி 736)


ஓட்டல் தாஜ்-ல் வெடிகுண்டுகள்:

ஹோட்டல் தாஜ்-இல் இறந்தவர்கள் 36, காயமடைந்தவர்கள் 30.
178. அப்துல் ரகுமான் பாதா (இறந்துவிட்ட பயங்கரவாதி 5) மற்றும் ஜாவேத் (இறந்த பயங்கரவாதி 8) இருவரும் தாஜ் ஹோட்டலை அடைந்து, புதிய டாஜ் ஹோட்டலுக்கு 50 மீட்டர் தொலைவில் உள்ள ஒரு மரத்தடியில் ஆர்டிஎக்ஸ் வெடிகுண்டை வைத்தனர். இதுவும் வெடிக்கவில்லை. இதுவும் பஞ்சநாமா ஆவண விளக்கத்துடன் (ஈஎக்ஸ்டி 736) கைப்பற்றிப்பட்டது. பின்னர் ஹோட்டலின் வரவேற்புப் பகுதியில் நுழைந்து தங்களது ஏகே 47 மூலம் சரமாரியாகச் சுட்டார்கள். பெரிய பீதியை ஏற்படுத்தி, வளைவுப் படிகளின் மீதேறி மேல் தளங்களுக்குச் சென்றார்கள். 5வது தளத்தில், இரண்டாவது வெடிகுண்டை, கடுமையான பாதிப்பு ஏற்படும் வகையில் ஹோட்டலின் மைய கோபுரம் கீழே வைத்தனர். அங்கிருந்து 6-வது தளத்துக்குச் சென்று குத்தாலம் ராஜகோபாலன் ராமமூர்த்தி என்பவரைச் சிறைப்படுத்தினார்கள். இவர் ஐஎன்ஜி வைசியா பேங்க் நான் - எக்ஸிக்யூடிவ் சேர்மேன். சார்புக் கம்பெனி ஒன்றின் போர்டு கூட்டத்துக்காக இவர் மும்பை வந்திருந்தார். தாஜ் ஹோட்டல் 6வது தளத்தில் 632 எண் அறையில் தங்கியிருந்தார். இவர் பிராசிக்யூஷன் தரப்பு சாட்சி எண் 184.


பணயக் கைதிகள்:

179. அப்துல் ரகுமான் பாதா மற்றும் அவனது கூட்டாளி ஜாவேத் இருவரும் நான்கு ஹோட்டல் ஊழியர்களை அடில் ரோஹின்டன் (பி.டபிள்யூ 188), சுனில் ஜாதவ் (பி.டபிள்யூ 224), ராஜேந்திர பகாடே மற்றும் ஸ்வப்னில் பணயக் கைதிகளாகச் சிறைப்படுத்தினர். அப்துல் ரகுமான் பாதா மற்றும் ஜாவேத் இருவரும் அறை எண் 632ல் இருந்தபோது லியோபோல் ஹோட்டலில் இருந்து வந்த நசீர் மற்றும் ஹோயப் இவர்களுடன் சேர்ந்து கொண்டனர். 2008 நவம்பர் 27 அன்று (நள்ளிரவு) 2.15 ஏ.எம். அளவில் இந்த பயங்கரவாதிகள் 5-வது தளத்க்கு வந்தனர். தங்களது பணயக் கைதிகள் 5 பேரையும் கைகளைப் பின்புறமாக முதுகுடன் சேர்த்துக் கட்டிக் கொண்டு வந்தனர். அறை எண் 520க்குள் இவர்கள் சென்றனர். அந்த சமயம் அடிலாவின் மனைவி அவரது மொபைலில் கூப்பிட்டார். பயங்கரவாதிகள் ஊழியர்களைப் பிடித்தபோதே அவர்களது மொபைலையும் பிடுங்கிவிட்டனர். அடில் மனைவியுடன் பேச முடியவில்லை. பயங்கரவாதிகள் அவளுடன் பேசினார்கள். பாதுகாப்புப் படைகள் வருவதை அந்தப் பெண்மணி - அடில் ரோஹின்டன் மனைவி தடுக்க வேண்டும், இல்லாவிட்டால் அவர் கணவர் கொல்லப்படுவார், பெரிய நாசம் ஏற்படுமென்றும் மிரட்டினார்கள்.


ஓட்டலுக்கு தீ வைக்க உத்தரவு:

இந்த அறையில் தங்கியிருந்தபோது, பயங்கரவாதிகள் அவர்களது ஆட்களுடனும் (கொலாபரேஷன்ஸ்) பிறருடன் நீண்ட நேரம் மொபைலில் பேசிக் கொண்டிருந்தனர். இந்த ஆட்கள் (ஹன்டிலர்ஸ்) கைக்குண்டுகளைப் பயன்படுத்தி ஓட்டலுக்கு தீ வைத்து விடுமாறு மீண்டும் வலியுறுத்தினார்கள். பயங்கரவாதிகள் எளிதில் தீப்பிடிக்கக் கூடிய ஸோபா, ஃபோம் ரப்பர் மெத்தைகள், திரைச்சீலைகள், பெட்ஷீட் கியவற்றுக்குத் தீ வைக்க முயன்ற சமயத்தில், ஹோட்டல் கட்டிடத்தின் ஒரு இடத்தில் பயங்கரமான குண்டு வெடித்து கரும்புகை இவர்கள் அறையிலும் சூழ்ந்தது. அறைக்குள் மூச்சு விடுவது சிரமமாயிற்று பயங்கரவாதிகள் அறையை விட்டு வெளியே வந்தனர். இந்தக் குழப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு ஹோட்டல் ஊழியர்கள் திரைச்சீலை மற்றும் பெட்ஷீட்டுகளை இணைத்துக் கயிறாக ஆக்கி ஜன்னல் வழியாகத் தப்பிக் முடிந்தது. ராமமூர்த்தியால் இந்தக் கயிறு மூலம் இறங்க முடியவில்லை. அவரும் ஒரு ஜன்னலருகே தப்பி வந்து விட்டார். இறுதியாகத் தீயணைப்புப் படையினர் அவரைக் காப்பாற்றி விட்டனர்.
பணயக் கைதிகளை இழந்த விட்டு பயங்கரவாதிகள் ஹோட்டலுக்குள் தங்கி, தக்க இடங்களைத் தேர்ந்தெடுத்து பாதுகாப்புப் படையோடு நீண்ட சண்டைக்குத் தயாரானார்கள். ஹோட்டலுக்குத் தீ வைக்கும் முயற்சியையும் தொடர்ந்தார்கள். எப்படியாவது ஹோட்டலை அழித்து விட வேண்டுமென்ற வெறியில் இருந்தனர். பாதுகாப்புப் படையினருக்குக் கடுமையான சவாலாக இருந்தனர். இறுதியாக 29.11.2008 காலையில் பாதுகாப்புப் படையினரால் நான்கு பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர். கடைசியாக தாஜ் ஹோட்டலில் கொல்லப்பட்ட பயங்கரவாதி அப்துல் ரகுமான் பாதா. நாள் 2008 நவம்பர் 29 காலை 9.00 மணி.
தாஜ் ஹோட்டல் தாக்குதலில் நான்கு பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டவர்கள் ஒன்பது அயல் நாட்டினர் உட்பட மொத்தம் 36 காயமடைந்தவர்கள் 5 அயல்நாட்டினர் உட்பட மொத்தம் 30.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X