பொது செய்தி

தமிழ்நாடு

போக்குவரத்து பணிமனைக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்

Added : நவ 11, 2018
Advertisement
 போக்குவரத்து பணிமனைக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்

கடலுார்:டெங்கு கொசுவைக் கட்டுப்படுத்தாத, கடலுார் அரசு போக்குவரத்துக்கழக பணிமனைக்கு, 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து கலெக்டர் உத்தரவிட்டார்.
கடலுார் மாவட்டத்தில், டெங்கு கொசுவை ஒழிக்க கலெக்டர் அன்புச்செல்வன் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார். அரசு அலுவலகங்கள், வீடுகள், பள்ளி, கல்லுாரிகள் என, அனைத்து பகுதிகளுக்கும் சென்று ஆய்வு நடத்தி வருகிறார்.நேற்று காலை கலெக்டர் கடலுார் அரசு போக்குவரத்துக்கழக பணிமனைக்குச் சென்று, அங்கிருந்த குடிநீர் தொட்டி, கழிப்பறை ஆகியவற்றை ஆய்வு செய்து சுத்தமாகவும், தண்ணீர் தேங்காமலும் வைத்துக் கொள்ள அறிவுறுத்தினார்.
பணிமனையில் பொருட்கள் ஆங்காங்கே கிடப்பதை பார்த்து, டெங்கு கொசு உற்பத்தியை தடுக்க எவ்வித முயற்சியும் மேற்கொள்ளவில்லை என,அதிருப்தி அடைந்தார்.மேலும், கொசு உற்பத்திக்கு காரணமான பொருட்களும், அதில் தண்ணீர் தேங்கி கொசுப் புழு உற்பத்தியாகும் நிலை இருந்தது.அதையொட்டி டெங்கு கொசு உற்பத்தியை ஒழிக்க, பராமரிக்க தவறியதற்காக அரசு போக்குவரத்துக்கழக பணிமனைக்கு, 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X